அஷ்டபதீ³ - 23 - மூலமும் பொருளும்


 சுலோகம் 1: 

தத³னு ஸஹஸா யாதே கார்யச்ச²லேன ஸகீ²ஜனே

ஸத³ர-மத⁴ர-ஸ்னிக்³த⁴-ஸ்பீ²த-ஸ்மிதார்த்³ர-நதானனாம் |

குஸும-ஶயனே ந்யஸ்தாபாங்கா³-மனங்க³-வஶம்ʼவதா³ம்ʼ

ஶரவணப⁴வோ வாசம்ʼ ப்ராஹ ப்ரியாம்ʼ ஸகுதூஹலம் ||


சுலோகம் 1 - பதம்பிரித்து:


தத³னு ஸஹஸா யாதே கார்யச்ச²லேன ஸகீ²ஜனே

ஸத³ரம் அத⁴ர-ஸ்னிக்³த⁴-ஸ்பீ²த-ஸ்மிதார்த்³ர-நதானனாம்

குஸும-ஶயனே ந்யஸ்தாபாங்கா³ம் அனங்க³-வஶம்ʼவதா³ம்

ஶரவணப⁴வோ வாசம்ʼ ப்ராஹ ப்ரியாம்ʼ ஸகுதூஹலம் 


விளக்கமும் குறிப்புகளும் :


அதன்பிறகு ,  ஏதோ வேலையுள்ளது என்ற வியாஜத்துடன் தோழிமார் சென்றுவிட,  அச்சத்துடன், இதழ்களில் அன்புகொண்டு பெருகும் புன்னகையால் நிறைந்து, (வெட்கத்தால்) குனிந்த முகத்துடனிருந்த  தன் அன்புக்குரியவளிடம் சரவணபவன் மகிழ்ச்சியோடு இந்த சொற்களைக் கூறினான்.

  • இது ஹரிணீ  - வரிக்கு 17 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 


—--------------------------------------------------------------------------------------------------------------------

அஷ்டபதீ³ - 23 (நாத³நாமக்ரியா ராக³ம், ஆதி³ தாளம்)


விகஸித-ஸும-ஶயனே மம ஸுந்த³ரி கலய தவ ம்ருʼது³ல-பாதௌ³ .

இத³மபி மார்த³வ-கு³ணமதி⁴லப⁴தாம்ʼ ஸ்பர்ஶன-மண்யவிபே⁴தௌ³ .. 1..


(பதப்பிரிவு : கு³ணம் + அதி⁴லப⁴தாம், மணி + அவிபே⁴தௌ³)


பல்லவீ


குரு ஸஹஸா கௌ³ரீ-ஸுதம் . அதி-ஸுக²யுஜமயி மாம்ʼ வல்லிகே ..


(பதப்பிரிவு : ஸுக²யுஜம் + அயி)


த்யஜ நஹி கஶ்சிதி³ஹாஸ்தி ஸுஹாஸினி நயன-நிமீலனமேவம் .

பஶ்ய விலஜ்ஜமுபாக³த-மதி⁴க-ப்ரிய-மதிஶயித-விபா⁴வம் .. 2..


(பதப்பிரிவு : கஶ்சித்³+ இஹ + அஸ்தி, நிமீலனம் + ஏவம், விலஜ்ஜம் + உபாக³தம் + அதி⁴க-ப்ரியம் + அதிஶயித)


வத³ன-ஸரோருஹ-தல்லஜ-நிர்க³ல-த³ம்ருʼத-ரஸேன நிதாந்தம் .

மது⁴கர-மிவ பத்³மினி மாம்ʼ ப்ரீணய மனஸிஜ-ஶர-ஹதி-தாந்தம் .. 3..


(பதப்பிரிவு : நிர்க³லத்³ + அம்ருʼத, மது⁴கரம் + இவ)


அபஹர கஞ்சுக-மர்த⁴-விபாடித-முரஸிஜ-கூ³ஹக-மேனம் .

விக⁴டய தாப-முரோஜ-யுக³ம்ʼ ஹ்ருʼதி³ மம விநிவேஶ்ய ஸுபீனம் .. 4..


(பதப்பிரிவு : கஞ்சுகம் + அர்த⁴விபாடிதம் + உரஸிஜ, தாபம் + உரோஜ)


ஶ்லத²யிது-மம்ʼஶுக-மிச்ச²தி த³யிதே விரஹ-க³த³-மிவ ஜனோ(அ)யம் .

உரரீகுரு மாமக-நாத²ன-மிஹ ஜீவய மா-மஸஹாயம் .. 5..


(பதப்பிரிவு : ஶ்லத²யிதும் + அம்ʼஶுகம் + இச்ச²தி, க³த³ம் + இவ, நாத²னம் + இஹ, மாம் + அஸஹாயம்)


மத³னஜ-கம்பன-சல-க⁴ன-ஜக⁴னக-சல-ரஶனா கல-ராவம் .

க⁴டயிது-மபி⁴லஷிதம்ʼ மம தனுதே ஸாந்த்வனமிவ ப⁴ஜ பா⁴வம் .. 6..


(பதப்பிரிவு : க⁴டயிதும் + அபி⁴லஷிதம், ஸாந்த்வனம் + இவ)


அதிதூ³ரா(ஆ)க³தி-கே²த³யுதம்ʼ தவ சரணயுக³-மதிவஹேயம் .

க³ல-த³ர-நி꞉ஸ்ருʼத-மணி-மதி²த-ஶ்ரம-கண-நிகர-மபனயேயம் .. 7..


(பதப்பிரிவு :  சரணயுக³ம் + அதிவஹேயம், நிகரம் + அபனயேயம்)


மனஸிஜ-ஜய-து³ந்து³பி⁴-நினதா³யித-மணித-ரவை꞉ க்ருʼத-மோத³ம் .

ஹஸித-ஸுதா⁴ரஸ-வசன-கத³ம்பை³-ரபனய மானஸ-கே²த³ம் .. 8..


(பதப்பிரிவு : கத³ம்பை³꞉ + அபனய)


விஶ்வநாத²-கவி-நிக³தி³தமித³மிஹ விஶதி³த-ஷண்முக²-தோஷம் .

விஹரது கண்ட²தலே(அ)கி²ல-விது³ஷாம்ʼ விரசித-ப³ஹு-பரிதோஷம் .. 9..


(பதப்பிரிவு : நிக³தி³தம் + இத³ம் + இஹ)


பாட்டின் விளக்கம்: 


வள்ளி ! கௌரியின் மகனாகிய என்னை மனமகிழும்படி செய்வாயாக ! இந்த மலர்விரிப்பில் உன் மென்மையான பாதங்களை வை. ஸ்பரிசமணி போன்ற அவற்றின் தொடர்பால் இம்மலர்களும்  அதிக மென்மையுள்ளவை ஆகட்டும். அழகிய புன்முறுவல் கொண்டவளே! இங்கு வேறு யாருமில்லை. கண்களை மூடிக்கொள்ளவேண்டாம், நாணம் நீங்கி உன்மீது அளவற்ற காதல்கொண்ட உன் அன்பன் என்னைப்பார். உன் முகத்தாமரையிலிருந்து பெருகும் தேனினால், வண்டுபோன்ற என்னை களிக்கச்செய். என்னை அணைத்துக்கொண்டு, எனக்கு உயிர்தருவாயாக. உன் இடையில் ஒலிக்கும் மணிமேகலையும் எனக்கு அமைதி தருவதாக உள்ளது. மிகத்தொலைவிலிருந்து வந்ததால் வருந்தும் உன்னிரு பாதங்களையும் வருடுவேன். கழுத்தில் தோன்றி மணிமாலைகளால்  அழுந்தும் வியர்வைத்துளிகளைத் துடைக்கிறேன். புன்சிரிப்புடன் கூடிய அமிர்தம் போன்ற வசனங்களால் என் மனத்தின் துன்பத்தையகற்று. 

இவ்வாறு விசுவநாத கவி சொன்ன சொற்கள், அறுமுகனின் சந்தோஷத்தை தெரிவிப்பவை. எல்லா அறிவாளிகளின் தொண்டைகளிலும் அவை விளங்கி , மிகுந்த திருப்தியைத் தரட்டும்.


சுலோகம் 2:


ஸா தூ⁴னோதி கரௌ ஸகங்கண-ஜ²ணத்காரம்ʼ ஜிக்⁴ருʼக்ஷௌ ப்ரியே

வேகா³தா³ஸ்ய-ஸுதா⁴ம்ʼ கரோத்யபி திரஶ்சீனம்ʼ பிபாஸௌ முக²ம் |

மா மா மேதி ச பா⁴ஷதே ஹட²-ஸமாஶ்லேஷம்ʼ சிகீர்ஷௌ கி³ரம்ʼ

புஷ்ணாத்யஸ்ய ததா²(அ)பி ஸம்மத³மித³ம்ʼ காமஸ்ய லீலாயிதம் ||


சுலோகம் 2 - பதம்பிரித்து:


ஸா தூ⁴னோதி கரௌ ஸகங்கண-ஜ²ணத்காரம்ʼ ஜிக்⁴ருʼக்ஷௌ ப்ரியே

வேகா³த்³ ஆஸ்ய-ஸுதா⁴ம்ʼ கரோதி அபி திரஶ்சீனம்ʼ பிபாஸௌ முக²ம் .

மா மா மா இதி ச பா⁴ஷதே ஹட²-ஸமாஶ்லேஷம்  சிகீர்ஷௌ கி³ரம்

புஷ்ணாதி அஸ்ய ததா² அபி ஸம்மத³ம் இத³ம்ʼ காமஸ்ய லீலாயிதம்


சுலோகம் 3:


உத்³யுக்தா த³யிதம்ʼ விஜேது-மது⁴னா ஸௌமேஷவே ஸங்க³ரே

தோ³ர்வல்லீ-த்³ருʼட⁴-ப³ந்த⁴னான்யதி-த்³ருʼடோ⁴ரோஜ-த்³வயாஸ்பா²லனம் |

தீக்ஷ்ணாக்³ரை-ர்த³ஶனை-ர்நகை²ஶ்ச த³லனம்ʼ சக்ரே ததா²ப்யஞ்ஜஸா

ஶ்ராந்தைஷா ஹ்யப³லாத்வமுத்பலத்³ருʼஶாம் யுக்தம்ʼகுதோ(அ)ஸ்த்வன்யதா² ||


சுலோகம் 3 - பதம்பிரித்து:


உத்³யுக்தா த³யிதம்ʼ விஜேதும்ʼ அது⁴னா, ஸௌமேஷவே ஸங்க³ரே,

தோ³ர்வல்லீ-த்³ருʼட⁴-ப³ந்த⁴னானி அதி-த்³ருʼட⁴ உரோஜ-த்³வயாஸ்பா²லனம் .

தீக்ஷ்ணாக்³ரை꞉  த³ஶனை꞉ நகை²꞉ ச த³லனம்ʼ சக்ரே ததா² அபி அஞ்ஜஸா

ஶ்ராந்தா ஏஷா ஹி அப³லாத்வம்ʼ உத்பல-த்³ருʼஶாம்ʼ யுக்தம்ʼ குதோ(அ)ஸ்து அன்யதா² ?


சுலோகம் 4

கேஶா ஆகுலிதாஸ்ஸ்ரஜோ விக³லிதா꞉ ஸ்வித்³யன்-முகா²ம்போ⁴ருஹம்

ஶ்வேதா த³ந்தபடீ ஶ்லதா² பு⁴ஜலதா நிஶ்சேஷ்டிதௌ ச ஸ்தனௌ |

ஶோணா நேத்ரயுகீ³ நக²-க்ஷத-பரிக்லிஷ்டம்ʼ ச வல்யா வபு꞉

தாமாதா³ய ததா²(அ)பி மோஹனகரீம்ʼ தோ³ர்ப்⁴யாம்ʼ நனந்த³ ப்ரபு⁴꞉ ||


சுலோகம் 4- பதம்பிரித்து:


கேஶா ஆகுலிதா꞉ ஸ்ரஜோ விக³லிதா꞉ ஸ்வித்³யன்-முகா²ம்போ⁴ருஹம்ʼ

ஶ்வேதா த³ந்தபடீ ஶ்லதா² பு⁴ஜலதா நிஶ்சேஷ்டிதௌ ச ஸ்தனௌ .

ஶோணா நேத்ரயுகீ³ நக²-க்ஷத-பரிக்லிஷ்டம்ʼ ச வல்யா வபு꞉

தாம்ʼ ஆதா³ய ததா² அபி மோஹனகரீம்ʼ தோ³ர்ப்⁴யாம்ʼ நனந்த³ ப்ரபு⁴꞉ 


விளக்கமும் குறிப்புகளும் : 


  • இம்மூன்று சுலோகங்களும்  ஶார்தூ³ல-விக்ரீடி³தம் என்ற, வரிக்கு  19 அட்சரங்கள் கொண்ட சந்தத்தில் அமைந்தவை. மிகவும் நயமான, அனிச்சம்பூ போன்ற மென்மையான பொருள்கொண்ட இவற்றை மொழிபெயர்ப்பு செய்தல் முடியாது. வள்ளிக்கும் முருகனுக்குமிடையே விளங்கும் இனிய காதலை தெரிவிப்பவை இவை.



Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்