அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

 சுலோகங்கள்:


சுலோகம் 1:

கஸ்த்வம்ʼ ப்³ரூஹி த³யஸ்வ மே(அ)திபலித꞉ கஸ்தே பிதா காமஜித்

ஸம்ப்ராப்தோ(அ)ஸி குதோ(அ)சலாத் கிமு ப²லம்ʼ முக்²யம்ʼ ப்ரியாலோகனம் |

தன்மே(அ)த்³யைஹி ஸஹாயதாம்ʼ து³ஹிதுரித்யுக்த்வா புலிந்தே³ க³தே

வல்லீ-ஷண்முக²யோர்ப⁴வந்து ப⁴வதாம்ʼ ப⁴த்³ரப்ரதா³꞉ கேலய꞉ ||


சுலோகம் 1 - பதம்பிரித்து 


கஸ்த்வம்ʼ ப்³ரூஹி? த³யஸ்வ மே, அதிபலித꞉ ! கஸ்தே பிதா? காமஜித் !

ஸம்ப்ராப்தோ(அ)ஸி குத꞉? அசலாத் ! கிமு ப²லம்ʼ முக்²யம்ʼ? ப்ரியாலோகனம் !

`தன்மே அத்³ய ஏஹி ஸஹாயதாம்ʼ து³ஹிது꞉’ இத்யுக்த்வா புலிந்தே³ க³தே

வல்லீ-ஷண்முக²யோ꞉ ப⁴வந்து ப⁴வதாம்ʼ ப⁴த்³ரப்ரதா³꞉ கேலய꞉ .


விளக்கமும் குறிப்புகளும் :


வள்ளியின் தந்தைக்கும் , விருத்தர் வடிவில் வந்த முருகனுக்கும் நடக்கும் உரையாடலே முதலிரு வரிகள்.

“நீங்கள்  யார் என்று சொல்லவேண்டும் “, “என்னிடம் கருணை கொள்ளுங்கள், நான் முற்றும் நரைத்த கிழவன்.”,  “உங்கள் தந்தை யார் ?”, “காமனை வென்றவர்.” “எங்கிருந்து வருகிறீர்கள் ?” , “(அந்த) மலையிலிருந்து.”, “வந்ததன் முக்கிய நோக்கமென்ன? “பிரியமானவர்களைப் பார்ப்பது.”. “சரி, என் மகளுக்கு துணையாக வந்திருங்கள்” என்று கூறி, வேடர் (மன்னன்) சென்ற பின், நிகழ்ந்த வள்ளி-சண்முகரின் லீலைகள் , உங்களுக்கு மங்களம் தரவேண்டும் !

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.


சுலோகம் 2


ஶ்ரீமன்-மயூர-பூ⁴த⁴ர-ஶிக²ராப⁴ரணஸ்ய ப⁴க³வத꞉ க்ருʼபயா |

ஶ்ரீ-ஸுப்³ரஹ்மண்யஸ்ய ப்ரசோதி³தோ(அ)யம்ʼ ஜன꞉ ப்ரயததே(அ)த்ர ஹி ||


சுலோகம் 2 - பதம்பிரித்து 


ஶ்ரீமன்-மயூர-பூ⁴த⁴ர-ஶிக²ர ஆப⁴ரணஸ்ய ப⁴க³வத꞉ க்ருʼபயா !

ஶ்ரீ-ஸுப்³ரஹ்மண்யஸ்ய ப்ரசோதி³தோ அயம்ʼ ஜன꞉ ப்ரயததே அத்ர ஹி .


விளக்கமும் குறிப்புகளும் :


வளம் நிறைந்த குன்றக்குடி மலையுச்சியின் அணியாக விளங்கும் பகவான் சுப்ரமணியனின் கிருபையால் தூண்டப்பட்டு இவன் (கவி) இந்த முயற்சி செய்கிறான்

  • இது, வரிக்கு 30 மாத்திரைகள் கொண்ட ஆர்யா விருத்தத்தில் அமைந்தது. 




சுலோகம் 3


ஸௌபர்வணீமிஹ கி³ரம்ʼ ஸப²லாம்ʼ விதா⁴தும்ʼ

வாஞ்ச²ன் விசித்ர-ஸரஸாம்ʼ கவிதாம்ʼ ச லப்³து⁴ம் |

ஶ்ரீ-விஶ்வநாத²-கவிராதனுதே(அ)த்³ய ஹ்ருʼத்³யம்ʼ

ஶ்ரீமத்-குமார-சரிதாம்ருʼத-வர்ஷி காவ்யம் ||


சுலோகம் 3 - பதம்பிரித்து 


ஸௌபர்வணீம்ʼ இஹ கி³ரம்ʼ ஸப²லாம்ʼ விதா⁴தும்ʼ

வாஞ்ச²ன் விசித்ர-ஸரஸாம்ʼ கவிதாம்ʼ ச லப்³து⁴ம் .

ஶ்ரீ-விஶ்வநாத²-கவி꞉ ஆதனுதே அத்³ய ஹ்ருʼத்³யம்ʼ

ஶ்ரீமத்-குமார-சரிதாம்ருʼத-வர்ஷி காவ்யம் .


விளக்கமும் குறிப்புகளும் :


தன் வாக்கை புகழ்மிக்கதாகவும், பயனுள்ளதாகவும் செய்யவும், பல்சுவையும் கொண்ட கவிதையை (புனையும் திறம்) அடைவதற்கும் , ஸ்ரீவிஸ்வநாதகவி, குமரனின் செய்கைகளை அமிர்தமாக பொழியும் இந்த காவியத்தை இயற்றுகிறார்.

  • இது, வரிக்கு 14 அக்ஷரம் கொண்ட வஸந்ததிலகம்  சந்தத்தில் அமைந்தது


சுலோகம் 4 


ஜஹது கால-ப⁴யம்ʼ ரஸிகா ஜனா꞉

த³த⁴து காவ்யமித³ம்ʼ ஹ்ருʼதி³ வாசி ச |

த³த³து ஶம்பு⁴-ஸுதே நிஜ-சேதஸ꞉

சரிதுமந்தர-மாஶ்ரித-வத்ஸலே ||


சுலோகம் 4 - பதம்பிரித்து 


ஜஹது கால-ப⁴யம்ʼ ரஸிகா ஜனா꞉

த³த⁴து காவ்யம்ʼ இத³ம்ʼ ஹ்ருʼதி³ வாசி ச .

த³த³து ஶம்பு⁴-ஸுதே நிஜ-சேதஸ꞉

சரிதும்ʼ அந்தர-மாஶ்ரித-வத்ஸலே 


விளக்கமும் குறிப்புகளும் :


(இக்காவியத்தின்) ரசிகர்கள் எமபயத்தை விடட்டும். இந்த நூலை மனதிலும் வாக்கிலும் தரிக்கட்டும். வந்தடைந்தவர்களிடம் கருணை காட்டும்  சிவகுமாரனிடத்தில், அவன் உள்ளே சஞ்சரிக்க  தங்கள் மனதை அளிக்கட்டும்.

  • இது, வரிக்கு 12 அக்ஷரம் கொண்ட த்³ருத-விலம்பி³தம்  சந்தத்தில் அமைந்தது



சுலோகம் 5


லக்ஷ்மீம்ʼ பக்ஷ்மலயத்யுதா³ர-லலிதாம்ʼ வ்யாகோசயத்யன்வஹம்ʼ

வாசம்ʼ மாக்ஷிக-சாதுரீ-பரஜுஷம்ʼ புஷ்ணாதி புண்யம்ʼ யஶ꞉ |

ஆத⁴த்தே ப⁴ஜதா-மரோக³-தனுதா-மன்யாத்³ருʼஶம்ʼ வைப⁴வம்ʼ

த³த்தே தா³ருண-மோஹ-வாரண-சணம்ʼ போ³த⁴ம்ʼ ந்ருʼணாம்ʼ ஷண்முக²꞉ ||


சுலோகம் 5 - பதம்பிரித்து 


லக்ஷ்மீம்ʼ பக்ஷ்மலயதி உதா³ர-லலிதாம்ʼ, வ்யாகோசயதி அன்வஹம்

வாசம்ʼ மாக்ஷிக-சாதுரீ-பரஜுஷம்ʼ, புஷ்ணாதி புண்யம்ʼ யஶ꞉ .

ஆத⁴த்தே ப⁴ஜதாம்ʼ அரோக³-தனுதாம்ʼ, அன்யாத்³ருʼஶம்ʼ வைப⁴வம்ʼ

த³த்தே தா³ருண-மோஹ-வாரண-சணம்ʼ போ³த⁴ம்ʼ ந்ருʼணாம்ʼ ஷண்முக²꞉ 


விளக்கமும் குறிப்புகளும் :


தன்னை பஜிக்கும் மனிதர்களுக்கு சண்முகன் செல்வத்தை செழிக்கச் செய்கிறான்; அழகும் நயமும் கொண்ட, தேனின் சிறப்பை (இனிமையை) கொண்டு பிறரை மகிழ்விக்கும் வாக்கை மலர்விக்கிறான். தூயப்புகழை வளர்க்கிறான். நோயற்ற உடலையும் அரியதான பெருமையையும் தருகிறான்; கொடிய மோகத்தை தடுத்து நிறுத்தும் ஞானத்தையும் அளிக்கிறான்.

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அஷ்டபதி பாடல்  (மாளவ ராகம் , ஆதி தாளம் )

அமர-நதீ³-ஸலிலே, (ப்ரபோ⁴ குமார) ரவி-கோடி-ஸமானம் .

பனித-மஹாமுனி-க்ருʼத-ப³ஹுமானம்ʼ . ஷண்முக² த்⁴ருʼத-தைஜஸ-ரூப ..

ஜய ஶிகி²ஶைல-பதே .. 1..


(பதப்பிரிவு தேவையில்லை )


விளக்கம்:


சண்முகனே ! தேவநதியான கங்கையின் நீரில், கோடி சூரியர்களுக்கு நிகராகவும், போற்றுதலுக்குரிய மகாமுனிவர்களால் ஏற்றம் செய்யப்பட்டதாகவும்,  நெருப்புப்பொறிகளின் வடிவை நீ கொண்டாய்.


மயில்மலையான குன்றக்குடியின் தலைவனே! குமார பிரபுவே ! நீ வெல்க !


ஹிம-கி³ரி-தட-நிகடே, (ப்ரபோ⁴ குமார) ஶர-கானன-நிஷ்டே² .

தத³னு விராஜித-ஜலஜ-வரிஷ்டே² . ஷண்முக² ஶ்ரித-தை³வத-ஜால .. 

ஜய ஶிகி²ஶைல-பதே .. 2..


(பதப்பிரிவு தேவையில்லை )


விளக்கம்:


சண்முகனே !  அதன்பிறகு, இமயமலையின் தாழ்வரையில், நாணல்காட்டில் இடம்கொண்ட, ஒளிவீசும் சிறந்த தாமரைமலர்களில் (தோன்றி), தேவர்களின் கூட்டங்களால் வழிபடப் பட்டாய் !


மயில்மலையான குன்றக்குடியின் தலைவனே! குமார பிரபுவே ! நீ வெல்க !


விபு³த⁴-ஜன-ஸமுத³யே, (ப்ரபோ⁴ குமார) பரிவாரக-பா⁴வம் .

க³தவதி யோஜித-ஶாவக-பா⁴வம் . ஷண்முக² ருசி-ப⁴ர ரமணீய .. 

ஜய ஶிகி²ஶைல-பதே .. 3..


(பதப்பிரிவு தேவையில்லை )


விளக்கம்:


சண்முகனே !  தேவர்கள் கூட்டம் உன்னைச் சுற்றிக்கொண்டு நிற்க, சிறுகுழந்தையின்  வடிவம் பொருந்தி மிகுந்த அழகோடு விளங்கினாய்.


மயில்மலையான குன்றக்குடியின் தலைவனே! குமார பிரபுவே ! நீ வெல்க !


ஹரி-வசஸோபக³தே, (ப்ரபோ⁴ குமார) ப³ஹுலா-ஸமுதா³யே .

த்விமமனுஜாக்³ருʼஹி ஹித-ஸ்னுத-பேயே . ஷண்முக² ஶிஶு-ஷட்கல-தீ³ப்த ..  

ஜய ஶிகி²ஶைல-பதே .. 4..


பதம் பிரித்து :


ஹரி-வசஸா உபக³தே, (ப்ரபோ⁴ குமார) ப³ஹுலா-ஸமுதா³யே .

து “இமம்ʼ அனுஜாக்³ருʼஹி ஹித-ஸ்னுத-பேயே'' . ஷண்முக² ஶிஶு-ஷட்கல-தீ³ப்த .

ஜய ஶிகி²ஶைல-பதே .. 4..


விளக்கமும் குறிப்புகளும் :


“இவனை, இதமாக  தாய்ப்பால் தந்து பார்த்துக் கொள்ளுங்கள்” என்ற திருமாலின் உரைக்கேட்டு கார்த்திகை மாதர் அருகில் வந்ததும், ஆறு குழந்தைகளாக மாறி விளங்கினாய்!

குறிப்பு  : பஹுலா என்பது கிருத்திகை நக்ஷத்திரத்தின் மறுபெயர்.


மயில்மலையான குன்றக்குடியின் தலைவனே! குமார பிரபுவே ! நீ வெல்க !




வ்ருʼஷப⁴-க³தே கி³ரிஶே, (ப்ரபோ⁴ குமார) ஸ்வ-விலோகன-காமே .

ஸமுபக³தே முத³மாபித-ஸோமே . ஷண்முக² கி³ரிஜா-கலிதைக்ய .. 

ஜய ஶிகி²ஶைல-பதே .. 5..


(பதப்பிரிவு தேவையில்லை )


விளக்கம்:


சண்முகனே ! தன் மகனைக்காணும் ஆவலுடன், சிவபெருமான் விடையேறி வந்து, நெருங்கி களிப்படைந்த போது, மலைமகள் பார்வதியால் ஒரே குழந்தையாக செய்யப்பட்டாய் !


மயில்மலையான குன்றக்குடியின் தலைவனே! குமார பிரபுவே ! நீ வெல்க !


பயஸி வத³ன-க³லிதே, (ப்ரபோ⁴ குமார) ஜனனீ-ஸுவிதீர்ணே .

முனி-தனயான்வித-ஸரஸி ஸுபூர்ணே . ஷண்முக² ஶ்ரித-ஶைல-ஸுதாங்க .. 

ஜய ஶிகி²ஶைல-பதே .. 6..


(பதப்பிரிவு தேவையில்லை )


விளக்கமும் குறிப்புகளும் :


சண்முகனே ! உன் தாயான பார்வதி நன்கு அளித்த பால், உன் கடைவாயிலிருந்து சிறிது ஒழுகி,  முனிப்புதல்வர்கள் இருக்கும் குளத்தில் நிறைய, நீ மலைமகளின் மடியை  அடைந்தாய்.


குறிப்பு : தந்தையின் சாபம் பெற்று மீன்களாகியிருந்த பராசரமுனியின் குமாரர்கள் , அம்பிகையின் திருமுலைப்பாலை முருகனது உச்சிஷ்டமாக அருந்தி தூய்மையடைந்து, சாப விமோசனம் பெற்றார்கள்


மயில்மலையான குன்றக்குடியின் தலைவனே! குமார பிரபுவே ! நீ வெல்க !



த்வயி சலதி ஸபித்ருʼகே, (ப்ரபோ⁴ குமார) ரஜதாசல-ஶ்ருʼங்கே³ .

விவித⁴-விலாஸ-க்ரது-வஸித-துங்கே³ . ஷண்முக² ஸுர-ப⁴ய-ஹர-லீல .. 

ஜய ஶிகி²ஶைல-பதே .. 7..


(பதப்பிரிவு தேவையில்லை )


விளக்கம்:


சண்முகனே ! பெற்றோர்களுடன் நீ வெள்ளியங்கிரியான கைலாசம் சென்றதும், பலவித விளையாட்டுக்களில் உன் வலிமையை காட்டி அம்மலையில் வசித்து, தேவர்களின் பயங்களை லீலைகளால் போக்கினாய்.


மயில்மலையான குன்றக்குடியின் தலைவனே! குமார பிரபுவே ! நீ வெல்க !


ஸஸுஹ்ருʼத³கி²ல-பு⁴வனே, (ப்ரபோ⁴ குமார) க்ருʼதவானஸி லீலாம் .

இதர-ஸுது³ர்லப⁴-விப⁴வ-விஶாலாம் . ஷண்முக² ப³ஹு-விக்ரம-ஶீல .. 

ஜய ஶிகி²ஶைல-பதே .. 8..


பதம் பிரித்து :

ஸஸுஹ்ருʼத்³ அகி²ல-பு⁴வனே, (ப்ரபோ⁴ குமார) க்ருʼதவான் அஸி லீலாம் .

இதர-ஸுது³ர்லப⁴-விப⁴வ-விஶாலாம் . ஷண்முக² ப³ஹு-விக்ரம-ஶீல ..

ஜய ஶிகி²ஶைல-பதே .. 8..


விளக்கம்:


மிகுந்த பராக்கிரமமுள்ள சண்முகனே !  உன் தோழர்களோடு, உலகெங்கும், பிறர் செய்ய முடியாத பெருமைகள் நிறைந்த விளையாட்டுக்களை புரிந்தாய்!


மயில்மலையான குன்றக்குடியின் தலைவனே! குமார பிரபுவே ! நீ வெல்க !


ஸ்வீகுரு லலித-பத³ம்ʼ, (ப்ரபோ⁴ குமார) ஸ்தவமதி-ரஸ-ப⁴ரிதம் .

விஶ்வநாத²-கவினா க்ருʼதமேதம் . ஷண்முக² நவ-வீர-ஸமேத .. 

ஜய ஶிகி²ஶைல-பதே .. 9..


பதம் பிரித்து :


ஸ்வீகுரு லலித-பத³ம்ʼ, (ப்ரபோ⁴ குமார) ஸ்தவம்ʼ அதி-ரஸ-ப⁴ரிதம் .

விஶ்வநாத²-கவினா க்ருʼதம்ʼ ஏதம் . ஷண்முக² நவ-வீர-ஸமேத ..

ஜய ஶிகி²ஶைல-பதே .. 9..


விளக்கம்:


நவ வீரர்களோடு கூடியிருக்கும் சண்முகனே ! அழகிய சொற்களுடன், மிக ரசம் நிறைந்ததாக விச்வநாத கவி செய்த இந்த துதியை ஏற்றுக்கொள்வாய்!


மயில்மலையான குன்றக்குடியின் தலைவனே! குமார பிரபுவே ! நீ வெல்க !


Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்