அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்

 சுலோகம் 1: 

அத² வல்லீ ரதி-ரப⁴ஸ-ஶ்ராந்தா ஸப்ரேம-வசன-மித³-மூசே |

ஸானந்த³ம்ʼ ஶிவஸூனும்ʼ மந்த³ம்ʼ மந்த³ம்ʼ மரந்த³-ரஸ-ருசிரம் ||


சுலோகம் 1 - பதம்பிரித்து:


அத² வல்லீ ரதி-ரப⁴ஸ-ஶ்ராந்தா ஸப்ரேம-வசனம்ʼ இத³ம்ʼ ஊசே 

ஸானந்த³ம்ʼ ஶிவஸூனும் மந்த³ம்ʼ மந்த³ம்ʼ மரந்த³-ரஸ-ருசிரம் 


விளக்கமும் குறிப்புகளும் :


பிறகு, வள்ளி, இன்பத்தால் களைத்தவளாக, மிக மென்மையாக,  பிரேமையுடன், மகிழ்வுற்றிருந்த சிவகுமாரனிடம், தேன்போல  இனிமையாக இந்த வசனங்களைச்  சொன்னாள்.

  • இது “ஆர்யா” என்ற சந்தத்தில் உள்ளது. ஒவ்வொரு வரியிலும் (12+18) 30 மாத்திரைகள்  கொண்டது.


—----------------------------------------------------------------------------------------------------------------------

அஷ்டபதீ³ - 24 (மங்க³லகௌஶிக ராக³ம், ஏக தாளம்)


ப்ரிய ஶிவஸம்ப⁴வ ! லம்ப³ய ம்ருʼக³மத³-சித்ரக-மத்ரப-மேவ மே

வத³ன-தலே விமலே மது⁴கர-மிவ புஷ்கர-புஷ்ப-மனோரமே .. 1..


(பதப்பிரிவு : சித்ரகம் + அத்ரபம் + ஏவ, மது⁴கரம் + இவ)


விளக்கமும் குறிப்புகளும் :


அன்புக்குரிய சிவகுமாரரே ! தாமரைபோன்ற மனம்கவரும் மாசற்ற என் முகத்தில், கருவண்டு போன்ற கஸ்துரி திலகத்தை தயங்காமல் இட்டுவிடுங்கள். 

  •  "அணி திருத்துதல்" என்ற அகப்பொருள் துறையைச் சார்ந்தது இந்தப் பாட்டு 


பல்லவீ

ஶிவநந்த³னே ஶுப⁴-மானஸா கே²லதி . கத²யாமாஸ ஸா ..


விளக்கம்:


மகிழ்ச்சி பொலியும் மனம்கொண்ட வள்ளி, உல்லாசமாக இருந்த சிவகுமாரனிடம் சொன்னாள்.


அத⁴ரமிமம்ʼ மம நிர்மித-யாவக-லேபஜ-ரூப-விபா⁴ஸுரம் .

கலய நிரந்தர-த³ந்தபத³ம்ʼ தவ ஸரப⁴ஸ-மேவ ஸஹாத³ரம் .. 2..


(பதப்பிரிவு : அத⁴ரம் + இமம், ஸரப⁴ஸம் + ஏவ)


விளக்கமும் குறிப்புகளும் :


அன்புடன், தங்களின் பற்களின் சுவடுகள் எங்கும் அழுந்தப்பதிந்த  இந்த என் இதழை, வர்ணம் பூசியதால் பொலிவுற்ற ரூபம் பெறும்படி செய்யுங்கள். 

  • யாவகம்  என்பது ஒரு தானியத்திலிருந்து செய்யப்படும்  உதட்டுச்சாயம். பாதத்திலும் இடலாம்.


க⁴ன-நிப⁴-சிகுர-குலம்ʼ மம மண்ட³ய கேலி-கலா-மருதா³குலம் .

ப³ஹுவித⁴-குஸுமித-ஸும-ததி-க்ருʼத-சபலாயித-மாலிகயா(அ)துலம் .. 3..


விளக்கம்


கேளிக்கைகளாகிய காற்றில் அலைக்கப்பட்ட மேகம் போன்ற என்  குழல்கற்றைகளை பலவித மலர்ந்த பூக்களின் சரமாகிய மின்னலுடன் விளங்கும்படி அலங்காரம் செய்யுங்கள்.


ப்ரதனு ஸுமுக²-ஸவிஶேஷ-விஶேஷக-மதி-நிபி³டோ³ரஸிஜ-த்³வயே .

ஹிம-க⁴னஸார-படீர-ரஸேன மதங்க³ஜ-கும்ப⁴-தடாத்³வயே .. 4..


(பதப்பிரிவு : விஶேஷகம் + அதி)


விளக்கம்:


யானை மத்தகத்தைப் போன்ற நெருக்கமான இருதனங்களும், பனித்துளியும் கற்பூரமும் சேர்த்த சந்தனக்கலவையால் சிறந்துவிளங்கும்படி பூசிவிடுங்கள் .


அதி⁴கடி யோஜய மே ஜயஶக்தி-த⁴ர ஸ்வய-முத்ஸ்வன-மேக²லாம் .

ஹரித-படோபரி த்ருʼண-ததி-க³த-ஹரிகோ³ப-கு³ணாவலி-மஞ்ஜுலாம் .. 5..


விளக்கம்:


வெற்றிவேல் தாங்கியவரே ! பேரோசை எழுப்பும் மேகலையை  தானே இடையில்  கட்டிவிடுங்கள். என் பச்சைப்புடவையின்மேல் அந்த (மாணிக்கம் பதித்த) மேகலை, புல்விரிப்பில் இருக்கும் (சிவந்த) இந்திரகோபப் பூச்சியின் வரிசைபோல் எழிலுடன் இருக்கும். 


ஆகலயாஞ்ஜன-ரஞ்ஜனமாஶ்ரித-கஞ்ஜன-ப⁴ஞ்ஜன-நைபுணே .

ப்ரமத³-நிரர்க³ல-நிர்க³லத³ஶ்ரு-நிஸர்க³-விஸர்க³-யுஜீக்ஷணே .. 6..


(பதப்பிரிவு : ஆகலய + அஞ்ஜன, ரஞ்ஜனம் + ஆஶ்ரித, யுஜி + ஈக்ஷணே)


விளக்கமும் குறிப்புகளும் :


ஆனந்தக்கண்ணீர் தடையின்றி இயல்பாக பெருகும் என் கண்களில் மையினால் அழகு செய்யுங்கள். (என்னை) ஆச்ரயித்தவர்களின் காமங்களை அழிப்பதில் சாமர்த்தியமுள்ளவை அக்கண்கள்.

  • வள்ளியை புகலாக அடைந்தவர் முக்தி பெறுவார் என்பது பொருள்.


கங்கண-மங்க³த³-ஸங்க³த-மிஹ குரு மம சதுரேண கரேண தே .

பா³ஹௌ கு³ச்ச²-லஸச்ச²வி-ரஜ்ய-த³ஶோக-ப்⁴ருʼஶோபம ஆயதே .. 7..


(பதப்பிரிவு : கங்கணம் + அங்க³த³, ஸங்க³தம் + இஹ, ரஜ்யத் + அஶோக)


விளக்கம்:


கொத்தாக விளங்கும் சிவந்த அசோகமலர்களை உவமையாக சொல்லக்கூடிய என் நீண்ட கையில், தங்கள் திறமைமிக்க கையால் வளையல்களும் தோள்வளைகளும் இணைத்துவிடுங்கள். 


ஶ்ரவஸி ச குண்ட³ல-மண்ட³ல-மண்ட³ன-முரஸி விலாஸய மாலிகாம் .

ரதி-விஷமம்ʼ ச ஸமம்ʼ ஸகலம்ʼ குரு மம பரிபாலய நாயிகாம் .. 8..


(பதப்பிரிவு : மண்ட³னம் + உரஸி )


விளக்கம்:


காதினில் குண்டல வளையங்களால் அலங்காரம் செய்து, மார்பில் மாலையை விளங்கச்செய்யுங்கள். போகத்தால் கலைந்த எல்லாவற்றையும் சரிசெய்து தங்கள் நாயகியான என்னைக் காத்திடுங்கள்.


விஶ்வநாத²-கவி-விரசித-முசிதம்ʼ ப்ரியஶிவ-ஸம்ப⁴வ-ஸங்கதே² .

லஸது ரஸஜுஷாம்ʼ சேதஸி விது³ஷாம்ʼ பூர்ண-புராண-மனோரதே² .. 9..


(பதப்பிரிவு :  விரசிதம் + உசிதம்)


விளக்கம்:


விசுவநாத கவி இயற்றிய பொருத்தமான இப்பாட்டு, சிவகுமாரனைப்பற்றிய சம்பாஷணையில் அன்புகொண்ட,  கவிதையின் சுவையுணர்ந்த,  பழைய ஆசைகள் எல்லாம் முடிந்து, நிறைவுடன் இருக்கும் அறிவாளிகளின் மனதில் ஒளிரட்டும் .

—-----------------------------------------------------------------------------------------------------------------------


 சுலோகம் 2: 


அத² ஸ கருணா-ஸிந்து⁴꞉ ப³ந்து⁴꞉ புலிந்த³-தனூ-பு⁴வோ

வ்யரசய-த³யம்ʼ த³க்ஷோ வக்ஷோருஹே மகரீக்ரியாம் |

ஹ்ருʼதி³ பரிகரோதா³ரம்ʼ ஹாரம்ʼ ரணன்-மணி-நூபுரம்ʼ

ருசிர-வஸனம்ʼ நேத்ரே ஶ்ரோத்ரே(அ)ஞ்ஜனம்ʼ மணி-குண்ட³லம் ||  


சுலோகம் 2 - பதம்பிரித்து:


அத² ஸ கருணா-ஸிந்து⁴꞉ ப³ந்து⁴꞉ புலிந்த³-தனூ-பு⁴வ꞉

வ்யரசயத்³ அயம்ʼ த³க்ஷ꞉ வக்ஷோருஹே மகரீக்ரியாம் .

ஹ்ருʼதி³ பரிகரோதா³ரம்ʼ ஹாரம்ʼ ரணன்-மணி-நூபுரம்

ருசிர-வஸனம்ʼ நேத்ரே ஶ்ரோத்ரே அஞ்ஜனம்ʼ மணி-குண்ட³லம்


விளக்கமும் குறிப்புகளும் :


பிறகு, கருணைக்கடலான, வேடர்மகளின் இனிய தோழரான அவர், திறமைசாலியாக அவள் மார்பினில் மகரரேகை அலங்காரமும், இதயத்தில் பல அழகிய ஆரங்களும், ஒலிக்கும் ரத்தினச் சிலம்பும், அழகிய துகிலும் கண்ணில் மையும், காதில் மணிகுண்டலமும் இட்டு அலங்கரித்தார்.

  • இது ஹரிணீ - வரிக்கு 17 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்


சுலோகம் 3:


உத்³யன்-மான்மத²-ஜன்ய-ஜன்ய-சலன-ஸ்தா²னா விபூ⁴ஷா꞉ புன꞉

ஸௌஹார்தே³ன ஸமம்ʼ வனேசர-பு⁴வி ஸ்வாமீ ப்ரதிஷ்டா²பயன் |

ப்ராப்தைதத்ப்ரிய-பா³ந்த⁴வானுமதிரப்யேனா-முதூ³ஹ்யானயா

ப்ராப்ய ஸ்கந்த³கி³ரிம்ʼ ஸுதாம்ʼ ஸுரபதேஸ்தன்வன் த³தா³து ஶ்ரியம் ||


சுலோகம் 3 - பதம்பிரித்து:


உத்³யன்-மான்மத²-ஜன்ய-ஜன்ய-சலன-ஸ்தா²னா விபூ⁴ஷா꞉ புன꞉

ஸௌஹார்தே³ன ஸமம்ʼ வனேசர-பு⁴வி ஸ்வாமீ ப்ரதிஷ்டா²பயன் .

ப்ராப்த ஏதத்ப்ரிய-பா³ந்த⁴வ அனுமதி꞉ அபி ஏனாம்ʼ உதூ³ஹ்ய அனயா

ப்ராப்ய ஸ்கந்த³கி³ரிம்ʼ ஸுதாம்ʼ ஸுரபதே꞉ தன்வன் த³தா³து ஶ்ரியம் 


விளக்கமும் குறிப்புகளும் :


சுவாமி நட்புடன். வேடர்மகளான வள்ளிக்கு, ஸ்தானம் கலைந்த அணிகலன்களை மீண்டும் திருத்தி, அவளுடைய  பிரியமான பந்துக்களின் இசைவைப்பெற்று அவளை மணந்துகொண்டு, அவளுடன் ஸ்கந்தகிரி சென்றடைந்து, இந்திரன்மகளான தெய்வானையிடம் சேர்ப்பித்தார்.

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்


சுலோகம் 4:


மது⁴ரமிதி மரந்த³ம்ʼ பா²ணிதம்ʼ சேக்ஷுஸாரம்ʼ

மது⁴-ரஸமபி து³க்³த⁴ம்ʼ மன்யதா-மன்ய ஏவ |

கு³ஹ-ப⁴ஜன-பராணாம்ʼ ஸார-ஸங்க்³ராஹகாணாம்ʼ

அதி-மது⁴ரமித³ம்ʼ ஸ்யாத்³-கீ³த-கா³ங்கே³யமேவ || 


சுலோகம் 4 - பதம்பிரித்து:


மது⁴ரமிதி மரந்த³ம்ʼ பா²ணிதம்ʼ ச இக்ஷுஸாரம்ʼ

மது⁴-ரஸம் அபி து³க்³த⁴ம்ʼ மன்யதாம்ʼ அன்ய ஏவ .

கு³ஹ-ப⁴ஜன-பராணாம்ʼ ஸார-ஸங்க்³ராஹகாணாம்

அதிமது⁴ரம் இத³ம்ʼ ஸ்யாத்³  கீ³த-கா³ங்கே³யம்ʼ ஏவ


விளக்கமும் குறிப்புகளும் :


தேனும் பாகும் கரும்புச்சாறும் பாலும் இனியவை என்று மற்றவர் கருதலாம். குஹனை வழிபடுவதில் நோக்கமுள்ள, சாரமானதை மட்டும் எடுத்துக்கொள்ளும் குணமுள்ளவர்களுக்கு கீதகாங்கேயம் என்ற காவியமே மிகவும் இனியது எனலாம்.

  • இது மாலினீ  - வரிக்கு 15 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்




சுலோகம் 5:


ஸகாருண்ய꞉ பாயாத் ஸ்மர-விஜயி-லாவண்ய-ஜலதி⁴꞉

தருண்யாஶ்லிஷ்டாங்க³꞉ ஸுர-பரிஷத³க்³ரண்யபி⁴னத꞉ |

ஶரண்யோ லோகானாம்ʼ த்ரித³ஶ-முனி-பண்யாமித-கு³ண꞉

ஸ மாம்ʼ ஸுப்³ரஹ்மண்ய꞉ ஶிகி²-கி³ரி-வரேண்யாக்³ர-ஸத³ன꞉ || 


சுலோகம் 5 - பதம்பிரித்து: 


ஸகாருண்ய꞉ பாயாத் ஸ்மர-விஜயி-லாவண்ய-ஜலதி⁴꞉

தருணீ ஆஶ்லிஷ்ட அங்க³꞉ ஸுர-பரிஷத்³ அக்³ரணீ அபி⁴னத꞉ .

ஶரண்ய꞉  லோகானாம்ʼ த்ரித³ஶ-முனி-பண்ய அமித-கு³ண꞉

ஸ மாம்ʼ ஸுப்³ரஹ்மண்ய꞉ ஶிகி²-கி³ரி-வரேண்ய அக்³ர-ஸத³ன꞉


விளக்கமும் குறிப்புகளும் :


கருணைமிகுந்தவன், காமதேவனை வெல்லும் அழகுக்கடல், இளங்குமரிகளான தெய்வானை மற்றும் வள்ளியால் அணைக்கப்பட்டவன், தேவர்தலைவனால் வணங்கப்பட்டவன், உலகங்களுக்கெல்லாம் புகலானவன், தேவரும் முனிவரும் போற்றும் அளவற்ற குணங்களுடையவன். மலைகளிற்சிறந்த  மயில்மலையான குன்றக்குடியின் உச்சியில் வசிப்பவன். அந்த சுப்ரமணியன் என்னைக் காக்கட்டும்.

  • இது ஶிக²ரிணீ - வரிக்கு 17 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்


சுலோகம் 6: 


வல்லீ-ஸஸ்மித-காம-மந்த²ர-சலாபாங்க³-ப்ரபா⁴மண்ட³லீ-

வ்யாகோசார்ஜுன-மேசகோத்பல-ஸர-ப்⁴ராஜச்சி²ரோதி⁴꞉ ஸதா³ |

ஸுப்ரீதஸ்ஸும-ஶேக²ரஸ்ய தனுஜோ(அ)ஸ்மாகம்ʼ ஸ்வ-ப⁴க்தேஷ்ட-க்ருʼத்

ஸுப்³ரஹ்மண்ய உதா³ர-மங்க³ல-நிதி⁴꞉ ஸம்பாத³யேன்-மங்க³லம் ||


சுலோகம் 6 - பதம்பிரித்து: 


வல்லீ-ஸஸ்மித-காம-மந்த²ர-சல அபாங்க³-ப்ரபா⁴மண்ட³லீ-

வ்யாகோச அர்ஜுன-மேசக உத்பல-ஸர-ப்⁴ராஜத் ஶிரோதி⁴꞉ ஸதா³ .

ஸுப்ரீத꞉ ஸும-ஶேக²ரஸ்ய தனுஜோ அஸ்மாகம்ʼ ஸ்வ-ப⁴க்தேஷ்ட-க்ருʼத்

ஸுப்³ரஹ்மண்ய உதா³ர-மங்க³ல-நிதி⁴꞉ ஸம்பாத³யேத் மங்க³லம்


விளக்கமும் குறிப்புகளும் :


வள்ளியின் (வெண்)புன்னகையோடு கூடிய, காதலுடன் மெதுவாக செல்லும் (கரிய) கடைக்கண் பார்வைகள் ஆகிய மலர்ந்த வெள்ளை மற்றும் நீல அல்லிமலர்களின் மாலையுடன் சோபிக்கும் கழுத்துடையவன். திங்களணிந்த சிவபெருமானின் மகன், தன் பக்தர்களின் இஷ்டங்களைத் தருபவன், வள்ளன்மை பொருந்திய மங்கலநிதி. அந்த சுப்ரமணியன் நமக்கு எப்போதும்  மங்களங்களைத் தரட்டும்.

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்


சுலோகம் 7: 


ரம்யம்ʼ ஶ்ரீவிஶ்வநாத²꞉ கவிரவத³தி³த³ம்ʼ கீ³தகா³ங்கே³ய-காவ்யம்ʼ

ஶ்ரீமத்-கானாடு³-காத்தான் புரவரஸத³ன꞉ ஶாப்³தி³க꞉ ஸ்கந்த³-ப⁴க்த꞉ |

க்³ருʼஹ்ணந்த꞉ ஸ்கந்த³-ப⁴க்தா꞉ முத³மபி பரமாம்ʼ தே(அ)பி விந்த³ந்து கா³னாத்

புஷ்டிம்ʼ தா³ர்ட்⁴யம்ʼ ச ப⁴க்திம்ʼ ஶ்ரியமதி-ப³ஹுலாம்ʼ ஸந்ததம்ʼ ப்ராப்னுவந்து ||


சுலோகம் 7 - பதம்பிரித்து: 


ரம்யம் ஶ்ரீவிஶ்வநாத²꞉ கவி꞉ அவத³த்³ இத³ம்ʼ கீ³தகா³ங்கே³ய காவ்யம்

ஶ்ரீமத்-கானாடு³காத்தான் புரவரஸத³ன꞉ ஶாப்³தி³க꞉ ஸ்கந்த³-ப⁴க்த꞉ .

க்³ருʼஹ்ணந்த꞉ ஸ்கந்த³ப⁴க்தா꞉ முத³மபி பரமாம்ʼ தே அபி விந்த³ந்து கா³னாத்

புஷ்டிம்ʼ தா³ர்ட்⁴யம் ச ப⁴க்திம் ஶ்ரியம் அதிப³ஹுலாம்ʼ ஸந்ததம்ʼ ப்ராப்னுவந்து.


விளக்கமும் குறிப்புகளும் :


ஸ்ரீ விசுவநாத கவி இந்த கீதகாங்கேயம் என்ற அழகான காவியத்தை இயற்றினார். (அவர்) வளமிக்க கானாடுகாத்தான் என்ற சிறந்த நகரவாசியான வியாகரண பண்டிதர், முருகபக்தர். இதை எல்லா முருகபக்தர்களும் ஏற்றுக்கொண்டு பாடுவதால் பேரானந்தமும், வலிமையையும், உறுதியும், பக்தியும் ,செல்வமும் மிகுதியாக எப்போதும் அடைவார்களாக !

  • இது ஸ்ரக்³த⁴ரா - வரிக்கு 21 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்


இதி ஶ்ரீவிஶ்வநாத²-கவி-க்ருʼதௌ ஶ்ரீ-கீ³தகா³ங்கே³ய-காவ்யே

ஸ்வாதீ⁴ன-ப⁴ர்த்ருʼகா-வர்ணனே ஸுப்ரீத-ஸுப்³ரஹ்மண்யோ நாம த்³வாத³ஶஸ்ஸர்க³꞉ .


(இதுவே விசுவநாத கவியின் படைப்பாகிய கீதகாங்கேய காவியத்தில், “மிகமகிழ்ந்த சுப்ரமணியன்” என்ற பன்னிரன்டாம்  சர்கம்)


இதி ஶ்ரீநவஸால-ராஜதா⁴னீ-விராஜமான-ஶ்ரீகோ³கர்ண-க்ஷேத்ரவர-

ஸந்நிஹித-ஶ்வேதநதீ³தீர-பா³பா⁴ஸ்யமான- ஶ்ரீஶிவபுர-அக்³ரஹாராபி⁴ஜனஸ்ய,

கானாடு³-காத்தான்-நக³ரீ-நிவாஸின꞉, ஶ்ரீராமஸுப்³ரஹ்மண்ய-ஸுதீ⁴ந்த்³ரஸூனோ꞉,

ஶ்ரீபா³லாம்பி³கா-க³ர்ப⁴ஶுக்தி-ஶௌக்திகேயஸ்ய, ஶாப்³தி³கஸ்ய,

ஶ்ரீமத்³-ராமாயாணாதி³-தத்வ-விவேசகஸ்ய,

ஶ்ரீவிஶ்வநாத²கவே꞉ க்ருʼதிஷு, ஶ்ரீ கீ³தகா³ங்கே³ய-காவ்யம்ʼ ஸம்பூர்ணம் ..


(இவ்வாறாக, புதுக்கோட்டைத் தலைநகரில் விளங்கும் ஸ்ரீ கோகர்ணத் தலத்தின் அருகிலுளள வெண்ணாற்றங்கரையில் ஒளிவீசும் ஸ்ரீ சிவபுர அக்ராஹாரத்தின்  தோன்றலும், கானாடுகாத்தான் நகரவாசியும், ஸ்ரீ ராமசுப்ரமண்யர் என்ற அறிவாளரின் மகனும், ஸ்ரீ பாலாம்பிகையின் கருவெனும் சிப்பியில் உருவான முத்துபோன்றவரும், வியாகரண பண்டிதரும், ஸ்ரீ ராமாயணம் முதலிய நூல்களின் தத்துவத்தை ஆராய்பவருமான ஸ்ரீ விசுவநாத கவியின் படைப்புக்களில், கீதகாங்கேயம் என்ற காவியம் நிறைவுற்றது.)






Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்