அஷ்டபதீ³ - 4 மூலமும் பொருளும்


சுலோகங்கள்

 சுலோகம் 1:

ஸ்வஸேவனாயாத-ஸுபர்வ-யௌவத-

ப்ரஸாத⁴நாப்⁴யர்ஹித-ராமணீயகம் .

குமார-மாராம-க³தம்ʼ ஸ்மரந்த்யஸௌ

ஸகீ² ப³பா⁴ஷே புனரேவ வல்லிகாம் .. 


சுலோகம் 1 - பதம்பிரித்து 


ஸ்வஸேவன ஆயாத-ஸுபர்வ-யௌவத-

ப்ரஸாத⁴ந  அப்⁴யர்ஹித-ராமணீயகம் .

குமாரம் ஆராம-க³தம்ʼ ஸ்மரந்தீ அஸௌ

ஸகீ² ப³பா⁴ஷே புனரேவ வல்லிகாம் .. 


விளக்கமும் குறிப்புகளும் :


தனக்கு சேவை செய்ய வந்துள்ள தேவமகளிரின் அலங்காரத்துக்குத் தக்க அழகுடையவனாக, பூந்தோட்டத்தில் அமர்ந்திருந்த  குமாரனை நினைத்துக்கொண்டு, தோழி மேலும் வள்ளியிடம் கூறினாள் 

  • இது வம்ʼஶ-ஸ்த²விலம் என்ற,  வரிக்கு 12 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

நடனமாடும் அப்சரப்பெண்களின் சிற்பங்கள் - பேலூர்

அஷ்டபதீ³ - 4 (ராமக்ரியா ராக³ம், ஆதி³ தாளம்)

குண்ட³ல-மண்டி³த-க³ண்ட³-தலாஞ்சித-ஷண்முக²-பங்கஜ-ஶாலீ .

ஸாந்த்⁴ய-பயோத³-தடித்³-ப்⁴ரமதா³யி-க்ரோட³க-நவமணி-மாலீ .. 1..


(பதப்பிரிவு தேவையில்லை)

விளக்கம் :

குண்டலங்களால் அணிசெய்யப்பெற்ற கன்னங்களால் அழகாக விளங்கும் ஆறு முகத் தாமரைகளை உடையவன். மாலையில் தோன்றும் (சிவந்த) மேகங்களில் மின்னல் மின்னுகிறதோ என்ற பிரமையைத் தரும் நவரத்தின மாலைகளை மார்பில் அணிந்தவன். 


பல்லவீ

கு³ஹ இஹ கே²லதி கேலி-பரே . விபு³த⁴-விலாஸ-வதூ⁴-நிகரே 


விளக்கம் 
:

கேளிக்கையில் விருப்பம்கொண்ட, உல்லாசமான தேவமகளிரின் கூட்டத்தில் இங்கு குகன் விளையாடுகிறான்.


கா³யதி காசன ஸுந்த³ர-வீணா-கு³ண-ரணனோத்³யத-ஹஸ்தா .

தோயஜ-வத³னா கோகில-கூஜித-ஹுங்க்ருʼதி-கரணே ஶஸ்தா .. 2..


(பதப்பிரிவு : ரணன உத்³யத)

விளக்கம் :


அழகிய வீணையின் தந்தியை மீட்டுவதில் ஈடுபட்ட கைகளுடன் ஒருத்தி பாடுகிறாள். தாமரை முகத்தினள் ஆன அவள், (பாட்டின் இனிமையால்) குயிலின் கூவுதலை மிரட்டி அடக்குவதில் வல்லவள் 


ந்ருʼத்யதி காசன சலமணி-ஹாரம்ʼ லலித-விஹார-முதா³ரம் .

நித்யமுத³ம்ʼ பரிதோஷயிதும்ʼ கு³ஹ-மக்ருʼதக-வாணீ-ஸாரம் .. 3..


(பதப்பிரிவு :  விஹாரம் உதா³ரம் , கு
³ஹம் அக்ருʼதக )

விளக்கம் :


மணிமாலைகள் அசைய, ஒயிலான அசைவுகளுடன் , அழகாக ஒருத்தி ஆடுகிறாள். யாரும் இயற்றாத சொற்களான வேதங்களின் சாரமான, எப்போதும் ஆனந்தம் நிறைந்தவனான  குகனை மகிழ்விக்கவே (ஆடுகிறாள்)..




காசன பரிமல-பூரித-த³ஶ-தி³ஶ-ம்ருʼக³-மத³-மங்க³ஜ-லோலா .

ஸ்பர்ஶ-ஸுகா²னுபு³பூ⁴ஷுரகார்ஷீ-த³தி⁴-நிடிலம்ʼ ஸுரபா³லா .. 4..


(பதப்பிரிவு : மத³ம் அங்க³ஜ, ஸுக² அனுபு³பூ⁴ஷு: அகார்ஷீத் அதி⁴நிடிலம்)

விளக்கம் :


ஆசையினால் கிளர்ச்சியுற்ற ஒருத்தி, பத்து திசைகளிலும்  மணக்கும் கஸ்தூரியை, குகனைத்  தீண்டுமின்பம்  அனுபவிக்க விரும்பியவளாக, (அவன்) நெற்றியில் வைத்தாள்.


காசன மலயஜ-பங்க-விலேபன-கைதவதோ கு³ஹ-கா³த்ரம் .

ஹ்ருʼஷித-தனூருஹ-மாஸ்ப்ருʼஶதி ஸ்வய-மங்க³ஜ-பௌருஷ-பாத்ரம் .. 5..


(பதப்பிரிவு : தனூருஹம் ஆஸ்ப்ருʼஶதி, ஸ்வயம் அங்க³ஜ)

விளக்கம் :


ஒருத்தி, சந்தனக் கலவையை தடவுதல் என்ற பாசாங்குடன், மன்மதனின் வீர த்துக்கு வசிப்பிடமான, மயிர்க்கூச்செறிந்த குகனது தேகத்தைத் தானே தொட்டாள். 


பா³ஹு-யுகே³ன ம்ருʼத³ங்க³-வரம்ʼ பரிரப்⁴ய முதா³(ஆ)ஶயமேகா .

வாத³ன-நர்தித-வாஹ-மயூரம்ʼ வ்யஞ்ஜயதி ஸ்வமபீ⁴கா .. 6..


(பதப்பிரிவு : ஸ்வம் அபீ⁴கா )

விளக்கம் 
:

பயமற்ற ஒருத்தி, இருகைகளாலும் சிறந்த மிருதங்கத்தைத் தழுவி , தனது ஆசையைக் குறிப்பால் உணர்த்தினாள். அந்த மிருதங்கத்தின் ஒலி, குகனது வாகனமான மயிலை நடமிடச் செய்தது. 


கேசன யுவதி-ஜனா விலஸன்-மணி-நூபுர-நாத³-மகே²த³ம் .

வித³த⁴தி மண்ட³ல-லாஸ்ய-விலாஸம்ʼ ஸ-வலய-கரதல-வாத³ம் .. 7..


(பதப்பிரிவு : நாத³ம் அகே²த³ம் )

விளக்கம் :

ஒருசில யுவதிகள், ஒளிவீசும் மணிகள் பொருந்திய கால்சலங்கைகள் ஒலிக்க, வளையொலியுடன் கைகளைத்தட்டி, சோர்வின்றி உற்சாகமாக வட்டமாக நடனமாடுவதை நிகழ்த்தினார்கள்.


காசன ஹ்ருʼஷ்யதி காசன கி²த்³யதி காசன லிக²தி ப்ருʼதி²வ்யாம் .

காசன லஜ்ஜித-வத³னா திஷ்ட²தி ஹஸதி ச காசித³டவ்யாம் .. 8..


(பதப்பிரிவு : காசித் அடவ்யாம்)


விளக்கம் :


அந்த உபவனத்தில், ஒருத்தி மகிழ்கிறாள் , ஒருத்தி வருந்துகிறாள், ஒருத்தி நிலத்தில் (கால் விரலால்) எழுதுகிறாள். ஒருத்தி நாணிய முகத்துடன் நிற்கிறாள், ஒருத்தி சிரிக்கிறாள்..


விஶ்வநாத²-கவி-பா⁴ஷித-மித³மபி கலயது குஶலமஶேஷம் .

கலித-லலித-புரஶாஸன-ஸூனோ꞉ ஸ்வைர-விலாஸ-விஶேஷம் .. 9..


(பதப்பிரிவு : பா⁴ஷிதம் இத³மபி, குஶலம் அஶேஷம் )

விளக்கம் :

புரங்களை எரித்த சிவபெருமானின் மகனான, அழகிய அலங்காரம் செய்துகொண்டவனான  முருகனின் விருப்பப்படியான சிறந்த கேளிக்கையை சொல்வது  இப்பாடல். விசுவநாத கவி சொல்லிய இப்பாடல், எல்லா நன்மைகளையும் உண்டாக்கட்டும்!  

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

சுலோகம் 2:


ஸர்வாநந்த³ன இந்து³-ஸுந்த³ர-முக²꞉ காந்தா-முபாந்த-ஸ்தி²தாம்ʼ

பஶ்யன் ஸஸ்மித-மப்ஸர꞉-குலமபி ஸ்வச்ச²ந்த³-லீலாகுலம் |

ஆனந்தா³ம்பு³தி⁴-மக்³ன-சேதனமயம்ʼ குர்வன்னபாங்கே³க்ஷணை꞉

ப⁴த்³ரம்ʼ கந்த³லயத்வமந்த³-மநிஶம்ʼ சந்த்³ரார்த⁴-ப்⁴ருʼன்-நந்த³ன꞉ ||


சுலோகம் 2 - பதம்பிரித்து 


ஸர்வாநந்த³ன இந்து³-ஸுந்த³ர-முக²꞉ காந்தாம் உபாந்த-ஸ்தி²தாம்ʼ

பஶ்யன் ஸஸ்மிதம் அப்ஸர꞉-குலமபி ஸ்வச்ச²ந்த³-லீலாகுலம் .

ஆனந்தா³ம்பு³தி⁴-மக்³ன-சேதனம் அயம்ʼ குர்வன் அபாங்கே³க்ஷணை꞉

ப⁴த்³ரம்ʼ கந்த³லயது அமந்த³ம் அநிஶம்ʼ சந்த்³ரார்த⁴-ப்⁴ருʼத் நந்த³ன꞉ .


விளக்கமும் குறிப்புகளும் :


எல்லோரையும் மகிழ்விப்பவனாக, சந்திரன் போன்ற அழகிய முகத்துடன், அருகில் அமர்ந்திருக்கும் அன்புமனைவியான தெய்வானையை புன்னகையுடன் பார்த்தபடி,  மனம்போல் களிக்கும் அப்சரப் பெண்களை கடைக்கண் பார்வைகளால், ஆனந்தக்கடலில் மூழ்கடிப்பவனாக விளங்கும்,  பிறைசூடிய பெருமானின் மைந்தனான முருகன் (நமக்கு) எப்போதும் மங்களங்களைப் பெருக்கட்டும். 

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் என்ற,  வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.
சுலோகம் 3:

கங்கேலீ-ப்ரஸவாபி⁴-பூ⁴ஷித-வபு꞉ கஞ்ஜேக்ஷணாலிங்கி³த꞉

கண்டே²கால-ஸுத꞉ கனத்-குரப³காம்போ⁴ஜ-ஸ்ரகு³த்³பா⁴ஸித꞉ |

காஶ்மீர-த்³ரவ-ஸிக்த-சந்த³ன-ரஸாலிப்தோ வித³த்⁴யாச்சு²ப⁴ம்ʼ

கந்த³ர்பாயுத-கோடி-காந்தி-ரநிஶம்ʼ ஶ்ருʼங்கா³ர-ஸம்ராட³ஸௌ ||


சுலோகம் 3 - பதம்பிரித்து 

கங்கேலீ-ப்ரஸவ அபி⁴-பூ⁴ஷித-வபு꞉ கஞ்ஜேக்ஷணா ஆலிங்கி³த꞉

கண்டே²கால-ஸுத꞉ கனத்-குரப³க அம்போ⁴ஜ-ஸ்ரக்³ உத்³பா⁴ஸித꞉ .

காஶ்மீர-த்³ரவ-ஸிக்த-சந்த³ன-ரஸாலிப்தோ வித³த்⁴யாத் ஶுப⁴ம்ʼ

கந்த³ர்ப அயுத-கோடி-காந்தி: அநிஶம்ʼ ஶ்ருʼங்கா³ர-ஸம்ராட்³ அஸௌ .


விளக்கமும் குறிப்புகளும் :

அசோகமலர்களால் அணிசெய்யபபட்ட மேனியுடையவன். தாமரைக்கண்ணியான தெய்வானையால் தழுவப்பட்டவன்.கரியகண்டரின் மகன்.. ஒளிரும் மருதோன்றி மற்றும் தாமரைகளாலான மாலைகளுடன் திகழ்பவன். குங்குமப்பூ கலந்த சந்தனக் கலவை பூசியவன். பத்தாயிரம் கோடி மன்மதர்களுக்கு நிகரான அழகன். சிருங்கார ரசத்தின் சக்கரவர்த்தி. அவன் (நமக்கு) சுபத்தைக் கொடுக்கட்டும் !

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் என்ற,  வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.
சுலோகம் 4:

கல்யாணாசல-கார்முகாசல-ஶிலா-பா³பா⁴ஸ்யமான꞉ ஸ்மரத்-

ஸந்தாபாபஹ-சித்ர-ப³ந்த⁴ன-லஸத்-ஸ்கந்தா³சலாராமக꞉ |

பாயா-த³ஸ்க²லிதாத்மஶக்தி-ரநிஶம்ʼ ஶக்திம்ʼ கராப்³ஜே வஹன்

ஸ்னிக்³தா⁴க²ண்ட³ல-நந்த³னா-ஸஹசர꞉ ஸாமோத³-ஸோமோத³ய꞉ ||


சுலோகம் 4 - பதம்பிரித்து 

கல்யாண அசல-கார்முக அசல ஶிலா-பா³பா⁴ஸ்யமான꞉ ஸ்மரத்-

ஸந்தாப அபஹ சித்ர ப³ந்த⁴ன லஸத் ஸ்கந்தா³சல ஆராமக꞉ .

பாயாத் அஸ்க²லித ஆத்மஶக்தி: அநிஶம்ʼ ஶக்திம்ʼ கராப்³ஜே வஹன்

ஸ்னிக்³த⁴ ஆக²ண்ட³ல-நந்த³னா-ஸஹசர꞉ ஸாமோத³-ஸோமோத³ய꞉ .


விளக்கமும் குறிப்புகளும் :


பொன்மலையான மேருவை வில்லாக உடைய சிவபெருமானின் மலையான கயிலையில் ஒரு குன்றில் பேரொளியோடு வீற்றிருப்பவன். தன்னை நினைப்பவர்களின் துயர்களைப் போக்குபவன். அழகிய மாளிகைகள் விளங்கும் கந்தகிரியில் இன்பமாக உறைபவன். எப்போதும் குன்றாத மகிமையுள்ளவன். கையில் வேலாயுதத்தை தரித்தவன். அன்புள்ள தெய்வானையின் துணைவன். ஆனந்தம்நிறைந்த சிவகுமாரன். அவன் (நம்மை) காக்கட்டும். 

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் என்ற,  வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.


இதி ஶ்ரீ-விஶ்வநாத²-க்ருʼதௌ கீ³த-கா³ங்கே³ய-காவ்யே ஸாமோத³-ஸோமோத³யோ நாம ப்ரத²ம꞉ஸர்க³꞉ .

(இதுவே விசுவநாத கவியின் படைப்பாகிய கீத காங்கேய காவியத்தில், “ஆனந்தம்நிறைந்த சிவகுமாரன்” என்ற முதல் சர்கம்)


Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்