அஷ்டபதீ³ - 18 - மூலமும் பொருளும்

தோழிகளை சித்தரிக்கும் ஜாமினி ராயின் ஓவியம்
சுலோகம் 1:

குஸும-ஶராஸன-தூ³னாம்ʼ ரதி-ஸுக²-ஹீனாம்ʼ நவாக³ஸா தீ³னாம் |

த்⁴ருʼத-மத³-கலஹாதீ⁴னா-மஜஹன்-மௌனாம்ʼ ஸகீ² ஜகா³தை³னாம் ||


சுலோகம் 1 - பதம்பிரித்து:


குஸும-ஶராஸன-தூ³னாம்ʼ ரதி-ஸுக²-ஹீனாம்ʼ நவாக³ஸா தீ³னாம் .

த்⁴ருʼத-மத³-கலஹாதீ⁴னாம்ʼ அஜஹன்-மௌனாம்ʼ ஸகீ² ஜகா³த³ ஏனாம்


விளக்கமும் குறிப்புகளும் :

 மலர்க்கணையோனால்  வருத்தப்பட்டு, இன்பமற்று இருந்த, புதிய தவற்றால் வாடியிருந்த,  இறுமாப்பினால் பிணக்குக்கு இடம்தந்து, மௌனத்தை விடாமலிருந்த அவளிடம், தோழி (பின்வருமாறு) சொன்னாள்.


  • இது “ஆர்யா” என்ற சந்தத்தில் உள்ளது. ஒவ்வொரு வரியிலும் (12+18) 30 மாத்திரைகள்  கொண்டது.

  • முருகன் தாமதமாக வந்ததும், வள்ளி மிகவும் கோபித்ததும் இரண்டும் “புதிய/ சமீபத்திய  தவறு “ என்று கவி சொல்வதாக கொள்ளலாம்.


—----------------------------------------------------------------------------------------------------------------------------

அஷ்டபதீ³ - 18 (யது³குல-காம்போ⁴ஜி ராக³ம், ஆதி³ தாளம் )


கு³ஹ-முபனத-மிஹ சிர-மபி⁴லஷிதம் .

கலய நயன-விஷயம்ʼ து⁴ரி வினதம் .. 1..


(பதப்பிரிவு : கு³ஹம் + உபனதம் + இஹ, சிரம் + அபி⁴லஷிதம்)

விளக்கம் :


நீண்டநேரமாக நீ ஆசைப்பட்ட குகன்,  இங்கு அருகில் வந்து,  உன் முன்னே பணிந்து இருக்கிறார். அவரைக்  கண்ணெடுத்துப் பார்.


பல்லவீ


ஷண்முகே² மா ப⁴வ பா⁴மினி ரோஷ-யுதா ..


விளக்கம் :


அழகிய பெண்ணே ! அறுமுகனிடம் கோபம் கொள்ளாதே!


ஸகி² தவ ஸுமது⁴ர-மது⁴ரஸ-ஸத³னம் .

கத²மிவ விதத²யஸி ரத³ன-வஸனம் .. 2..


விளக்கம் :


தோழி! மிக இனிமையான தேனின் சுவைகொண்ட உன் இதழ்களை ஏன் பயனற்றதாகச் செய்கிறாய் ?


தருணிம-வல்கி³த-முரஸிஜ-யுக³லம் .

ஸப²லய ஸங்க³த-பதி-கர-கமலம் .. 3..


(பதப்பிரிவு : வல்கி³தம் + உரஸிஜ)

விளக்கம் :


இளமையால் பூரித்தெழுந்த இருதனங்களையும் , கணவரின் தாமரைக்கரங்கள் சேர்ந்து பலனடைந்ததாகச் செய் !


தவ மது⁴-பவன-சலா தனு-ரேதம் .

ஶ்லிஷ்யது ஜக³த³வலம்ப³ன-பூ⁴தம் .. 4..


(பதப்பிரிவு : தனு꞉ + ஏதம், ஜக³த்³ + அவலம்ப³ன)

விளக்கம் :


வசந்தகாலத்தின் காற்றில் அசையும் உனது மேனி , உலகிற்கே பற்றுக்கோடான வரை அணைக்கட்டும்!


கிம்ʼ குருஷே ஸரலே ஸதி மானம் .

மௌனமபி த⁴ரஸி கத²-மநிதா³னம் .. 5..


(பதப்பிரிவு : மௌனம் + அபி, கத²ம் + அநிதா³னம்)

விளக்கம் :


(இவ்வளவு) நேர்மையாக, எளிமையாக,  வந்தவரிடம் ஏன் கெளரவம் பார்க்கிறாய் ? ஏன் காரணமின்றி  மௌனத்தையும் ஏற்றுள்ளாய்?


விஸ்ருʼஜ ருஷம்ʼ ஸ்ருʼஜ ஹர்ஷஜ-வாஷ்பம் .

ஸுக²ய ஶரஜ-மபி ஶகலித-பா³ஷ்பம் .. 6..


(பதப்பிரிவு :
ஶரஜம் + அபி)

விளக்கம் :


சினத்தை விடு. ஆனந்தக்கண்ணீர் பெருக்கு. கண்ணீர்த்துளிகளை தகர்த்து, (சரத்தில் உதித்த) சரவணபவனை சுகப்படுத்து !


பவன-சபல-ஸரஸீருஹ-நயனே .

த⁴வமுபஸர ம்ருʼது³-கிஸலய-ஶயனே .. 7..


(பதப்பிரிவு : த⁴வம் + உபஸர)

விளக்கம் :


காற்றில் அசையும் தாமரை போன்ற கண்களை உடையவளே! மென்தளிர்களின் சயனத்தில் கணவனை அணைவாயாக!


அனுனய-வசன-விதா⁴யின-மேனம் .

ஜீவய விரசய மோத³-நிதா⁴னம் .. 8..


(பதப்பிரிவு : விதா⁴யினம் + ஏனம்)


விளக்கம் :


ஆறுதல் மொழிகளைப் பேசும் இவரை வாழச்செய். பெருமகிழ்ச்சியின் இருப்பிடமாக அவரைச்செய்.


விஶ்வநாத²-கவி-பா⁴ஷித-கீ³தம் .

முதி³தமித³ம்ʼ ரசயது பு³த⁴-ஜாதம் .. 9..


(பதப்பிரிவு : முதி³தம் + இத³ம்)

விளக்கம் :

விசுவநாத கவி சொல்லிய இப்பாட்டு, அறிவுள்ளவர்களை களிப்புற்றவராகச் செய்யட்டும்.
—---------------------------------------------------------------------------------------------------------------------
தோழிகளை சித்தரிக்கும் மதுபனி  ஓவியம்


சுலோகம் 2:


ஆயாஸீ-தா³யதாக்ஷி ப்ரஸவ-ஶர-ஸமோ வீப்ஸயா ப்ரேப்ஸிதோ ய꞉

பஶ்யாவஶ்யாய-ஶுப்⁴ராம்ʼ தனுமபி விரஹாத³ஸ்ய ரஸ்யா த்வமேவ |

ஶ்ருத்வா யுக்தம்ʼ மது³க்தம்ʼ வசன-மதி-ஹிதம்ʼ ப்ரீணயே꞉ ப்ராணநாத²ம்ʼ

போ⁴க்³யம் பா⁴க்³யம் விஹாதும் ஸகி² ஸமுபனதம் ஸாம்ப்ரதம் ஸாம்ப்ரதம் கிம் ||


சுலோகம் 2 - பதம்பிரித்து:


ஆயாஸீத்³ ஆயதாக்ஷி ப்ரஸவ-ஶர-ஸமோ வீப்ஸயா ப்ரேப்ஸிதோ ய꞉

பஶ்ய அவஶ்யாய-ஶுப்⁴ராம் தனும் அபி விரஹாத்³ அஸ்ய ரஸ்யா த்வம் ஏவ .

ஶ்ருத்வா யுக்தம்ʼ மத்³ உக்தம்ʼ வசனம்ʼ அதி-ஹிதம்ʼ ப்ரீணயே꞉ ப்ராணநாத²ம்ʼ

போ⁴க்³யம் பா⁴க்³யம் விஹாதும் ஸகி² ஸமுபனதம்ʼ ஸாம்ப்ரதம் ஸாம்ப்ரதம் கிம் 


விளக்கமும் குறிப்புகளும் :


நீண்ட கண்களை உடையவளே!  மீண்டும் மீண்டும் நீ எவரை அடைய விரும்பினாயோ அவர், மலர்க்கணையானுக்கு சமமான அழகுடன், வந்துவிட்டார். விரஹத்தினால் பனிபோல் வெளுத்திருக்கும் அவர் மேனியைப்பார். அவருக்கு இனியவள் நீமட்டுமே. நான் சொல்லும் மிக நன்மைதரும், பொருத்தமான  வசனத்தைக் கேட்டு, உன் உயிர்க்கு நிகரான தலைவனை சந்தோஷப்படுத்து. தானே நன்கு வந்தடைந்த அனுபவிக்கவேண்டிய பாக்கியத்தை இப்பொழுது தள்ளிவிடுவது சரியானதா ?

  • இது ஸ்ரக்³த⁴ரா - வரிக்கு 21 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 


சுலோகம் 3:

ஸேவா-ஸக்த-புரந்த³ராதி³-தி³விஷத்-ஸீமந்தினீ-கந்த⁴ரா-

ந்ருʼத்யன்-மங்க³ள-ஸூத்ர-தா³ர்ட்⁴ய்-கரணாஸக்தி-ப்ரஶஸ்தோத்³யமாம் |

ஆப்த்யானீத-வினீத-வீர-நிகர-ப்ரக்ராந்த-ஸம்பா⁴வனாம்ʼ

ஶக்திம்ʼ பாணி-தலே த⁴ரன் வனசரீ-முக்³தோ⁴ வித³த்⁴யாச்சு²ப⁴ம் ||


சுலோகம் 3 - பதம்பிரித்து:


ஸேவா-ஸக்த-புரந்த³ராதி³-தி³விஷத்-ஸீமந்தினீ-கந்த⁴ரா-

ந்ருʼத்யன்-மங்க³ள-ஸூத்ர-தா³ர்ட்⁴ய்-கரண ஆஸக்தி-ப்ரஶஸ்த உத்³யமாம் .

ஆப்தி  ஆனீத-வினீத-வீர-நிகர-ப்ரக்ராந்த-ஸம்பா⁴வனாம்

ஶக்திம்ʼ பாணி-தலே த⁴ரன் வனசரீ-முக்³தோ⁴ வித³த்⁴யாத் ஶுப⁴ம் 


விளக்கமும் குறிப்புகளும் :


சேவை செய்வதில் ஆர்வமுள்ள இந்திரன் முதலிய சுவர்க்கவாசிகளின் மனைவியர் கழுத்தில் ஆடும் மங்கலநாணை வலுப்பெறச்செய்யும் விருப்பத்துடன், புகழடைந்த செயல்களை உடைய வேலாயுதம், தன் தகுதியால் ஈட்டிய, வீரர்களின் கூட்டங்கள் பணிவோடு தரும் மரியாதையை, பராக்ரமத்தால் பெற்றது. அதை தன் கைத்தலத்தில் தரித்து, வேடுவப்பெண்ணினால் வசீகரிக்கப்பட்ட முருகன், நமக்கு சுபத்தைச் செய்யட்டும்.

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்


இதி ஶ்ரீவிஶ்வநாத²-கவி-க்ருʼதௌ ஶ்ரீ-கீ³தகா³ங்கே³ய-காவ்யே கலஹாந்தரிதா-வர்ணனே முக்³த⁴-ஶக்தித⁴ரோ நாம நவமஸ்ஸர்க³꞉ .


(இதுவே விசுவநாத கவியின் படைப்பாகிய கீத காங்கேய காவியத்தில், “மையல்கொண்ட வேலன்” என்ற ஒன்பதாம்  சர்கம்)




Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்