அஷ்டபதீ³ - 16 - மூலமும் பொருளும்

 நாயகி தோழியுடன் - பஹாடி சித்திரம் 

சுலோகம் 1:

மா தாபம்ʼ ப⁴ஜ ஹே ஸகி² ! ப்ரியதமோ நாயாத இத்யாஶயே

ஸோ(அ)யம்ʼ நந்த³து மாம்ʼ ப்ரதார்ய மஹிலா-மன்யாம்ʼ க்³ருʼஹீத்வா ஶட²꞉ |

வாதோ வாது த³ரோ விராஜது மது⁴ஶ்ரீ꞉ கோகில꞉ கூஜது

ப்ரத்³யும்னோ முத³மேது க³ச்ச²து மம ஸ்வாந்தம்ʼ முகே²ந்து³ம்ʼ ப்ரபோ⁴꞉ ||


சுலோகம் 1 - பதம்பிரித்து:


மா தாபம்ʼ ப⁴ஜ ஹே ஸகி² ! ப்ரியதமோ ந ஆயாத இதி ஆஶயே

ஸ அயம்ʼ நந்த³து மாம்ʼ ப்ரதார்ய மஹிலாம்ʼ அன்யாம்ʼ க்³ருʼஹீத்வா ஶட²꞉ .

வாதோ வாது த³ரோ விராஜது மது⁴ஶ்ரீ꞉ கோகில꞉ கூஜது

ப்ரத்³யும்னோ முத³ம்ʼ ஏது க³ச்ச²து மம ஸ்வாந்தம்ʼ முகே²ந்து³ம்ʼ ப்ரபோ⁴꞉


விளக்கமும் குறிப்புகளும் :


என் பிரியமானவன் வரவில்லையே என்ற எண்ணத்தால் துயரம் அடையாதே  தோழி ! வஞ்சகரான அவரும் என்னை ஏமாற்றி, இன்னொரு பெண்ணைக்கொண்டு சந்தோஷமாக இருக்கட்டும். இளங்காற்று வீசட்டும். வசந்தகாலத்தின் அழகு எங்கும் வீற்றிருக்கட்டும்! குயில் கூவட்டும்! மன்மதன் மகிழ்வடையட்டும்! என் மனம் பிரபுவின் முகமெனும் சந்திரனை சென்றடையட்டும்!

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 

  • ஒருவர் இறந்தபின் அந்தந்த அவயவங்கள் அதற்குரிய தேவதையை அடையும் என்றபடி மனமானது சந்திரனில் லயமாகும். தான் உயிர்நீத்தாலும் தன் மனம் தன் நாதனின் மதிவதனத்திடம் போகும் என்கிறாள் வள்ளி.


—-----------------------------------------------------------------------------------------------------------------------


அஷ்டபதீ³ - 16 (புந்நாக³வராலீ ராக³ம், ஆதி³ தாளம்)


மனஸிஜ-மத³ஹர-ருசி-ப⁴ரிதேன .

ஶ்ரயதி ந ஸா ஶுச-மலி-விருதேன .. 1..


(பதப்பிரிவு :ஶுசம் + அலி-விருதேன)


விளக்கம்:


காமதேவனின் கர்வத்தை நீக்கும் அழகுநிறைந்தவருடன் (சேர்ந்திருப்பவள்), வண்டுகளின் ஒலியினால்  வருத்தமடைவதில்லை.


பல்லவீ


யா ஸஹிதா ஶிவ-ஸூனுனா ஸகி² .


விளக்கம்:


தோழி ! எவள் சிவகுமாரனோடு சேர்ந்திருப்பவளோ …


ஶ்ருதிபத²-பரிஸர-ஸர-நயனேன .

ப⁴ஜதி ந ஸா ருஜமுடு³-கமனேன .. 2..


(பதப்பிரிவு : ருஜம்ʼ உடு³கமனேன)


விளக்கம்:


காதுகளின் பக்கம்வரை சென்ற (நீண்ட) கண்கள் கொண்டவருடன் (சேர்ந்திருப்பவள்),  தாரகைகளின் காதலனான சந்திரனைக்கண்டு வலியடைவதில்லை.


ச²விது⁴த-ஹிமகர-முக²-கமலேன .

ஶ்வஸிதி ந ஸா குரவக-முகுலேன .. 3..


விளக்கம்:


தன்னொளியால் சந்திரனை புறந்தள்ளிய தாமரைமுகத்தவருடன் (சேர்ந்திருப்பவள்), மருதோன்றி அரும்புகளைப் பார்த்து அவள் பெருமூச்சு விடுவதில்லை.


த்⁴ருʼத-ப³ஹுவித⁴-மணி-முகுட-வரேண .

லுட²தி ந ஸா பிக-ரணித-ப⁴ரேண .. 4..


விளக்கம்:


பலவித ரத்தினங்கள் இழைத்த சிறந்த கிரீடம் அணிந்தவருடன் (சேர்ந்திருப்பவள்), குயிலோசையின் பாரத்தால், அவள்  (படுக்கையில் தூக்கமின்றி) புரள்வதில்லை.


அருண-கிரண-நிப⁴-ம்ருʼது³-வஸனேன .

ஜ்வலதி ந ஸா விஹரண-விபினேன .. 5..


விளக்கம்:


அருணனின் கதிர்களைப்போன்ற (சிவந்த) மெல்லிய ஆடை அணிந்தவருடன் (சேர்ந்திருப்பவள்), உல்லாசப்பூங்காவைப் பார்த்து அவள் வெதும்புவதில்லை.


கிஸலய-ஸஹசர-கர-யுக³லேன .

வஹதி ந ஸா ஶ்ரமப⁴ர-மனிலேன .. 6..


(பதப்பிரிவு : ஶ்ரமப⁴ரம் + அனிலேன)


விளக்கம்:


தளிர்களுக்கு இணையான கைகளை உடையவருடன் (சேர்ந்திருப்பவள்), இளங்காற்றினால் பெருஞ்சோர்வு அடைவதில்லை.


ப்⁴ரமரித-ஸுர-கச-பத³-ஜலஜேன .

த்³ரவதி ந ஸா கடி²ன-ஹ்ருʼத³யஜேன .. 7..


விளக்கம்:


தேவர்களின் தலைமுடிகள் வண்டுகள்போல மொய்க்கும் திருவடித்தாமரை படைத்தவரோடு (சேர்ந்திருப்பவள்), கொடிய காமதேவனால் உருகுவதில்லை.


ரஸ-ஜித-ஸுத⁴-ம்ருʼது³-தம-வசனேன .

த³லதி ந ஸா ஸும-ததி-ஶயனேன .. 8..


விளக்கம்:


சுவையில் அமிர்தத்தை வென்ற மிக இனிய பேச்சுடையவனோடு (சேர்ந்திருப்பவள்), மலர்க்குவியல் சயனத்தைப் பார்த்து (மனம்) உடைவதில்லை. 


விஶ்வநாத²-கவி-க்ருʼத-ரசனேன .

கு³ஹ இஹ விஶது ஸஹ்ருʼத³ய-மனேன .. 9..


(பதப்பிரிவு : ஸஹ்ருʼத³யம் + அனேன)


விளக்கம்:


விசுவநாத கவி செய்த இந்த பாட்டினால். குகன் இங்கு ரசிகரின் மனதில் புகுந்து விளங்கட்டும்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------


சுலோகம் 2:

மந்தா³னில த்வம்ʼ மத³னாந்தகாத்மஜ-

ச்சா²த்ராத்³ரி-ஜாதோ(அ)ஸி ந ஸாம்ப்ரதம்ʼ தவ |

மித்ரத்வ-மாஶ்ரித்ய மனோபு⁴வோ மயி

க்லேஶ-ப்ரதா³னம்ʼ கு³ஹ-கா³மி-சேதஸி ||  


சுலோகம் 2 - பதம்பிரித்து:


மந்தா³னில த்வம்ʼ மத³னாந்தக ஆத்மஜ-

சா²த்ர அத்³ரி-ஜாதோ(அ)ஸி ந ஸாம்ப்ரதம்ʼ தவ .

மித்ரத்வம்ʼ ஆஶ்ரித்ய மனோபு⁴வோ மயி

க்லேஶ-ப்ரதா³னம்ʼ கு³ஹ-கா³மி-சேதஸி .


விளக்கமும் குறிப்புகளும் :


இளங்காற்றே ! நீ, காமனை எரித்தவரின் மகனான முருகனது சீடரான அகத்தியரின் (பொதிகை) மலையில் தோன்றியவன். அதனால், காமதேவனோடு நட்புப் பூண்டு, குகனிடம் செல்லும் மனதை உடைய எனக்கு கிலேசத்தைத் தருவது சரியல்ல. (அது நீ பிறந்த வீட்டுக்கு துரோகம் செய்வதாகும்)

  • இது இந்த்³ரவம்ʼஶம் - வரிக்கு 12 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்


சுலோகம் 3:


வல்லீ ஶோச்யதமாம்ʼ க³தாத்³ய விபினே(அ)வஸ்தா²-மதன்வாதபாத்

ப்ரம்லான-ப்ரஸவா(அ)னவாப்ய லுட²தி ஸ்தா²ண்வங்க³ஜாஶ்லேஷணம் |

பாத்வாகர்ண்ய ஸுரர்ஷி-பா⁴ஷிதமித³ம்ʼ பௌரந்த³ரீம்ʼ வஞ்சயன்

பா³லாம்ʼ நாக³ரிகோ ப்³ருவன் வனலதாம்ʼ ரக்ஷேதி ஸேனாபதி꞉ || 


சுலோகம் 3 - பதம்பிரித்து:


வல்லீ ஶோச்யதமாம்ʼ க³தா அத்³ய விபினே அவஸ்தா²ம்ʼ அதனு ஆதபாத்

ப்ரம்லான-ப்ரஸவா அனவாப்ய லுட²தி ஸ்தா²ண்வங்க³ஜ ஆஶ்லேஷணம் .

பாது ஆகர்ண்ய ஸுரர்ஷி-பா⁴ஷிதம்ʼ இத³ம்ʼ பௌரந்த³ரீம்ʼ வஞ்சயன்

பா³லாம்ʼ நாக³ரிகோ ப்³ருவன் வனலதாம்ʼ ரக்ஷ இதி ஸேனாபதி꞉


விளக்கமும் குறிப்புகளும் :


“தாணுவின் மகனே! காட்டில் வள்ளி, உன் ஆலிங்கனத்தை அடையாமல், காதல் தாபத்தால், (அணிந்த) மலர்கள் வாடும்படி (சயனத்தில்) புரண்டு, மிகவும் வருந்தத்தக்க நிலையை இன்று அடைந்துவிட்டாள்.” என்ற தேவரிஷியான நாரதரின் வார்த்தையைக்கேட்டு, தெய்வானைக்குத் தெரியாமல், வனக்கொடியான சிறுமி வள்ளியிடம் சென்று “என்னைக்காப்பாற்று” என்று சொன்ன நயமிக்க (தேவர்)படைத்தலைவன் (நம்மைக்) காக்கட்டும்!

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 

  • வேடர்களிடம் வளர்ந்த வள்ளி,  முருகனையே மணக்க தீர்மானித்து காத்திருப்பதை நாரதர் வந்து முதலில் முருகனுக்கு உரைத்தார் என்று  கந்தபுராணம் சொல்லும்.


இதி ஶ்ரீவிஶ்வநாத²கவி-க்ருʼதௌ ஶ்ரீகீ³தகா³ங்கே³ய-காவ்யே விப்ரலப்³தா⁴-வர்ணனே நாக³ரிக-ஸேனாபதிர்நாம ஸப்தம꞉ ஸர்க³꞉ .


(இதுவே விசுவநாத கவியின் படைப்பாகிய கீத காங்கேய காவியத்தில், “பண்புள்ள சேனைநாயகன்” என்ற ஏழாம்  சர்கம்)


Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்