அஷ்டபதீ³ - 17 - மூலமும் பொருளும்

 சுலோகம் 1:

கத²மபி ரஜனீமத² வ்யதீத்ய 

ஸ்மர-த³லிதா(அ)பி புரோக³தம்ʼ நிஶாந்தே ||

கு³ஹ-மனுனய-காரிணம்ʼ நிரீக்ஷ்ய 

ப்ரணய-ருஷா ஸ்பு²ரதோ³ஷ்ட²-மாஹ வல்லீ || 


சுலோகம் 1 - பதம்பிரித்து:


கத²மபி ரஜனீம்ʼ அத² வ்யதீத்ய 

ஸ்மர-த³லிதா அபி புரோக³தம்ʼ நிஶாந்தே .

கு³ஹம்ʼ அனுனய-காரிணம்ʼ நிரீக்ஷ்ய 

ப்ரணய-ருஷா ஸ்பு²ரத் ஓஷ்ட²ம்ʼ ஆஹ வல்லீ


விளக்கமும் குறிப்புகளும் :


எப்படியோ இரவைக் கழித்தபின், இரவின் முடிவில் தன்னெதிரில் வந்து சமாதானம் செய்யும் குகனைப் பார்த்து, காமதேவனால் (நெஞ்சம்) நொறுங்கியிருந்தாளாயினும், அன்பினால் உண்டான ஊடல்கொண்டு, உதடுகள் துடிக்கப் பேசினாள் வள்ளி.

  • இது புஷ்பிதாக்³ரா - வரிக்கு 12 மற்றும் 13 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 


—---------------------------------------------------------------------------------------------------------------


அஷ்டபதீ³ - 17 (ஆரபி⁴ ராக³ம், ஆதி³ தாளம்)


ரஜனி-கலித-ஸததாஸம-ஶர-ரண-ஜாக³ரதோ(அ)ருணிமானம் .

வஹதி தவேக்ஷண-யுக³மருணாம்பு³ஜ-மிவ விகஸித-மதிமானம் .. 1..


(பதப்பிரிவு: தவ + ஈக்ஷண -யுக³ம் + அருணாம்பு³ஜம் + இவ )


விளக்கம்


இரவில் விழித்ததால், உம் கண்கள், நன்கு மலர்ந்த செந்தாமரைமலர்கள் போல  செம்மையை ஏற்றுள்ளன.


பல்லவீ

சாருநாயக சாருஸாத⁴க யாஹி விதே⁴ஹி ந வாத³ம் .

ப்ரீணய தாம்ʼ கி³ரி-ராஜ-ஸுதாங்க³ஜ யா தவ ஜனயதி மோத³ம் ..


விளக்கம்


அழகிய நாதரே ! அழகாக (பேசி) சாதிக்க வல்லவரே! போய்வாரும், உம்  வாதங்களை செய்யவேண்டாம். மலைமகள் மகனே ! எவளொருத்தி உமக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவாளோ, அவளைப்போய் மகிழ்வியும்!


ப்ரத²யதி தவ க்ருʼத-சித்ரக-குச-யுக³-லாஞ்ச²ன-முரஸி விஶாலே .

குவலய-நயனா-த்³ருʼட⁴-பரிரம்ப⁴ண-ஸம்ப்⁴ரம-ரஸ-மனுகூலே .. 2..


(பதப்பிரிவு: லாஞ்ச²னம் + உரஸி, ரஸம் + அனுகூலே)


விளக்கம்


குவளைக்கண்ணியான ஒருத்தியின் மார்பில் (கஸ்துரி முதலியவற்றால்) எழுதிய சித்திரங்களின் சுவடு, அனுகூலமாக விளங்கிய உம் அகன்ற மார்பில் (விளங்கி), அவளது இறுகத் தழுவலின் பரபரப்பினை அறிவிக்கிறது.


முக²மபி தாவக-மனுஸரதி ப்ரிய-ஜனக-ஸகுங்கும-ஶோணம் .

ஸாந்த்⁴ய-பயோத⁴ர-ரஞ்ஜித-மநிஶித-கர-மவிகல-பரிமாணம் .. 3..


(பதப்பிரிவு: தாவகம்ʼ அனுஸரதி, ரஞ்ஜிதம் + அநிஶிதகரம் + அவிகல)


விளக்கம்


உகப்பைத் தோற்றுவிக்கும், குங்குமம்  பூசியது போன்ற சிவந்த உம்முகமும், மாலைநேரத்து மேகங்களால் சூழப்பட்டு(அதனால்) செம்மையுற்ற, குளிர்ந்த கிரணங்களைக் கொண்ட,  குறைவில்லாத பரிமாணத்தை உடைய, (முழு)நிலவை ஒத்திருக்கிறது. 


ரத³-பத³-பூ⁴ஷித-ப⁴வத³த⁴ரோ(அ)யம்ʼ ப²லிதமிவ லஸதி பி³ம்ப³ம் .

கேலி-ஶுகீ-முக²-ஸரப⁴ஸ-விரசித-நிபி³டி³த-சிஹ்ன-கத³ம்ப³ம் .. 4..


(பதப்பிரிவு: ப⁴வத் + அத⁴ர: + அயம்)


விளக்கம்


பற்களின் சுவடுகளால் அணிசெய்யப்பட்ட உம் இதழ், வளர்ப்புக்கிளியின் அலகின் பல  குறிகளைத் தாங்கிய பழுத்த கோவைக்கனி போல் ஒளிர்கிறது.


 உடு³பதி-க³ணமிவ கரஜ-பதா³வலி-மஞ்சதி தாவகமங்க³ம் .

ஹரிது³பல-ஸரச்ச²வி-ஹரிதாப⁴ம்ʼ ஸாரவ-மமித-தரங்க³ம் .. 5..


(பதப்பிரிவு: பதா³வலிம் + அஞ்சதி, ஸாரவம் + அமித)


விளக்கம்


உமது  அங்கம், மதியின் வரிசை போன்ற நகக்குறிகளை வளைவாக ஏற்றுள்ளது. மரகத சரத்தின் ஒளியைப்போல பச்சையான, அளவற்ற அலைகள் கொண்ட சரயூநதியின் வெள்ளம்போல (அந்த வரிசை தோன்றுகிறது)


ஸுதனு-த்³ருʼக³ஞ்ஜன-ரஞ்ஜித-ஸம்மத³-ஜல-லவகம்ʼ தவ சேலம் .

ஜயபட-மனுஹரதி மகர-கேதோ꞉ மஷி-லிகி²தாக்ஷர-ஜாலம் .. 6..


(பதப்பிரிவு: த்³ருʼக்³ + அஞ்ஜன, ஜயபடம் + அனுஹரதி)


விளக்கம்


அழகிய மேனிபடைத்தவளின் கண் மையினால் நிறம்பெற்ற அவளது ஆனந்தக்கண்ணீரின் திவலைகளைத் தாங்கிய  உமது  ஆடை , மசியால் எழுத்துக்கள் பொறித்த, மீன்கொடியோனின் வெற்றிக்கொடிச்சீலையை ஒத்திருக்கிறது.


ஸ்பு²டயதி தவ பத³-கமல-யுக³ம்ʼ க³மனாலஸ-மேதத³பாரம் .

ஸமுசித-ப³ந்த⁴ன-ஶத-லஸிதாத்³பு⁴த-ஸுரத-மஹோத்ஸவ-ஸாரம் .. 7..


(பதப்பிரிவு: க³மனாலஸம் + ஏதத்³ + அபாரம்)


விளக்கம்


உமது திருவடித்தாமரைகள் இரண்டும், நடப்பதில் எல்லையற்ற சோர்வை தெளிவாக வெளிப்படுத்துகின்றன.


தாமுபயாஹி சிராயஸ இஹ யதி³, யா ப⁴வத³பி⁴மத-யோஷா .

ரோஷ-யுதாபி ப⁴வேத³னுபத³மபி ப⁴வத³னுனய-க்ருʼத-தோஷா .. 8..


(பதப்பிரிவு: தாம் + உபயாஹி, ப⁴வத்³ + அபி⁴மத,  ப⁴வேத்³ + அனுபத³ம் + அபி, ப⁴வத்³ + அனுனய)


விளக்கம்


அவளிடமே செல்லுங்கள். இங்கு நீண்ட நேரம் இருந்தால், உம் அபிமானத்துக்குரிய பெண், கோபம் கொள்வாள் என்றாலும், உடனேயே உம்  நயமான சமாதான மொழிகளால் சந்தோஷமடைந்துவிடுவாள்.


விஶ்வநாத²-கவி-பா⁴ஷித-மித³மிஹ விபு³த⁴ஜனா அனுவாரம் .

க²ண்டி³த-ரதி-தருணீ-க்ருʼத-வசனம்ʼ குருத கி³ரி ஸபரிவாரம் .. 9..


(பதப்பிரிவு: பா⁴ஷிதம்ʼ இத³ம் + இஹ)


விளக்கம்


விசுவநாத கவி சொன்ன, காதலில் ஏமாற்றமடைந்த இளம்பெண்ணின் கூற்றான  இந்தப் பாட்டை, அறிவுள்ள மக்களே,  எல்லோரும் கூடி, பலமுறை உங்கள் வாக்கில் வையுங்கள்.


—--------------------------------------------------------------------------------------------------------------------------


சுலோகம் 2 :


முக²ம்ʼ தே பஶ்யந்த்யா꞉ ஸரத³-பத³-த³ந்தச்ச²த³மபி

ப்ரரூடோ⁴ரோஜாங்கம்ʼ கிதவ பு⁴ஜயோரந்தரமபி |

மமாபூ⁴-தா³மோத³꞉ க்ஷண-விரஹிதாம்ʼ தாமனுனயே꞉

நமஸ்தே(அ)ஸ்து ஸ்வாமின்னல-மஹ்ருʼத³யை꞉ சாடு-நிசயை꞉ || 


சுலோகம் 2 - பதம்பிரித்து:


முக²ம்ʼ தே பஶ்யந்த்யா꞉ ஸரத³-பத³-த³ந்தச்ச²த³ம் அபி

ப்ரரூடோ⁴ரோஜாங்கம்ʼ கிதவ பு⁴ஜயோ꞉ அந்தரம் அபி .

மம அபூ⁴த்³ ஆமோத³꞉ க்ஷண-விரஹிதாம்ʼ தாம்ʼ அனுனயே꞉

நமஸ்தே(அ)ஸ்து ஸ்வாமின் அலம் அஹ்ருʼத³யை꞉ சாடு-நிசயை꞉ 


விளக்கமும் குறிப்புகளும் :


வஞ்சகரே ! பற்சுவடுகள் கொண்ட இதழோடு கூடிய உம்முகத்தையும், (அவளது) தனங்களின் அடையாளங்கள் கொண்ட உமது மார்பையும் பார்த்த எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. கணம் பிரிந்தாலும் விரகத்தில் படும் அவளைப்போய்  சமாதானம் செய்யும் ! ஸ்வாமின் ! உமக்கு நமஸ்காரம் ! இதயபூர்வமற்றதான இனியமொழிகள் போதும் !

  • இது ஶிக²ரிணீ - வரிக்கு 17 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 


சுலோகம் 3


வல்லீ-ஷட்³வத³னௌ விலோக்ய ஹஸதி ப்ராத꞉ ஸகீ²னாம்ʼ க³ணே

முத்³ராவர்ண-ஸுவர்ண-கங்கண-க³ணாகா³தா⁴ங்க-கண்ட²-ஸ்த²லௌ |

வல்லீம்ʼ நம்ரமுகீ²ம்ʼ விஶாக² உரஸா த்⁴ருʼத்வா விலக்ஷோ(அ)ந்தரம்ʼ

நீத்வா ஸ்வோன்னமிதைததா³ஸ்ய-கமலாமோதோ³த்ஸுக꞉ பாது ந꞉ ||


சுலோகம் 3 - பதம்பிரித்து:


வல்லீ-ஷட்³வத³னௌ விலோக்ய ஹஸதி ப்ராத꞉ ஸகீ²னாம்ʼ க³ணே

முத்³ராவர்ண-ஸுவர்ண-கங்கண-க³ண அகா³த⁴ அங்க-கண்ட²-ஸ்த²லௌ .

வல்லீம்ʼ நம்ரமுகீ²ம்ʼ விஶாக² உரஸா த்⁴ருʼத்வா விலக்ஷோ அந்தரம்

நீத்வா ஸ்வ உன்னமித ஏதத் ஆஸ்ய-கமல ஆமோத³ உத்ஸுக꞉ பாது ந꞉


விளக்கமும் குறிப்புகளும் :


முத்திரை எழுத்துக்கள் போன்று, (ஆலிங்கனத்தால்) பொன்வளையல் கூட்டத்தின் ஆழமான அடையாளங்கள் கொண்ட கழுத்தை உடைய வள்ளியையும் அறுமுகனையும் காலையில் கண்டு அவளது தோழிமார் சிரிக்க, திகைப்புற்று, (நாணத்தால்) குனிந்த முகத்தை உடைய வள்ளியை மார்போடு எடுத்து, உள்ளே அழைத்துச் சென்று, தன்னால் நிமிர்த்தப்பட்ட அவளது முகத்தாமரையின் நறுமணத்தை விரும்பிய  விசாகன் நம்மைக் காக்கட்டும்.

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 

  • பெருந்தேவித் தாயாரின் வளையல் முத்திரை வரதனின் கழுத்தில் தெரிவதை ஸ்ரீ வேதாந்ததேசிகரும் வரதராஜ பஞ்சாசத் என்ற துதியில் வர்ணித்துள்ளார்.


இதி ஶ்ரீவிஶ்வநாத²-கவி-க்ருʼதௌ ஶ்ரீகீ³த-கா³ங்கே³ய-காவ்யே க²ண்டி³தா-வர்ணனே விலக்ஷ-விஶாகோ² நாம அஷ்டமஸ்ஸர்க³꞉ 


(இதுவே விசுவநாத கவியின் படைப்பாகிய கீத காங்கேய காவியத்தில், “பிரமிப்புற்ற விசாகன்” என்ற எட்டாம்  சர்கம்)




Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்