அஷ்டபதீ³ - 3 - மூலமும் பொருளும்



சுலோகங்கள்

சுலோகம் 1

வனே வல்லீம்ʼ பி⁴ல்லீம்ʼ விகச-நவமல்லீ-ம்ருʼது³-தனும்ʼ

முஹுர்னத்வா ஸ்ம்ருʼத்வா கு³ஹ-கு³ண-மருத்³த்⁴வா த்⁴ருʼதி-லவம் |

ஸ்மராதீ⁴னாம்ʼ தீ³னாம்ʼ ஜ்வர-மஸஹமானாம்ʼ விரஹஜம்ʼ

ஸகீ² வாணீ-மேணீ-ஶிஶு-த்³ருʼஶ-மபா⁴ணீத் ஸுதி⁴ஷணா ||


சுலோகம் 1 - பதம்பிரித்து 

வனே வல்லீம்ʼ பி⁴ல்லீம்ʼ விகச-நவமல்லீ-ம்ருʼது³-தனும்ʼ

முஹுர்னத்வா ஸ்ம்ருʼத்வா கு³ஹ-கு³ணம் அருத்³த்⁴வா த்⁴ருʼதி-லவம்

ஸ்மராதீ⁴னாம்ʼ தீ³னாம்ʼ ஜ்வரம் அஸஹமானாம்ʼ விரஹஜம்ʼ

ஸகீ² வாணீ-மேணீ-ஶிஶு-த்³ருʼஶம் அபா⁴ணீத் ஸுதி⁴ஷணா


விளக்கமும் குறிப்புகளும் 

காட்டில் , மலர்ந்த புது மல்லிகை போன்ற மென்னுடல் கொண்ட, மான்கன்று போன்ற விழிகளை உடைய  வள்ளியை பலமுறை வணங்கி , குகனின் குணங்களை நினைத்து, தைர்ய இழப்பை தடுக்க முடியாமல்,  மதன் வசமாகி வருந்தி, விரஹத்தால் உண்டான ஜ்வரத்தை தாங்க முடியாதவளாக இருந்த அவளிடம் , நல்லறிவு உள்ள அவள் தோழி பேசினாள்.  

  • இது சிகரிணீ என்ற,  வரிக்கு  17 அட்சரம் கொண்ட சந்தத்தில் அமைந்துள்ளது


சுலோகம் 2

தவ ஶ்ராந்த்யா꞉ ஶாந்த்யை ப்ரியஸகி² நிஶா-ஜாக³ர-பரி-

ஶ்ரமாத் பத்³மோஶீராத்³யுபஹரண-ஜாதாத³பி முஹு꞉ |

ப்ரபு³த்³தா⁴ நித்³ராயா꞉ ஸ்வயமுபனதாயா அஹமஹோ

ப்³ருவே ஸ்வப்னோத³ந்தம்ʼ ஶ்ருணு ஸமவதே⁴ஹி த்யஜ ஶுசம் ||


சுலோகம் 2 - பதம்பிரித்து

தவ ஶ்ராந்த்யா꞉ ஶாந்த்யை ப்ரியஸகி² நிஶா-ஜாக³ர-பரி-

ஶ்ரமாத் பத்³ம ஶீராதி³ உபஹரண-ஜாதாத் பி முஹு꞉ .

ப்ரபு³த்³தா⁴ நித்³ராயா꞉ ஸ்வயம் பனதாயா அஹமஹோ

ப்³ருவே ஸ்வப்னோத³ந்தம்ʼ ஶ்ருணு ஸமவதே⁴ஹி த்யஜ ஶுசம் 


விளக்கமும் குறிப்புகளும் 

"பிரிய சகியே ! இரவில் விழித்திருந்ததாலும் , தாமரை, வெட்டிவேர் முதலியவற்றாலும் உண்டான உன் சோர்வு தணிவதற்காக , தானாக வந்த தூக்கம் நீங்கி எழுந்த நான் , என் கனவை சொல்கிறேன். கவனமாக கேட்டு, வருந்துவதை விடு. " 

  • இது சிகரிணீ என்ற,  வரிக்கு  17 அட்சரம் கொண்ட சந்தத்தில் அமைந்துள்ளது
  • வள்ளியின் ஜுரம் குறைவதற்காக வெட்டிவேர், தாமரை முதலிய சைத்தியோபசாரங்கள்  தரப்பட்டன 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

அஷ்டபதீ³ -3 (வஸந்தா ராக³ம், ஆதி³ தாம்)



ஸ்கந்த³-மஹீப்⁴ருʼதி ராஜத-பூ⁴த⁴ர-ஶ்ருʼங்க³-க³தே ப்⁴ருʼஶ-துங்கே³ .

நவமணி-மண்ட³ல-மண்டி³த-ஸௌத⁴-தலாந்திக-கேஸர-ரங்கே³ .. 1..


(பதப்பிரிவு தேவையில்லை)


விளக்கம்:


கந்தன் என்ற மன்னன், வெள்ளிமலையின் சிகரத்தில் உள்ள, உயரமான, நவரத்தினங்கள் அணிசெய் மாளிகைகள் அருகில், சுரபுன்னை  மரத்தின் மேடையில் விளங்க, (பூங்காவில்..)


பல்லவீ


ஸகி² ஶ்ருʼணு வலரிபு-து³ஹித்ருʼ-ஸதே³ஶே .

ஹ்ருʼஷ்யதி ஹர-தனுபூ⁴꞉ ஸுரபா⁴விஹ லஸது³ப-கானன-தே³ஶே ..


(பதப்பிரிவு: ஸுரபௌ⁴ + இஹ , லஸத்³ + உப-கானன )


விளக்கம்:


சகியே கேள் ! இந்திரன் மகள் அருகிருக்க , அரன்மகனான முருகன் , இங்கு நறுமணமுள்ள, பிரகாசமான பூங்காவில், களிக்கிறான்.


மது⁴ர-மரந்த³-மதா³குல-மஞ்ஜுல-கீ³த-மிலிந்த³-கத³ம்பே³ .

விகச-குஸும-ப⁴ர-நாமித-பா⁴ஸுர-கேஸர-தரு-நிகுரும்பே³ .. 2..


(பதப்பிரிவு தேவையில்லை)


விளக்கம்:

இனிய தேனைக்கண்டு  களிப்படைந்து, மதுரகீதம் இசைக்கும் வண்டுக்கூட்டங்கள் கொண்ட , (மேலும்)  விரிந்த மலர்களின் பாரத்தால் வளைந்த, ஒளிரும் மகிழ மரங்கள் நிறைந்த, (பூங்காவில்..)




பதி²க-மனோ-ப்⁴ருʼஶ-கம்பன-பண்டி³த-சம்பக-ஸம்பது³தா³ரே .

ஸுலலித-வகுல-குலோல்லாஸன-வதி தூ⁴லி-விதூ⁴னித-தீரே .. 3..


(பதப்பிரிவு : ஸம்பத்³ + தா³ரே, குல + ல்லாஸன)


விளக்கம்:


(அன்புடையவரை பிரிந்து)  பயணம்செய்பவர்களின் மனங்களை நடுங்கச் செய்வதில் திறமையுள்ள செண்பகங்களின் அழகு நிரம்பிய, (மேலும்)  மிக வசீகரமான  மகிழமரங்களின் பிரகாசமும், பூந்தாதுக்கள் சிதறிய  (தடாகக்) கரைகளுள்ள  (பூங்காவில்)


தி³னமணி-கர-பரிரம்ப⁴-விகஸ்வர-ஸாரஸினீ-ரமணீயே .

ருசிர-ம்ருʼணால-லதாஸன-ஸுஹித-மரால-நினத³-கமனீயே .. 4..


(பதப்பிரிவு தேவையில்லை)


விளக்கம்:


சூரிய கிரணங்களின் அரவணைப்பில் மலர்ந்த தாமரைகளுடன் ரமணீயமான , எழிலான தாமரை இலை என்ற ஆசனத்தில் இதமாக அமர்ந்த அன்னங்களின் கூவுதல்களால் விரும்பத் தக்க (பூங்காவில்)




மனஸிஜ-நரபதி-ஸஹக்ருʼதி-படுதம-புஷ்பித-மந்த்ர-ரஸாலே .

ஸும-ஸமய-ஶ்ரீ-திலக-மதிப்ரத²-திலக-மஹீருஹ-ஜாலே .. 5..


(பதப்பிரிவு தேவையில்லை)


விளக்கம்:


மன்மதன் என்ற அரசனுக்கு துணைபுரிவதில் வல்ல, மலர்ந்து மந்திராலோசனை செய்யும் மாமரங்கள் உடைய, வசந்தகால லக்ஷ்மியின் திலகம் என்றெண்ணப்பட்டு புகழ்பெற்ற திலக (தழுதாழை) மரங்களின் கூட்டங்கள் நிறைந்த (பூங்காவில் )


புஷ்பித-மாத⁴விகா-பரிரம்ப⁴ண-விகஸித-சாரு-லவங்கே³ .

மத³ன-க்ருʼபாண-ப்⁴ரமகர-கிம்ʼஶுக-து⁴த-பதி²காப்³ஜ-த்³ருʼக³ங்கே³ .. 6..


(பதப்பிரிவு தேவையில்லை)


விளக்கம்:


மலர்ந்த மாதவிக்கொடியின் அணைப்பில் சிலிர்த்து மலர்ந்த அழகிய இலவங்கமரங்கள் நிறைந்த , (பிரிந்து)  பயணம் சென்றவர்களின் மனைவியரின் அங்கங்களை தாக்கும் மதனின் வாள்தானோ என்ற பிரமையை உருவாக்கும் புரச மலர்கள் நிறைந்த (பூங்காவில்)


குபித-வதூ⁴ஜன-மான-நிவாரண-ஹர்ஷித-யுவஜன-க³ம்யே .

ஸௌரப⁴-பல்லவ-சர்வண-புஷ்யத்-கோகில-கூஜன-ரம்யே .. 7..


(பதப்பிரிவு தேவையில்லை)


விளக்கம்:


ஊடல் கொண்ட மனைவியர்களின் பாராமுகம் நீங்கியதால் மகிழ்ந்த இளைஞர்கள் அணுகத்தக்க, வாசனையுள்ள (மாந்)தளிர்களை மென்று, வலுப்பெற்ற குயில்களின் ஓசையால் இனிமையான (பூங்காவில்)




குரப³க-ரேணு-ஸமாவ்ருʼத-த³ஶ-தி³ஶி வித³லித-நீல-தமாலே .

யுவஜன-ரதிஜ-ஶ்ரமஜல-வாரக-மலயஜ-மாருத-பா³லே .. 8..


(பதப்பிரிவு தேவையில்லை)


விளக்கம்:


மருதோன்றியின் பூந்தாதுக்கள் பத்து திசைகளிலும் பரவிய, நீல தமாலமலர்கள் பூத்திருக்கும், (மற்றும்) பொதிகைமலையில் பிறந்த இளந்தென்றல், அனுபோகங்களினால் உண்டான  இளையோர்களின் வியர்வையை அகற்றும் (பூங்காவில்)


விஶ்வநாத²-கவினா ரசிதமித³ம்ʼ ஷண்முக²-ப⁴க்தி-நிதா³னம் .

ஸுரபி⁴-ஸமய-வன-வர்ணன-நிரதம்ʼ ஜயது சிரம்ʼ பு⁴வி கா³னம் .. 9..


(பதப்பிரிவு தேவையில்லை)


விளக்கம்:

விசுவநாத கவியால் இயற்றப்பட்ட, முருகனிடம் பக்தியை வளர்க்கும், வசந்த காலத்தை  வர்ணனை செய்யும் இந்த  பாடல், உலகில் நெடுநாள் விளங்கட்டும் !

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

சுலோகம் 3


மத³கல-கலகண்டீ²-கந்த⁴ரானர்க³லோத்³யத்-

கலகல-ரவ-பூரை꞉ போஷயன் பஞ்சபா³ணம் |

க⁴ட-ப⁴வ-கி³ரி-ஜாதோ வாத-போதோ(அ)பி⁴யாத-

ஸ்தபதி விரஹி-சேதோ மார-ஸேனாதி⁴-நேதா ||


சுலோகம் 3 - பதம்பிரித்து

மத³கல-கலகண்டீ²-கந்த⁴ர னர்க³ல த்³யத்-

கலகல-ரவ-பூரை꞉ போஷயன் பஞ்சபா³ணம் |

க⁴ட-ப⁴வ-கி³ரி-ஜாதோ வாத-போத: அபி⁴யாத:

தபதி விரஹி-சேதோ மார-ஸேனாதி⁴-நேதா ||




விளக்கமும் குறிப்புகளும் 


கும்பமுனியான அகஸ்தியரின் மலையில் தோன்றிய இளந்தென்றல், மதனின் சேனாதிபதியாக இருந்து , களிப்புற்ற குயிலின் தொண்டையிலிருந்து உதிக்கும் டைற்ற இனிய ஓசைகளால் மன்மதனுக்கு வலுவூட்டி, பிரிவுற்றவரின் மனங்களை வாட்டுகிறது. 

  • இது மாலினீ ன்ற,  வரிக்கு 15 அட்சரம் கொண்ட சந்தத்தில் அமைந்துள்ளது

சுலோகம் 4


உத்பு²ல்லன்-நவ-மல்லிகா-பரிமலோத்³கா³ர-ப்ரியம்பா⁴வுக-

ஶ்ரீக²ண்டா³சல-வாத-தூ⁴த-விகஸச்சாம்பேய-பூ⁴மீ-ருஹா꞉ |

ப்⁴ருʼங்கா³லிங்கி³த-ப்⁴ருʼங்க³-ஜ²ங்க்ருʼதி-மஹா-ஹுங்கார-ஸந்தர்ஜிதை꞉

நீயந்தே கத²மப்யமீ விரஹிபி⁴ர்வாஸந்திகா வாஸரா꞉ ||


சுலோகம் 4 - பதம்பிரித்து


உத்பு²ல்லன்-நவ-மல்லிகா-பரிமல உத்³கா³ர-ப்ரியம்பா⁴வுக-

ஶ்ரீக²ண்ட³ சல-வாத-தூ⁴த-விகஸத்- சாம்பேய-பூ⁴மீ-ருஹா꞉ .

ப்⁴ருʼங்கா³ ஆலிங்கி³த-ப்⁴ருʼங்க³-ஜ²ங்க்ருʼதி-மஹா-ஹுங்கார-ஸந்தர்ஜிதை꞉

நீயந்தே கத²மபி அமீ விரஹிபி⁴ வாஸந்திகா꞉ வாஸரா꞉ .


விளக்கமும் குறிப்புகளும் 

பெண்வண்டுகளின் அணைப்பைப் பெற்ற வண்டுகளின் ரீங்காரம் என்ற அச்சுறுத்தும் ஒலிகளால் மிரட்டப்பட்ட பிரிவுற்றவர்கள், மலர்ந்த புதுமல்லிகையின் மணம் பரவுவதால் விரும்பத்தக்கதான, சந்தன மலையான பொதிகையின் காற்றினால் அசையும் மலர்ந்த செண்பக மரங்கள் நிறைந்த இந்த வசந்தகால நாட்களை மிகவும் கஷ்டப்பட்டு கழிக்கிறார்கள்.

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் ன்ற,  வரிக்கு  19 அட்சரம் கொண்ட சந்தத்தில் அமைந்துள்ளது

Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்