அஷ்டபதீ³ - 2 - மூலமும் பொருளும்

 சுலோகங்கள் :


சுலோகம் 1:


க³ங்கா³ம்ʼ துங்க³யதே, முதா³ ஶரவணம்ʼ ஶர்ம-ப்ரத³ம்ʼ தன்வதே

தே³வான் மோத³யதே, பயோத³-ப³ஹுலா-மாத்ரூʼ꞉ நிஜா꞉ குர்வதே |

ஶாபான்மோசயதே பராஶர-ஸுதா-நாதன்வதே ஸம்மதம்ʼ

பித்ரா, ஸர்வ-ஜக³த்தலே கலயதே லீலாம்ʼ நமஸ்தே விபோ⁴  ||


சுலோகம் 1 - பதம்பிரித்து 


க³ங்கா³ம்ʼ துங்க³யதே, முதா³ ஶரவணம்ʼ ஶர்ம-ப்ரத³ம்ʼ தன்வதே

தே³வான் மோத³யதே, பயோத³-ப³ஹுலா-மாத்ரூʼ꞉ நிஜா꞉ குர்வதே .

ஶாபான்மோசயதே பராஶர-ஸுதான் ஆதன்வதே ஸம்மதம்ʼ

பித்ரா, ஸர்வ-ஜக³த்தலே கலயதே லீலாம்ʼ நமஸ்தே விபோ⁴  


விளக்கமும் குறிப்புகளும் :


எங்கும் நிறைந்த  பிரபுவே ! கங்கைக்கு ஆனந்தம் கூடிய உயர்வைத் தருபவனும், சரவணப்பொய்கையை மங்களம் நிறைந்ததாக செய்தவனும், தேவர்களை மகிழ்விப்பவனும் , தனக்குப்  பால்கொடுத்த கார்த்திகைப்பெண்களை தாய்மார்களாக ஏற்றுக்கொண்டவனும், பராசர குமாரர்களை தந்தையின் சாபத்திலிருந்து விடுவித்து, அவர் ஏற்றுக்கொள்ளுமாறு செய்தவனும், உலகெங்கும் லீலைகள் புரிந்தவனுமான உனக்கு நமஸ்காரங்கள்.

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.


சுலோகம் 2 


முக்தானுத்³த⁴ரதே, ஶுசம்ʼ ஶமயதே, ஸௌலப்⁴ய-மாபி³ப்⁴ரதே

வித்³யாம்ʼ வேத³யதே கு³ணான் க⁴டயதே ஶக்தி-க்ஷயே பி³ப்⁴ரதே |

பாபம்ʼ லோபயதே, கலிம்ʼ லக⁴யதே, நீரோக³தாம்ʼ தன்வதே

வீரான் பாலயதே, த³யாம்ʼ கலயதே, வல்லீஶ துப்⁴யம்ʼ நம꞉ ||


சுலோகம் 2 - பதம்பிரித்து 


முக்தான் உத்³த⁴ரதே, ஶுசம்ʼ ஶமயதே, ஸௌலப்⁴யம்ʼ ஆபி³ப்⁴ரதே

வித்³யாம்ʼ வேத³யதே கு³ணான் க⁴டயதே ஶக்தி-க்ஷயே பி³ப்⁴ரதே .

பாபம்ʼ லோபயதே, கலிம்ʼ லக⁴யதே, நீரோக³தாம்ʼ தன்வதே

வீரான் பாலயதே, த³யாம்ʼ கலயதே, வல்லீஶ துப்⁴யம்ʼ நம꞉  


விளக்கமும் குறிப்புகளும் :


ஜீவன்முக்தர்களை உய்வித்து, சோகத்தை தணித்து, எல்லோரும் அணுகக்கூடிய சௌலப்பிய குணமேற்று, ஞானத்தை உபதேசித்து, நற்குணங்களை தந்து, (எங்கள்) வலிமை குன்றும்போது தாங்கி, பாவங்களை போக்கி, கலியுகத்தின் பாரத்தை குறைத்து, நோயற்றநிலையைத் தந்து, வீரர்களை காத்து, (யாவர்க்கும்) கருணை புரிபவனும் ஆகிய வள்ளிமணாளனே, உனக்கு நமஸ்காரம்.

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

அஷ்டபதீ³ -2 (பை⁴ரவீ ராக³ம் , த்ரிபுட  தாளம்)


ரஜத-ஶிலோச்சய-பூ⁴ஷண . ப⁴வ-பீ⁴ஷண .

வித³லித-கனக-மஹீத்⁴ர .. ஜய ஜய தே³வ கு³ஹ .. 1..


(பதப்பிரிவு தேவையில்லை)


விளக்கம்:


வெள்ளிமலையின் அணிகலன் ஆனவனே ! பிறவியை (அழிப்பதால்) பயம்கொள்ள செய்பவனே ! பொன்மலையான மேருவை பிளந்தவனே !


குஹப்பெருமானே ! உனக்கு வெற்றி !


முனி-மக²-ஜனுரஜ-ஶாஸன . ப⁴ய-நாஶன .

ஶ்ரித-ஸுர-ப³ல-பதி-பா⁴வ .. ஜய ஜய தே³வ கு³ஹ .. 2..


(பதப்பிரிவு தேவையில்லை)

                            

விளக்கம்:


(நாரத) முனிவரின் யாகத்தில் தோன்றிய ஆட்டை அடக்கியவனே ! அச்சம் போக்குபவனே ! தேவர் படைக்கு தலைமை ஏற்றவனே !


குஹப்பெருமானே ! உனக்கு வெற்றி !


நிக³டி³த-மத்த-விரிஞ்சன . பு³த⁴-ரஞ்ஜன .

ப்ரணவ-பதா³ர்த² புராண .. ஜய ஜய தே³வ கு³ஹ .. 3..


(பதப்பிரிவு தேவையில்லை)


விளக்கம்:


கர்வம் கொண்ட பிரம்மாவை சிறையிட்டவனே ! அறிஞரை மகிழ்விப்பவனே ! ஓம்காரத்தின் பொருளாக விளங்கும் ஆதியே !


குஹப்பெருமானே ! உனக்கு வெற்றி !


நிஜ-வபுஷா பித்ருʼ-மோஹன . ஶிகி²-வாஹன .

நவமணி-மய-க³ல-ஹார .. ஜய ஜய தே³வ கு³ஹ .. 4..


(பதப்பிரிவு தேவையில்லை)


விளக்கம்:


தன் வடிவினால் பெற்றோரை மயக்கி இன்பம் தருபவனே ! மயில் வாகனனே ! நவரத்தின மயமான ஆரங்களை கழுத்தில் அணிந்தவனே !


குஹப்பெருமானே ! உனக்கு வெற்றி !



க்ரௌஞ்ச-மஹீத⁴ர-பே⁴த³ன . ஶுப⁴-ஸாத⁴ன .

வினிஹத-தாரக-தை³த்ய .. ஜய ஜய தே³வ கு³ஹ .. 5..


(பதப்பிரிவு தேவையில்லை)


விளக்கம்:


கிரௌஞ்ச மலையைப் பிளந்தவனே ! மங்கலங்களுக்கு ஏதுவானவனே! தாரகாசுரனை அழித்தவனே !


குஹப்பெருமானே ! உனக்கு வெற்றி !


ஸிம்ʼஹ-முகா²ஸுர-க²ண்ட³ன . கலி-த³ண்ட³ன .

ரண-ஹத-ஸுர-ரிபு-ஶூர .. ஜய ஜய தே³வ கு³ஹ .. 6..


(பதப்பிரிவு தேவையில்லை)


விளக்கம்:


சிம்மமுகாசுரனை அடக்கியவனே ! கலியுகத்தின் தீமைகளை தண்டிப்பவனே !  போரில் எதிரியான சூரனை அழித்தவனே !


குஹப்பெருமானே ! உனக்கு வெற்றி !




ஸுரபதி-தனுஜா-வல்லப⁴ . ரிபு-து³ர்லப⁴ .

க்ருʼத-பரஶிக²ரி-விலாஸ .. ஜய ஜய தே³வ கு³ஹ .. 7..


(பதப்பிரிவு தேவையில்லை)


விளக்கம்:


இந்திரன் மகளான தெய்வானையின் நாயகனே ! எதிரிகளுக்கு எட்டாதவனே ! பரங்குன்றத்தில் விளங்குபவனே !


குஹப்பெருமானே ! உனக்கு வெற்றி !


ஶுப⁴மிஹ மே ப்ரதிபாத³ய . ஸக்ருʼபோத³ய .

தவ பத³கமல-நதாய .. ஜய ஜய தே³வ கு³ஹ .. 8..


(பதப்பிரிவு தேவையில்லை)


விளக்கம்:


கருணை எழுச்சி மிக்கவனே ! உன் தாமரைப்பாதங்களில் வணங்கும் எனக்கு நன்மை  அளிப்பாய் !


குஹப்பெருமானே ! உனக்கு வெற்றி !


விஶ்வநாத²-கவி-பா⁴ஷிதம் . கு³ண-பூ⁴ஷிதம் .

ஶ்ருʼணு வர-மங்க³ல-கீ³தம் .. ஜய ஜய தே³வ கு³ஹ .. 9..


(பதப்பிரிவு தேவையில்லை)


விளக்கம்:


விஸ்வநாத  கவி சொன்ன இந்த  சிறந்த  மங்களமான பாடல்,  நற்குணங்களோடு  விளங்குவது. அதைக்  கேள் !


குஹப்பெருமானே ! உனக்கு வெற்றி !


----------------------------------------------------------------------------------------------------------------------------------------

சுலோகம் 3


மாருத்வதீ-மத³ன-மாத்³யத³பாங்க³-ஸங்கை⁴꞉

காதர்ய-விஸ்மய-ஸுஹ்ருʼத்த்வ-ம்ருʼது³-ப்ரஸங்கை³꞉ .

இந்தீ³வர-ஸ்ரக³பி⁴-மண்டி³தவத்³ விபா⁴ந்தீ

ஶ்ரேயஸ்தனோது ஶர-ஸம்ப⁴வ-க³ண்ட³-பாலீ .. ஶ்லோ. 8..


சுலோகம் 3 - பதம்பிரித்து 


மாருத்வதீ-மத³ன-மாத்³யத்³-அபாங்க³-ஸங்கை⁴꞉

காதர்ய-விஸ்மய-ஸுஹ்ருʼத்த்வ-ம்ருʼது³-ப்ரஸங்கை³꞉ .

இந்தீ³வர-ஸ்ரக்³-அபி⁴-மண்டி³தவத்³ விபா⁴ந்தீ

ஶ்ரேய꞉ தனோது ஶர-ஸம்ப⁴வ-க³ண்ட³-பாலீ .. ஶ்லோ. 8..


விளக்கமும் குறிப்புகளும் :


தெய்வானையின் அச்சமும், வியப்பும் , அன்பும் நிறைந்து, மென்மையாக செலுத்தப்படும் , காதல்  மயக்கம்  கொண்ட  (கரிய) கடைக்கண் பார்வைகளால்,  நீலோற்பல மலர்மாலையால்  அலங்கரிக்கப்பட்டது  போல் விளங்கும் சரவணபவனின் (கழுத்து மற்றும்) கன்னம் நமக்கு உயர்வைத்   தரட்டும்.

  • இது வஸந்ததிலகம் - வரிக்கு 14 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.

  • மூக பஞ்சசதியின் கடாக்ஷ சதகத்தில் 56வது பாடல் இதையொத்த கருத்துடையது


Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்