Posts

Showing posts from April, 2023

அஷ்டபதீ³ - 4 மூலமும் பொருளும்

Image
சுலோகங்கள்   சுலோகம் 1: ஸ்வஸேவனாயாத-ஸுபர்வ-யௌவத- ப்ரஸாத⁴நாப்⁴யர்ஹித-ராமணீயகம் . குமார-மாராம-க³தம்ʼ ஸ்மரந்த்யஸௌ ஸகீ² ப³பா⁴ஷே புனரேவ வல்லிகாம் ..  சுலோகம் 1 - பதம்பிரித்து  ஸ்வஸேவன ஆயாத-ஸுபர்வ-யௌவத- ப்ரஸாத⁴ந  அப்⁴யர்ஹித-ராமணீயகம் . குமாரம் ஆராம-க³தம்ʼ ஸ்மரந்தீ அஸௌ ஸகீ² ப³பா⁴ஷே புனரேவ வல்லிகாம் ..  விளக்கமும் குறிப்புகளும்  : தனக்கு சேவை செய்ய வந்துள்ள தேவமகளிரின் அலங்காரத்துக்குத் தக்க அழகுடையவனாக, பூந்தோட்டத்தில் அமர்ந்திருந்த  குமாரனை நினைத்துக்கொண்டு, தோழி மேலும் வள்ளியிடம் கூறினாள்  இது வம்ʼஶ-ஸ்த²விலம் என்ற,  வரிக்கு 12 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- நடனமாடும் அப்சரப்பெண்களின் சிற்பங்கள் - பேலூர் அஷ்டபதீ³ - 4 (ராமக்ரியா ராக³ம், ஆதி³ தாளம்) குண்ட³ல-மண்டி³த-க³ண்ட³-தலாஞ்சித-ஷண்முக²-பங்கஜ-ஶாலீ . ஸாந்த்⁴ய-பயோத³-தடித்³-ப்⁴ரமதா³யி-க்ரோட³க-நவமணி-மாலீ .. 1.. (பதப்பிரிவு தேவையில்லை) விளக்கம்  : குண்டலங்களால் அணிசெய்யப்பெற்ற கன்னங்களால் அழகாக விளங்கும் ஆறு முகத் தாம

அஷ்டபதீ³ - 3 - மூலமும் பொருளும்

Image
சுலோகங்கள் சுலோகம் 1 வனே வல்லீம்ʼ பி⁴ல்லீம்ʼ விகச-நவமல்லீ-ம்ருʼது³-தனும்ʼ முஹுர்னத்வா ஸ்ம்ருʼத்வா கு³ஹ-கு³ண-மருத்³த்⁴வா த்⁴ருʼதி-லவம் | ஸ்மராதீ⁴னாம்ʼ தீ³னாம்ʼ ஜ்வர-மஸஹமானாம்ʼ விரஹஜம்ʼ ஸகீ² வாணீ-மேணீ-ஶிஶு-த்³ருʼஶ-மபா⁴ணீத் ஸுதி⁴ஷணா || சுலோகம் 1 - பதம்பிரித்து  வனே வல்லீம்ʼ பி⁴ல்லீம்ʼ விகச-நவமல்லீ-ம்ருʼது³-தனும்ʼ முஹுர்னத்வா ஸ்ம்ருʼத்வா கு³ஹ-கு³ண ம் அ ருத்³த்⁴வா த்⁴ருʼதி-லவம் ஸ்மராதீ⁴னாம்ʼ தீ³னாம்ʼ ஜ்வர ம் அ ஸஹமானாம்ʼ விரஹஜம்ʼ ஸகீ² வாணீ-மேணீ-ஶிஶு-த்³ருʼஶ ம் அ பா⁴ணீத் ஸுதி⁴ஷணா விளக்கமும் குறிப்புகளும்  காட்டில் , மலர்ந்த புது மல்லிகை போன்ற மென்னுடல் கொண்ட, மான்கன்று போன்ற விழிகளை உடைய  வள்ளியை பலமுறை வணங்கி , குகனின் குணங்களை நினைத்து, தைர்ய இழப்பை தடுக்க முடியாமல்,  மதன் வசமாகி வருந்தி, விரஹத்தால் உண்டான ஜ்வரத்தை தாங்க முடியாதவளாக இருந்த அவளிடம் , நல்லறிவு உள்ள அவள் தோழி பேசினாள்.   இது சிகரிணீ எ ன்ற,  வரிக்கு  17 அட்சரம் கொண்ட சந்தத்தில் அமைந்துள்ளது சுலோகம் 2 தவ ஶ்ராந்த்யா꞉ ஶாந்த்யை ப்ரியஸகி² நிஶா-ஜாக³ர-பரி- ஶ்ரமாத் பத்³மோஶீராத்³யுபஹரண-ஜாதாத³பி முஹு꞉ | ப்ரபு³த்³தா⁴ நித்³ராயா꞉ ஸ்வயமுபனதா