அஷ்டபதீ³ - 5 மூலமும் பொருளும்




சுலோகம் 1:


ஶ்ருத்வா ஸ்வீய-ஸகீ²-வசோ வனசரீ க்ருʼச்ச்²ரேண ஶய்யா-தலாத்

உத்தா²யாதனு-தாப-வேபித-தனு꞉ நிஶ்வாஸ-பர்யாகுலா |

விஶ்வஸ்யாத்ம-ஸகீ²ம்ʼ ஸக³த்³க³த³மித³ம்ʼ பா³ஷ்பாயமாணா(அ)ப்³ரவீத்

விஶ்வாதீ⁴ஶ-க³ஜாஸ்ய-ஸோத³ர-மஹா-லாவண்ய-க்ருʼஷ்டாந்தரா ||


சுலோகம் 1 பதம்பிரித்து:


ஶ்ருத்வா ஸ்வீய-ஸகீ²-வச: வனசரீ க்ருʼச்ச்²ரேண ஶய்யா-தலாத்

உத்தா²ய அதனு-தாப-வேபித-தனு꞉ நிஶ்வாஸ-பர்யாகுலா .

விஶ்வஸ்ய ஆத்ம-ஸகீ²ம்ʼ ஸக³த்³க³த³ம் இத³ம்ʼ பா³ஷ்பாயமாணா அப்³ரவீத்

விஶ்வாதீ⁴ஶ-க³ஜாஸ்ய-ஸோத³ர-மஹா-லாவண்ய-க்ருʼஷ்ட அந்தரா .


விளக்கமும் குறிப்புகளும் :


தன் சகியின் பேச்சைகேட்ட வேடுவப்பெண்ணாகிய வள்ளி, சிரமப்பட்டு படுக்கையிலிருந்து எழுந்து, காதல் வசத்தால் நடுக்கமுற்று, பெருமூச்சுடன் கலக்கமுற்று, தன் தோழியை நம்பி, குரல் தழுதழுக்க, கண்ணீருடன் இவ்வாறு சொன்னாள். உலகநாதனாகிய, யானைமுகனின் தம்பியாகிய முருகனின் பேரழகினால் கவரபட்ட  உள்ளத்தினளாக அவள் இருந்தாள். 


  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.


அஷ்டபதீ³ 5 (தோடி³ ராக³ம், ஆதி³ தாளம்)


குஞ்ஜர-வத³ன-ஸஹோத³ர-மாஶ்ரித-ஜன-பரிபாலன-தீ⁴ரம் .

மது⁴பை꞉ ஸம்ப்⁴ருʼத-மஞ்ஜு-மதூ⁴த்³ப⁴வ-புஷ்ப-விசித்ரித-ஹாரம் .. 1..


(பதப்பிரிவு : ஸஹோத³ரம்+ ஆஶ்ரித )


விளக்கம்:


யானைமுகனின் தம்பியாகிய முருகன், தன்னை சரணடைந்த மக்களை காக்கும் தீரன். வண்டுகள் மொய்க்கும் இனிய தேனை பெருக்கும் மலர்களால் செய்த பலவித மாலைகள் அணிந்தவன்.


பல்லவீ


ஶைலே கு³ஹமிஹ கலித-விஹாரம் . ஸகி² கலயே ஹ்ருʼதி³ கி³ரிஶ-குமாரம் 

(பதப்பிரிவு : கு³ஹம் + இஹ)


விளக்கம் :


தோழி ! குன்றின்மேல் விளையாடும் சிவகுமாரன் குகனை இங்கு என்னெஞ்சில் எண்ணிப்பார்க்கிறேன்.




மேசக-ராஜித-மேசகி-தல்லஜ-வாஹன-மாத்த-ஶராஸம் .

ஹஸித-பசேலிம-பி³ம்ப³-ப²லாத⁴ர-ஸங்க்ரமணாஞ்சித-ஹாஸம் .. 2..


(பதப்பிரிவு : வாஹனம் + ஆத்த , ப²ல + அத⁴ர, ஸங்க்ரமண + அஞ்சித)


விளக்கம் :


நீலநிறத்துடன் விளங்கும் சிறந்த மயிலை வாகனமாக உடையவன். வில்லேந்தியவன். பழுத்த கோவைப்பழத்தை இகழும்  இதழ்களில் பரவி அணிசெய்யும்  புன்னகையுடன் திகழ்பவன்.


கிங்கிணி-ஸங்கி³-ஶுகோத³ர-ஸோத³ர-மணி-க⁴டிதாங்கி³க-பா⁴ஜம் .

கீர-முகா²க்ருʼதி-நக²-முக²-ஶீலித-வலரிபுஜோத்³ய-து³ரோஜம் .. 3..


(பதப்பிரிவு : ஶுக + உத³ர, முக² + ஆக்ருʼதி, வலரிபுஜா + உத்³யத் + உரோஜம் )


விளக்கம் :


சதங்கைகள் கட்டிய, கிளியின் வயிற்றுக்கு சமமான (மென்மையான), மணிகள் பதித்த மேல்சட்டை அணிந்தவன். இந்திரன் மகளான தெய்வானையை அணைக்கும், கிளியின் அலகுபோன்ற நகங்கள் கொண்ட கைகளை உடையவன். 


அத⁴ர-தலாஹித-ஸுமது⁴ர-வைணவ-ராவ-வஶீக்ருʼத-லோகம் .

கேது-ஸமுஜ்ஜ்வல-தம-சரணாயுத⁴-போ³தி⁴த-வைபு³த⁴-லோகம் .. 4..


விளக்கம் :


இதழ்த்தலத்தில் வைத்த குழலின் மிக இனிய ஒலியால் உலகையே வசப்படுத்துபவன். கொடியில் தகதகக்கும் சேவலின் ஒலியால், ஞானிகளின் கூட்டத்தை விழித்தெழச் செய்பவன்.


குறிப்பு

வைணவ என்றால் வேணுவுடன் தொடர்புடையது 




பஞ்சஶராக்ருʼதி-வஞ்சன-தீ³க்ஷித-விக்³ரஹ-காந்தி-மனோஜ்ஞம் .

வாரண-வத³ன-ஸுராரி-கலேப³ர-தா³ரண-லப்³த⁴-ஸமஜ்ஞம் .. 5..


(பதப்பிரிவு : பஞ்சஶர + ஆக்ருʼதி)


விளக்கம் :


ஐங்கணையோனான மன்மதனின் வடிவத்தை தோற்கச்செய்வதில் உறுதிபூண்ட மேனியழகால் மனம்கவர்பவன். யானை முகம் கொண்ட அசுரனான தாரகாசுரனின் உடலைத் துளைத்து புகழடைந்தவன்.


காஞ்சன-தந்து-விநிர்மித-சேல-விபா⁴ஸுர-நைஜ-வலக்³னம் .

பரம-த³யாலுதயா லகு⁴-தாரித-ஸம்ʼஸ்ருʼதி-ஸாக³ர-மக்³னம் .. 6..


விளக்கம் :


பொன்னிழைகளால் நெய்யப்பட்ட துகிலுடன்  ஒளிவீசும் இடையுடையவன். பெருங்கருணையுடன், சம்சாரக் கடலில் மூழ்கியவரையும் எளிதில் கரைசேர்ப்பவன்.


ஶ்ருதி-புட-மூல-க³தாதி-க்ருʼபா-ரஸ-ஸார்த்³ர-விலோசன-கஞ்ஜம் .

வைணிக-முனிவர-வீணா-வர்ணித-ஸங்க³த-ஶுப⁴கு³ண-புஞ்ஜம் .. 7..


(பதப்பிரிவு : க³த + அதி-க்ருʼபா)


விளக்கம் :


காதளவு சென்ற, அதிக தயாரசத்தால் நனைந்த தாமரைக்கண்களை உடையவன். வீணை வாசிக்கும் சிறந்த முனிவரான நாரதரின் வீணையுடன்  வர்ணிக்கப்பட்ட , ஒன்றுகூடிய நற்குணங்களின் குவியலானவன். 


முக²ரித-ஹாடக-கல்பித-காஞ்சீ-பரிஹித-கடி-க³த-சேலம் .

மணி-மகுடீ-பரிரஞ்ஜித-ஶீர்ஷம்ʼ தை³வத-ஸைனிக-பாலம் .. 8..


விளக்கம் :


கிணுகிணுக்கும், பொன்னால் செய்த ஒட்டியணத்தால் சூழப்பட்ட இடையாடை கொண்டவன். ரத்தினங்கள் பதித்த கிரீடத்தால் எழில் பெறும் சிரத்தை உடையவன். தேவர்களின் படைத்தலைவன்.


விஶ்வநாத²-கவி-ப⁴ணிதமித³ம்ʼ கு³ஹ-மோத³கரம்ʼ ஸுவிகாஸம் .

ப⁴ஜது ஸதை³வ குமார-கு³ணாவலி-வர்ணன-தத்த்வ-விலாஸம் .. 9..


(பதப்பிரிவு : ப⁴ணிதம் + இத³ம், ஸதா³ + ஏவ , கு³ண + ஆவலி


விளக்கம்:


விசுவநாதகவி இயற்றிய, குகனை மகிழ்விப்பதான,. குமரனின் குண வரிசைகளை வர்ணிக்கும் கொள்கையுடன் விளங்கும் இப்பாடல் எப்போதும் (எங்கும்) பரவட்டும்!






Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்