Posts

Showing posts from May, 2023

அஷ்டபதீ³ - 18 - மூலமும் பொருளும்

Image
தோழிகளை சித்தரிக்கும் ஜாமினி ராயின் ஓவியம் சுலோகம் 1: குஸும-ஶராஸன-தூ³னாம்ʼ ரதி-ஸுக²-ஹீனாம்ʼ நவாக³ஸா தீ³னாம் | த்⁴ருʼத-மத³-கலஹாதீ⁴னா-மஜஹன்-மௌனாம்ʼ ஸகீ² ஜகா³தை³னாம் || சுலோகம் 1 - பதம்பிரித்து: குஸும-ஶராஸன-தூ³னாம்ʼ ரதி-ஸுக²-ஹீனாம்ʼ நவாக³ஸா தீ³னாம் . த்⁴ருʼத-மத³-கலஹாதீ⁴னாம்ʼ அஜஹன்-மௌனாம்ʼ ஸகீ² ஜகா³த³ ஏனாம் விளக்கமும் குறிப்புகளும் :  மலர்க்கணையோனால்  வருத்தப்பட்டு, இன்பமற்று இருந்த, புதிய தவற்றால் வாடியிருந்த,  இறுமாப்பினால் பிணக்குக்கு இடம்தந்து, மௌனத்தை விடாமலிருந்த அவளிடம், தோழி (பின்வருமாறு) சொன்னாள். இது “ஆர்யா” என்ற சந்தத்தில் உள்ளது. ஒவ்வொரு வரியிலும் (12+18) 30 மாத்திரைகள்  கொண்டது. முருகன் தாமதமாக வந்ததும், வள்ளி மிகவும் கோபித்ததும் இரண்டும் “புதிய/ சமீபத்திய  தவறு “ என்று கவி சொல்வதாக கொள்ளலாம். —---------------------------------------------------------------------------------------------------------------------------- அஷ்டபதீ³ - 18 (யது³குல-காம்போ⁴ஜி ராக³ம், ஆதி³ தாளம் ) கு³ஹ-முபனத-மிஹ சிர-மபி⁴லஷிதம் . கலய நயன-விஷயம்ʼ து⁴ரி வினதம் .. 1.. (பதப்பிரிவு : கு³ஹம் + உபனதம் + இஹ, சிரம

அஷ்டபதீ³ - 17 - மூலமும் பொருளும்

Image
  சுலோகம் 1: கத²மபி ரஜனீமத² வ்யதீத்ய  ஸ்மர-த³லிதா(அ)பி புரோக³தம்ʼ நிஶாந்தே || கு³ஹ-மனுனய-காரிணம்ʼ நிரீக்ஷ்ய  ப்ரணய-ருஷா ஸ்பு²ரதோ³ஷ்ட²-மாஹ வல்லீ ||  சுலோகம் 1 - பதம்பிரித்து: கத²மபி ரஜனீம்ʼ அத² வ்யதீத்ய  ஸ்மர-த³லிதா அபி புரோக³தம்ʼ நிஶாந்தே . கு³ஹம்ʼ அனுனய-காரிணம்ʼ நிரீக்ஷ்ய  ப்ரணய-ருஷா ஸ்பு²ரத் ஓஷ்ட²ம்ʼ ஆஹ வல்லீ விளக்கமும் குறிப்புகளும் : எப்படியோ இரவைக் கழித்தபின், இரவின் முடிவில் தன்னெதிரில் வந்து சமாதானம் செய்யும் குகனைப் பார்த்து, காமதேவனால் (நெஞ்சம்) நொறுங்கியிருந்தாளாயினும், அன்பினால் உண்டான ஊடல்கொண்டு, உதடுகள் துடிக்க ப் பேசினாள் வள்ளி. இது புஷ்பிதாக்³ரா - வரிக்கு 12 மற்றும் 13 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.   —--------------------------------------------------------------------------------------------------------------- அஷ்டபதீ³ - 17 ( ஆரபி⁴ ராக³ம், ஆதி³ தாளம்) ரஜனி-கலித-ஸததாஸம-ஶர-ரண-ஜாக³ரதோ(அ)ருணிமானம் . வஹதி தவேக்ஷண-யுக³மருணாம்பு³ஜ-மிவ விகஸித-மதிமானம் .. 1.. (பதப்பிரிவு: தவ + ஈக்ஷண -யுக³ம் + அருணாம்பு³ஜம் + இவ ) விளக்கம் இரவில் விழித்ததால், உம் கண்கள், நன்கு மலர்ந்த செந்தாமரைமலர்

அஷ்டபதீ³ - 16 - மூலமும் பொருளும்

Image
 நாயகி தோழியுடன் - பஹாடி சித்திரம்  சுலோகம் 1: மா தாபம்ʼ ப⁴ஜ ஹே ஸகி² ! ப்ரியதமோ நாயாத இத்யாஶயே ஸோ(அ)யம்ʼ நந்த³து மாம்ʼ ப்ரதார்ய மஹிலா-மன்யாம்ʼ க்³ருʼஹீத்வா ஶட²꞉ | வாதோ வாது த³ரோ விராஜது மது⁴ஶ்ரீ꞉ கோகில꞉ கூஜது ப்ரத்³யும்னோ முத³மேது க³ச்ச²து மம ஸ்வாந்தம்ʼ முகே²ந்து³ம்ʼ ப்ரபோ⁴꞉ || சுலோகம் 1 - பதம்பிரித்து: மா தாபம்ʼ ப⁴ஜ ஹே ஸகி² ! ப்ரியதமோ ந ஆயாத இதி ஆஶயே ஸ அயம்ʼ நந்த³து மாம்ʼ ப்ரதார்ய மஹிலாம்ʼ அன்யாம்ʼ க்³ருʼஹீத்வா ஶட²꞉ . வாதோ வாது த³ரோ விராஜது மது⁴ஶ்ரீ꞉ கோகில꞉ கூஜது ப்ரத்³யும்னோ முத³ம்ʼ ஏது க³ச்ச²து மம ஸ்வாந்தம்ʼ முகே²ந்து³ம்ʼ ப்ரபோ⁴꞉ விளக்கமும் குறிப்புகளும் : என் பிரியமானவன் வரவில்லையே என்ற எண்ணத்தால் துயரம் அடையாதே  தோழி ! வஞ்சகரான அவரும் என்னை ஏமாற்றி, இன்னொரு பெண்ணைக்கொண்டு சந்தோஷமாக இருக்கட்டும். இளங்காற்று வீசட்டும். வசந்தகாலத்தின் அழகு எங்கும் வீற்றிருக்கட்டும்! குயில் கூவட்டும்! மன்மதன் மகிழ்வடையட்டும்! என் மனம் பிரபுவின் முகமெனும் சந்திரனை சென்றடையட்டும்! இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.  ஒருவர் இறந்தபின் அந்தந்த அவயவங்கள் அதற்குரிய தேவதையை அடையும