அஷ்டபதீ³ - 6 மூலமும் பொருளும்



 சுலோகம் 1:

ப்ரதபதி ஸதா³ காமே கா மே க³தி꞉ ப⁴விதா(அ)து⁴னா ?

த³ஹதி பவனஶ்சேதோ நேதோ(அ)ஸ்த்யுபாய உதா³ஸிதும்  |

விஹரதி நிஜாராமம்ʼ காமம்ʼ க³தே(அ)பி ஶிவாத்மஜே

ஸகி² மம மனோ மானம்ʼ நூனம்ʼ ஜஹாதி கரோமி கிம்ʼ ||


சுலோகம் 1 பதம்பிரித்து


ப்ரதபதி ஸதா³ காமே கா மே க³தி꞉ ப⁴விதா அது⁴னா ?

த³ஹதி பவனஶ்சேதோ ந இத: அஸ்தி உபாய உதா³ஸிதும் .

விஹரதி நிஜ ஆராமம்ʼ காமம்ʼ க³தே அபி ஶிவாத்மஜே

ஸகி² மம மனோ மானம்ʼ நூனம்ʼ ஜஹாதி கரோமி கிம்ʼ ? 


விளக்கமும் குறிப்புகளும் :


காமன் எப்போதும் என்னை வாட்ட, எனக்கு இப்பொழுது யார் கதி? இளந்தென்றலும் மனதை தகிக்கிறது, இதை லட்சியம் செய்யாமலிருக்க வழியில்லை. என் மனம், தன்மானத்தை விட்டு, தன் தோட்டத்தில் விருப்பப்படி சென்றுலவும் சிவகுமாரனிடம் நிச்சயமாக ஈடுபடுகிறது. என்ன செய்வேன் ?

  • இது ஹரிணீ -  வரிக்கு 18 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.


அஷ்டபதீ³ 6 (காம்போ⁴ஜி ராக³ம், த்ரிபுட தாளம்)


விரசித-கங்கு-வனாவனயா க்ருʼத-தருண-வனேசர-வேஷம் .

த்³ராவித-ஶுக-பிக-ஶாரிகயா த்⁴ருʼத-படு-ம்ருʼக³யா-பரிதோஷம் .. 1..


விளக்கம்:


நான் தினைப்புனத்தை காத்து வந்தேன். அவன் இளம்வேடனாக வேஷம்கொண்டுவந்தான். நான் கிளி மற்றும் குயில்களை ஓட்டிக்கொண்டிருந்தேன். அவன் திறமையாக வேட்டைபுரிவதில் ஆர்வத்தோடிருந்தான்..


பல்லவீ


ஸஹஸா ஸங்க³மய ஸகி² ஶூரம் .

நவ-நவ-கௌஸுமஶர-ஶர-வேத³னயா(அ)த்³ய மயா ஸுகுமாரம் ..


விளக்கம்:


தோழி! மலர்க்கணையோனுடைய அம்புகளால் மென்மேலும் துன்பப்படும் என்னை இப்போதே, வீரனாகிய அழகிய குமரனோடு சேர்த்துவைப்பாயாக !


ஸரப⁴ஸ-வேபித-மானஸயா ப³ஹு-ஸரஸ-கதா²-விஶதே³ஹம் .

ஶப³ர-வராக³தி-ஸவ்யத²யா ஶ்ரித-லலித-தமாஸன-தே³ஹம் .. 2..


(பதப்பிரிவு : விஶத³ + ஈஹம்,  வர + ஆக³தி, லலித-தம -ஸன)


விளக்கம்:


நான் மனத்தில் வேகமாக நடுக்கம் கொண்டேன். அவன் பலவாறு இன்பமாக பேசி தன் ஆசையை தெளிவுபபடுத்தினான். வேடர்தலைவனாகிய என் தந்தை வருவதைக்கேட்டு நான் துயருற்றேன். அவன் மிக அழகிய வேங்கை மரத்தின் வடிவைக் கொண்டான்..


ஜனக-ப்ரதிக³தி-ஹர்ஷிதயா பரித்⁴ருʼத-யுவ-தல்லஜ-ரூபம் .

தத்-புனராக³மனாகுலயா த்⁴ருʼத-ப்⁴ருʼஶ-ஜரட²-த்³விஜ-ரூபம் .. 3..


(பதப்பிரிவு : புன: + ஆக³மன + ஆகுலயா)


விளக்கம்:


தந்தை திரும்பிசென்றதால் மகிழ்ந்தேன். அவன் (மீண்டும்) சிறந்த இளைஞனின் வடிவம் கொண்டான். அவரது  மறுமுறை வருகையால் கலங்கினேன். அவன் மிக வயதான அந்தணரின் உருவத்தைத் தாங்கினான்.


காங்கவ-ஸக்து-மது⁴-ப்ரத³யா நிஜ-ஸலில-த்ருʼஷம்ʼ கத²யந்தம் .

குமரீ-ஸரஸீம்ʼ ஸஹக³தயா ஸ்மர-வசன-ப⁴ரம்ʼ விகிரந்தம் .. 4..


விளக்கம்:


நான் தினைமாவும் தேனும் தந்தேன். அவன் தன் தண்ணீர்த்தாகத்தைச் சொன்னான். நான் குமரிதீர்த்ததுக்கு உடனசென்றேன். அவன் (நீர் பருகியபின்) காதல் மொழிகளை நிறைய பேசினான்.



ப்ரயதன-ஶதகேனாவஶயா பரித³ர்ஶித-க³ஜ-ஹேரம்ப³ம் .

ப⁴ய-ப⁴ர-கலிதாலிங்க³னயா த³ர-ஹஸிதம்ʼ விஹிதாலம்ப³ம் .. 5..


(பதப்பிரிவு : ஶதகேன + அவஶயா, கலித + ஆலிங்க³னயா, விஹித + ஆலம்ப³ம்)


விளக்கம்:


முயற்சிகள் நூறுசெய்தும் வசமாகாமல் நானிருந்தேன். அவன் யானையாக வந்த கணபதியை எனக்குக் காட்டினான். அச்சத்தின் மிகுதியால் அணைத்துக்கொண்டேன். அவன் மெல்ல சிரித்து என்னை பற்றிக்கொண்டான்.


க³தவதி கரிணி விஸாத்⁴வஸயா ஸ்வய-மபி⁴த³ர்ஶித-நிஜ-மூர்திம் .

மர்ஷண-வசன-பராயணயா மது⁴ரஸ-பா⁴ஷண-த³லிதார்திம் .. 6..


(பதப்பிரிவு : த³லித + ஆர்திம்)


விளக்கம்:


யானை சென்றதும் நான் பயம்நீங்கினேன். அவன் தன் உண்மையான வடிவத்தைக் காட்டினான். நான் மன்னிப்புக்கோரி வேண்டினேன். அவன் தேனான இன்சொற்களால் என் துயர்போக்கினான். 



விஶதி³த-மன்மத²-விக்ரியயா ரஹ ஆஶு நயந்தம்ʼ குஞ்ஜம் .

லஜ்ஜித-முகுலித-லோசனயா ரத³-பட-ஜுஷ-மதி⁴-ஸும-மஞ்சம் .. 7..


விளக்கம்:


என் காதலை அறிந்து,  யாருமறியாமல்  கொடிவீட்டுக்கு அழைத்துச் சென்றான். வெட்கத்தில் கண்களை மூடிக்கொண்ட என்னுடைய இதழை (முத்தமிட) விரும்பினான்.


புலகித-சும்பி³த-விக்³ரஹயா ப³ஹுவித⁴-ஸுரத-ப⁴வானந்த³ம் .

ப்ரமத³-ரஸாம்ருʼத-பூரிதயா ஸ்பு²ட-ஹித-ஸரஸ-வசோ-ப்³ருʼந்த³ம் .. 8..


விளக்கம்:


ரோமாஞ்சனம் ஏற்படும்படியாக என்னை அணைத்து மகிழ்ந்தான். நான் இன்ப வெள்ளத்தில் முழுக, பல இதமான இனிய மொழிகளைப் பகர்ந்தான். 


விஶ்வநாத²-கவி-கீ³தமித³ம்ʼ ஶரவணப⁴வ-கு³ண-பரிபூர்ணம் .

ஶிதி²லித-து³ரித-க³ணம்ʼ ஸததம்ʼ பு⁴வி ஜயது ஸதா³ ஶுப⁴-வர்ணம் .. 9..


(பதப்பிரிவு : கீ³தம் + இத³ம்)


விளக்கம்:


விசுவநாதகவியின் இப்பாடல், சரவணபவனின் நற்குணங்கள் நிறைந்தது. கூட்டமான பாவங்களைக் களைவது.  மங்களகரமான அட்சரங்கள் கொண்டது. அது எப்போதும் உலகில் வெற்றியுடன் விளங்கட்டும். 


சுலோகம் 2:


ஸ்வச்ச²ம்ʼ கு³ச்ச²-ஸமுன்மிஷத்-ஸுமப⁴ரம்ʼ மாத்⁴வீ-ஸமாஸ்வாத³னா-

ஶ்ராந்த-ப்⁴ராந்த-மது⁴வ்ரதாஞ்சித-ஶிக²ம்ʼ க்ரூரம்ʼ ப்ரவீர꞉ ஸ்மர꞉ |

மல்லீ-வல்லி-ஜுஷம்ʼ விஷாங்கித-ஶரச்சா²யம்ʼ ஹரிண்யாமிவ

க்³ராஹம்ʼ க்³ராஹமஹோ மயி ப்ரகுருதே ஶார்தூ³ல-விக்ரீடி³தம் ||


சுலோகம் 2 பதம்பிரித்து:


ஸ்வச்ச²ம்ʼ கு³ச்ச²-ஸமுன்மிஷத்-ஸுமப⁴ரம்ʼ மாத்⁴வீ-ஸமாஸ்வாத³னா-

ஶ்ராந்த-ப்⁴ராந்த-மது⁴வ்ரத அஞ்சித-ஶிக²ம்ʼ க்ரூரம்ʼ ப்ரவீர꞉ ஸ்மர꞉ 

மல்லீ-வல்லி-ஜுஷம்ʼ விஷ அங்கித-ஶரச்சா²யம்ʼ ஹரிண்யாமிவ

க்³ராஹம்ʼ க்³ராஹம் அஹோ மயி ப்ரகுருதே ஶார்தூ³ல-விக்ரீடி³தம் 


விளக்கமும் குறிப்புகளும்


பிரகாசமான, கொத்தாக பூக்கும் மலர்கள், மல்லிகைக்கொடியை அலங்கரிக்க, அவற்றின் மதுவை உண்டு களைத்து, மயங்கிய வண்டுகள் அவற்றின் நுனியில் விளங்குகின்றன. மகாவீரனான் காமன், விஷம் தோய்ந்த அந்த கொடிய அம்புகளின் வரிசையை, மானைப்  பிடிக்கவரும் புலியின் விளையாட்டுப்போல், என்மீது செலுத்துகிறான்.

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 

  • புலியின் விளையாட்டு என்ற பொருளில் , சந்தத்தின் பெயரும் பொருத்தமாக சுலோகத்தில் வந்துள்ளது


சுலோகம் 3:

பரீபாகோத்³ரேகாத் பரிமல-ப்⁴ருʼதானாம்ʼ ஸுமனஸாம்ʼ

பராகை³ர்மாலத்யா வியத³னவகாஶம்ʼ விரசயன் |

உத³ர்கஸ்தா²க³ஸ்த்ய-வ்ரதி-ஶிக²ரிணீதாக³ரு-கு²ரை꞉

ஸமுத்பன்ன꞉ ஸ்வாந்தம்ʼ ஶ்வஸன இஹ ஸீமந்தயதி மே ||

 


சுலோகம் 3 பதம்பிரித்து:


பரீபாக உ த்³ரேகாத் பரிமல-ப்⁴ருʼதானாம்ʼ ஸுமனஸாம்ʼ

பராகை³: மாலத்யா வியத்³ அனவகாஶம்ʼ விரசயன் 

உத³ர்கஸ்த² அக³ஸ்த்ய-வ்ரதி-ஶிக²ரி நீத அக³ரு-கு²ரை꞉

ஸமுத்பன்ன꞉ ஸ்வாந்தம்ʼ ஶ்வஸன இஹ ஸீமந்தயதி மே 


விளக்கமும் குறிப்புகளும்


முதிர்ச்சியின் மிகுதியால் நறுமணம் நிறைந்த பெரிய மல்லிகையின் மலர்களின் மகரந்தப் பொடிகளால் ஆகாயத்தை இடையின்றி நிரப்பிய இளந்தென்றல், மலையுச்சியில் அகஸ்திய முனிவர் வசிக்கும் பொதிகையின் மலையிலிருந்து அகில்மரங்களின் வாசனையுடன் கிளம்பி , இங்கு என் இதயத்தை இரண்டாக பிளக்கிறது.

  • இது ஶிக²ரிணீ - வரிக்கு 17 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 

  • இங்கும் "மலையிலுருந்து வந்த" என்ற பொருள்கொண்ட "ஶிக²ரிணீத" என்ற இடத்தில, சந்தத்தின் பெயரும் பொருத்தமாக சுலோகத்தில் இடம்பெற்றுள்ளது


சுலோகம் 4:


ஸ்வாஹா-வல்லப⁴-பா⁴க்³ய-பார-மஹிமா நீஹார-ஶைலாத்மஜா-

ஸ்னேஹாலோகித-ராமணீயக-வபு꞉ பா³ஹா-க்³ருʼஹீதேந்த்³ரபூ⁴꞉ |

மோஹாந்தா⁴ஸுர-மர்த³னைக-நிரதோ வாஹாயிதாஜாதி⁴போ

மாஹாதே³வ-மனோ-வினோத³ன-படுஸ்த்வீஹாம்ʼ ப்ரபு⁴꞉ பூரயேத் || 


சுலோகம் 4 பதம்பிரித்து:


ஸ்வாஹா-வல்லப⁴-பா⁴க்³ய-பார-மஹிமா நீஹார-ஶைலாத்மஜா-

ஸ்னேஹ ஆலோகித-ராமணீயக-வபு꞉ பா³ஹா-க்³ருʼஹீத இந்த்³ரபூ⁴꞉ .

மோஹாந்த⁴ அஸுர-மர்த³னைக-நிரதோ வாஹாயித அஜாதி⁴ப:

மாஹாதே³வ-மனோ-வினோத³ன-படு: து ஈஹாம்ʼ ப்ரபு⁴꞉ பூரயேத் .. 


விளக்கமும் குறிப்புகளும்


அக்னிதேவரின் பாக்கியத்தின் எல்லையான பெருமைகொண்டவன். பனிமலையின் மகளான பார்வதி அன்புடன் பார்த்து மகிழும் அழகான வடிவுள்ளவன். இந்திரன்மகளை இறுகத் தழுவியவன். அறியாமையால் கண்ணிழந்த அசுரர்களை அழிப்பவன். சிறந்த ஆட்டுக்கிடாவை வாகனமாக்கியவன். சிவபெருமானின் மனதை மகிழ்விக்கும் திறமைசாலி. அந்தப் பிரபு நாம் விருப்பத்தை நிறைவேற்றட்டும். 

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 


சுலோகம் 5:


பாது ஶக்த்யாயுதோ⁴(அ)க்லேஶோ லீலா-லாலஸ-மானஸ꞉ |

வல்லீ-மன꞉-பயோ ஜன்ம-விகாஸன-தி³வாகர꞉ ||


விளக்கமும் குறிப்புகளும்


வேலாயுதத்தை தாங்கியவன். துன்பமற்றவன். திருவிளையாடல்கள் செய்வதில் ஆர்வமுள்ளவன். வள்ளியின் மனத்தாமரையை மலர்விக்கும் சூரியன். அவன் நம்மைக் காக்கட்டும். 

  • இது அனுஷ்டுப்⁴ - வரிக்கு 8 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 


இதி ஶ்ரீவிஶ்வநாத²-கவிக்ருʼதௌ கீ³த-கா³ங்கே³ய-காவ்யே அக்லேஶ-ஶக்த்யாயுதோ⁴ நாம த்³விதீய꞉ ஸர்க³꞉

(இதுவே விசுவநாத கவியின் படைப்பாகிய கீத காங்கேய காவியத்தில், “துன்பமற்ற வேலாயுதன்” என்ற இரண்டாம்  சர்கம்)







Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்