Posts

Showing posts from January, 2023

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

Image
  சுலோகங்கள்: சுலோகம் 1: கஸ்த்வம்ʼ ப்³ரூஹி த³யஸ்வ மே(அ)திபலித꞉ கஸ்தே பிதா காமஜித் ஸம்ப்ராப்தோ(அ)ஸி குதோ(அ)சலாத் கிமு ப²லம்ʼ முக்²யம்ʼ ப்ரியாலோகனம் | தன்மே(அ)த்³யைஹி ஸஹாயதாம்ʼ து³ஹிதுரித்யுக்த்வா புலிந்தே³ க³தே வல்லீ-ஷண்முக²யோர்ப⁴வந்து ப⁴வதாம்ʼ ப⁴த்³ரப்ரதா³꞉ கேலய꞉ || சுலோகம் 1 - பதம்பிரித்து  கஸ்த்வம்ʼ ப்³ரூஹி? த³யஸ்வ மே, அதிபலித꞉ ! கஸ்தே பிதா? காமஜித் ! ஸம்ப்ராப்தோ(அ)ஸி குத꞉? அசலாத் ! கிமு ப²லம்ʼ முக்²யம்ʼ? ப்ரியாலோகனம் ! `தன்மே அத்³ய ஏஹி ஸஹாயதாம்ʼ து³ஹிது꞉’ இத்யுக்த்வா புலிந்தே³ க³தே வல்லீ-ஷண்முக²யோ꞉ ப⁴வந்து ப⁴வதாம்ʼ ப⁴த்³ரப்ரதா³꞉ கேலய꞉ . விளக்கமும் குறிப்புகளும் : வள்ளியின் தந்தைக்கும் , விருத்தர் வடிவில் வந்த முருகனுக்கும் நடக்கும் உரையாடலே முதலிரு வரிகள். “நீங்கள்  யார் என்று சொல்லவேண்டும் “, “என்னிடம் கருணை கொள்ளுங்கள், நான் முற்றும் நரைத்த கிழவன்.”,  “உங்கள் தந்தை யார் ?”, “காமனை வென்றவர்.” “எங்கிருந்து வருகிறீர்கள் ?” , “(அந்த) மலையிலிருந்து.”, “வந்ததன் முக்கிய நோக்கமென்ன? “பிரியமானவர்களைப் பார்ப்பது.”. “சரி, என் மகளுக்கு துணையாக வந்திருங்கள்” என்று கூறி, வேடர் (மன்னன்) சென்ற பி