Posts

முன்னுரை

Image
கீதகாங்கேயம் என்ற இந்த சிறுகாவியம், 20ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. நூலாசிரியர் கானாடுகாத்தான் ஸ்ரீ விசுவநாத கவி. அவரைப்பற்றிய செய்திகளும் , இந்நூலின் தேவநாகரி வடிவமும் இங்கு காணலாம்: https://sanskritdocuments.org/doc_subrahmanya/gItagAngeyam.html https://sanskritdocuments.org/doc_subrahmanya/gItagAngeyamsaTIka.html (நூலை, தமிழ், மலையாளம், ஆங்கிலம் முதலிய இன்னும் பல லிபிகளிலும் மாற்றிக்கொண்டும் காணலாம் ) கீதகோவிந்தத்திலும் ஸ்ரீ ஜெயதேவரிடத்தும் கொண்ட பக்தியால் அவரைப்பின்பற்றி, அதே உவமைகளும் , அதே சொற்களும் கூட பல இடங்களில்  ஆசிரியர் கையாண்டிருந்தாலும், இக்காவியத்திற்கே என்றுள்ள புதுமைகள், பலவித சந்தங்களிலுள்ள சுலோகங்கள், முருகன் புகழை அற்புதமாக வர்ணிக்கும் பாட்டுக்கள் - இவற்றைப்பார்க்கும்போது, கலைமகளின் பூரண கடாட்சம் பெற்றவர் இக்கவி என்று அறியலாம். ஒவ்வொரு சர்க்கத்தின் முடிவிலும் அவர் கூறும் மிக அழகான பிரார்த்தனை சுலோகங்கள் சிறந்த பலச்ருதியாகவும் அமைந்துள்ளன.  காவியங்களில் காணப்படும் நவரசங்களில் சிறப்பான இடம் சிருங்கார ரசத்துக்கு உண்டு. எத்தரப்பினரும் விரும்பும் சுவை இத்துறைக்கு உண்டு.

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்

Image
  சுலோகம் 1:  அத² வல்லீ ரதி-ரப⁴ஸ-ஶ்ராந்தா ஸப்ரேம-வசன-மித³-மூசே | ஸானந்த³ம்ʼ ஶிவஸூனும்ʼ மந்த³ம்ʼ மந்த³ம்ʼ மரந்த³-ரஸ-ருசிரம் || சுலோகம் 1 - பதம்பிரித்து: அத² வல்லீ ரதி-ரப⁴ஸ-ஶ்ராந்தா ஸப்ரேம-வசனம்ʼ இத³ம்ʼ ஊசே  ஸானந்த³ம்ʼ ஶிவஸூனும் மந்த³ம்ʼ மந்த³ம்ʼ மரந்த³-ரஸ-ருசிரம்  விளக்கமும் குறிப்புகளும் : பிறகு, வள்ளி, இன்பத்தால் களைத்தவளாக, மிக மென்மையாக,  பிரேமையுடன், மகிழ்வுற்றிருந்த சிவகுமாரனிடம், தேன்போல  இனிமையாக இந்த வசனங்களைச்  சொன்னாள். இது “ஆர்யா” என்ற சந்தத்தில் உள்ளது. ஒவ்வொரு வரியிலும் (12+18) 30 மாத்திரைகள்  கொண்டது. —---------------------------------------------------------------------------------------------------------------------- அஷ்டபதீ³ - 24 (மங்க³லகௌஶிக ராக³ம், ஏக தாளம்) ப்ரிய ஶிவஸம்ப⁴வ ! லம்ப³ய ம்ருʼக³மத³-சித்ரக-மத்ரப-மேவ மே வத³ன-தலே விமலே மது⁴கர-மிவ புஷ்கர-புஷ்ப-மனோரமே .. 1.. (பதப்பிரிவு : சித்ரகம் + அத்ரபம் + ஏவ, மது⁴கரம் + இவ) விளக்கமும் குறிப்புகளும் : அன்புக்குரிய சிவகுமாரரே ! தாமரைபோன்ற மனம்கவரும் மாசற்ற என் முகத்தில், கருவண்டு போன்ற கஸ்துரி திலகத்தை தயங்காமல் இட்டுவிடுங்க

அஷ்டபதீ³ - 23 - மூலமும் பொருளும்

Image
  சுலோகம் 1:  தத³னு ஸஹஸா யாதே கார்யச்ச²லேன ஸகீ²ஜனே ஸத³ர-மத⁴ர-ஸ்னிக்³த⁴-ஸ்பீ²த-ஸ்மிதார்த்³ர-நதானனாம் | குஸும-ஶயனே ந்யஸ்தாபாங்கா³-மனங்க³-வஶம்ʼவதா³ம்ʼ ஶரவணப⁴வோ வாசம்ʼ ப்ராஹ ப்ரியாம்ʼ ஸகுதூஹலம் || சுலோகம் 1 - பதம்பிரித்து: தத³னு ஸஹஸா யாதே கார்யச்ச²லேன ஸகீ²ஜனே ஸத³ரம் அத⁴ர-ஸ்னிக்³த⁴-ஸ்பீ²த-ஸ்மிதார்த்³ர-நதானனாம் குஸும-ஶயனே ந்யஸ்தாபாங்கா³ம் அனங்க³-வஶம்ʼவதா³ம் ஶரவணப⁴வோ வாசம்ʼ ப்ராஹ ப்ரியாம்ʼ ஸகுதூஹலம்  விளக்கமும் குறிப்புகளும் : அதன்பிறகு ,  ஏதோ வேலையுள்ளது என்ற வியாஜத்துடன் தோழிமார் சென்றுவிட,  அச்சத்துடன், இதழ்களில் அன்புகொண்டு பெருகும் புன்னகையால் நிறைந்து, (வெட்கத்தால்) குனிந்த முகத்துடனிருந்த  தன் அன்புக்குரியவளிடம் சரவணபவன் மகிழ்ச்சியோடு இந்த சொற்களைக் கூறினான். இது ஹரிணீ  - வரிக்கு 17 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.  —-------------------------------------------------------------------------------------------------------------------- அஷ்டபதீ³ - 23 (நாத³நாமக்ரியா ராக³ம், ஆதி³ தாளம் ) விகஸித-ஸும-ஶயனே மம ஸுந்த³ரி கலய தவ ம்ருʼது³ல-பாதௌ³ . இத³மபி மார்த³வ-கு³ணமதி⁴லப⁴தாம்ʼ ஸ்பர்ஶன-மண்யவிபே⁴தௌ³ .. 1.. (