முன்னுரை

கீதகாங்கேயம் என்ற இந்த சிறுகாவியம், 20ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. நூலாசிரியர் கானாடுகாத்தான் ஸ்ரீ விசுவநாத கவி. அவரைப்பற்றிய செய்திகளும் , இந்நூலின் தேவநாகரி வடிவமும் இங்கு காணலாம்: https://sanskritdocuments.org/doc_subrahmanya/gItagAngeyam.html https://sanskritdocuments.org/doc_subrahmanya/gItagAngeyamsaTIka.html (நூலை, தமிழ், மலையாளம், ஆங்கிலம் முதலிய இன்னும் பல லிபிகளிலும் மாற்றிக்கொண்டும் காணலாம் ) கீதகோவிந்தத்திலும் ஸ்ரீ ஜெயதேவரிடத்தும் கொண்ட பக்தியால் அவரைப்பின்பற்றி, அதே உவமைகளும் , அதே சொற்களும் கூட பல இடங்களில் ஆசிரியர் கையாண்டிருந்தாலும், இக்காவியத்திற்கே என்றுள்ள புதுமைகள், பலவித சந்தங்களிலுள்ள சுலோகங்கள், முருகன் புகழை அற்புதமாக வர்ணிக்கும் பாட்டுக்கள் - இவற்றைப்பார்க்கும்போது, கலைமகளின் பூரண கடாட்சம் பெற்றவர் இக்கவி என்று அறியலாம். ஒவ்வொரு சர்க்கத்தின் முடிவிலும் அவர் கூறும் மிக அழகான பிரார்த்தனை சுலோகங்கள் சிறந்த பலச்ருதியாகவும் அமைந்துள்ளன. காவியங்களில் காணப்படும் நவரசங்களில் சிறப்பான இடம் சிருங்கார ரசத்துக்கு உண்டு. எத்தரப்பினரும் விரும்பும் சுவை இத்துறைக்...