அஷ்டபதீ³ - 7 மூலமும் பொருளும்

  சுலோகம் 1:


ஸுகுமார꞉ குமாரோ(அ)பி மான்யாம்ʼ வ்யாதே⁴ஶ-கன்யகாம்  |

அனன்ய-மானஸாம்ʼ ஸ்ம்ருʼத்வா கைதவான்-நிர்யயௌ கி³ரே꞉ ||


சுலோகம் 1 பதம்பிரித்து


ஸுகுமார꞉ குமார꞉ அபி மான்யாம்ʼ வ்யாதே⁴ஶ-கன்யகாம்  

அனன்ய-மானஸாம்ʼ ஸ்ம்ருʼத்வா கைதவாத்  நிர்யயௌ கி³ரே꞉ 


விளக்கமும் குறிப்புகளும் :


மென்மையான குணமுடைய குமரனும், தன் அபிமானத்துக்குரிய வேடர்மகளும்  தன்னையன்றி வேறுசிந்தனையில்லாதவளுமான  வள்ளியை  நினைத்து  யாரும் அறியாமல் (ஸ்கந்த) கிரியிலிருந்து வெளியேறினான். 


  • இது அனுஷ்டுப்⁴ - பாதத்துக்கு  8 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.


 சுலோகம் 2:


வனேசராதீ⁴ஶ-ஸுதாம்ʼ ஸ்மரார்தி³தோ 

வனே ஸனீடே³ லவலீ-மஹீப்⁴ருʼத꞉ |

க³வேஷயம்ʼஸ்தா-மவிலோகயன் கு³ஹோ

 நிஷத்³ய குஞ்ஜே நிப்⁴ருʼதம்ʼ வ்யசீசரத் ||


சுலோகம் 2 பதம்பிரித்து


வனேசர அதீ⁴ஶ-ஸுதாம்ʼ ஸ்மரார்தி³த꞉

வனே ஸனீடே³ லவலீ-மஹீப்⁴ருʼத꞉ 

க³வேஷயன் தாம் அவிலோகயன் கு³ஹ꞉

நிஷத்³ய குஞ்ஜே நிப்⁴ருʼதம்ʼ வ்யசீசரத் 


விளக்கமும் குறிப்புகளும் :


வள்ளிமலைக் காட்டில், வேடர்தலைவன் மகளை தேடியும் காணாமல், காமனால் வாட்டமுற்று, குகன் ஒரு கொடிவீட்டில் அமர்ந்து ஏகாந்தமாக  ஆலோசித்தான்

  • இது வம்ʼஶ-ஸ்த²விலம் - பாதத்துக்கு  12 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.


 சுலோகம் 3:


அத்ரைவ ஸா ப்ராண-ஸமா ஸமாக³தா 

விலம்ப³னேன ப்ரகடாபராதி⁴னம் |

ஸகீ²-வ்ருʼதா குத்ர க³தா விஹாய மாம்ʼ

விலோகிதா சேத்³-வித³தீ⁴ய ஸாந்த்வனாம் ||. 


விளக்கமும் குறிப்புகளும் :


என்னுயிர்க்கு நிகரான அவள் இங்குதானே முன்பு சந்திக்கப்பட்டாள்! தாமதம் செய்ததால் குற்றமிழைத்தவனான என்னை விட்டு, தோழிமார் புடைசூழ எங்கு சென்றாள் ? அவளைக் கண்டால் சமாதானம் செய்வேன். 

  • இது உபஜாதி - பாதத்துக்கு  12 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.


-----------------------------------------------------------------------------------------------------------------------

அஷ்டபதீ³ - 7 (பூ⁴பால ராக³ம், சாபு  தாளம்)


நாயிகா க்வ க³தா ப்ரதீக்ஷ்ய சிராய மாம்ʼ மத³னேன .

பா³தி⁴தா குபிதேவ ஸேதி ந நிர்ணயே ஹ்ருʼத³யேன .. 1..


(பதப்பிரிவு : குபிதா + இவ , ஸா + இதி)


விளக்கம்:


என் நாயகி எங்கே சென்றாள் ? வெகுநேரம் எனக்காக காத்திருந்து, காமனால் துன்பப்பட்டு, (என்னைக் காணாமல்) அவள் கோபம்கொண்டாள் போலும் என்று என் மனதில் நினைக்கிறேன். 


பல்லவி :


ஶிவ ஶிவ விலோசன-பதே² . தாம்ʼ கத²ம்ʼ கரவாணி .. ஶிவ ஶிவ ..


விளக்கம்:


சிவசிவ! அவளை  என் கண்ணில்படும்படி எப்படி செய்வேன் ?


ஸம்ʼஸ்மராமி ததீ³யமாஸ்ய-மலங்க்ருʼதம்ʼ சிகுரேண .

ஸாரஸம்ʼ சலிதாலிநாமிவ மண்டி³தம்ʼ நிகரேண .. 2..


(பதப்பிரிவு : ததீ³யம் + ஆஸ்யம் + அலங்க்ருʼதம், சலித + அலினாம் + இவ)


விளக்கம்:


கூந்தலால்  அழகுபெற்ற அவள் முகத்தை எண்ணிப் பார்க்கிறேன். அசையும் வண்டுகளின் கூட்டத்தால் அணிசெய்யப்பட்ட தாமரைபோலிருப்பது அது.


ஸா ஸஹேத ருஜம்ʼ க்ருʼஶா கத²மர்பிதாம்ʼ விரஹேண .

அப்³ஜினீவ மதா³குலஸ்ய மதங்க³ஜஸ்ய கரேண .. 3..


(பதப்பிரிவு : கத²ம் + அர்பிதாம்)


விளக்கம்:


மெல்லியவளான அவள், விரகத்தால் ஏற்படும் துன்பத்தை எப்படித் தாங்குவாள்? மதம்பிடித்த யானையின் துதிக்கையால் உருவாகும் கலக்கத்தை, ஒரு தாமரைக்கொடி எப்படி தாங்கும் ? 


சிந்தயாமி ததோ³ஷ்ட²-மத்³ய மமார்தி³தம்ʼ ரத³னேன .

கோமலம்ʼ நவ-சூத-பத்ரமிவ க்ஷதம்ʼ விஹகே³ன .. 4..


(பதப்பிரிவு : தத் + ஓஷ்ட²ம் + அத்³ய, மம + அர்தி³தம்ʼ )


விளக்கம்:


மென்மையான புது மாந்தளிர், பறவையால் (அலகுகொண்டு) காயப்படுவது போல, என் பற்களால் காயப்பட்ட அவளது இதழை நினைத்துப் பார்க்கிறேன். 


கிம்ʼ ப்³ரவீதி கிமீக்ஷதே ப³ஹுலாஶ்ருமன்-நயனேன .

கிம்ʼ த³தா⁴தி ஹ்ருʼதி³ ப்ரியா மம வஞ்சிதா ஸ்வஜனேன .. 5..


(பதப்பிரிவு : கிம் + ஈக்ஷதே,  ப³ஹுல அஶ்ருமத் + நயனேன)


விளக்கம்:


தனக்குரியவனாகிய என்னால் ஏமாற்றமடைந்த   என் அன்புக்குரியவள், என்ன சொல்வாள் ? கண்ணீர் நிறைந்த கண்களால் எப்படி பார்ப்பாள்? மனதில் என்ன எண்ணம் கொண்டிருப்பாள் ?


ஸாபராத⁴மிமம்ʼ ஜனம்ʼ கிமு வீக்ஷ்ய ஸா ஸத³யேன .

லோகனேன ப⁴வேத்³ ருஷா-ரஹிதா மமானுனயேன .. 6..


(பதப்பிரிவு : ஸ+அபராத⁴ம் + இமம் , மம + அனுனயேன)


விளக்கம்:


என் சமாதான மொழிகளால் கோபம் நீங்கி, தவறு செய்த என்னை கருணை நிறைந்த பார்வையுடன் நோக்கி  இருப்பாளா ?


மாமுதீ³க்ஷ்ய வதே³தி³யம்ʼ மம தாபதோ³(அ)ஸி த⁴வேதி

தாம்ʼ ஸமீக்ஷ்ய கதே²யமேவ தது³த்தரம்ʼ ஸவிநீதி .. 7..


(பதப்பிரிவு :  மாம் + உதீ³க்ஷ்ய வதே³த் + இயம், தத் + உத்தரம்)


விளக்கம்:


என்னைப்பார்த்து, “என் நாயகனே ! எனக்குத் தாபத்தை விளைவிக்கிறாய்” என்று சொல்வாள். அவளை நோக்கி அதற்கான பதிலை விநயத்தோடு சொல்லத் தான் வேண்டும். 


கோமலாங்கி³ ருஷம்ʼ விஹாய புரோ மமாஶு விபா⁴ஹி .

காம-தாந்த-மித³ம்ʼ மன꞉ குரு மோத³-பூர-வகா³ஹி .. 8..


(பதப்பிரிவு : மம + ஆஶு, தாந்தம் + இத³ம் )


விளக்கம்:


மென்மையான அங்கங்களை உடையவளே ! கோபத்தை விட்டு, என் முன் தோன்றுவாயாக. காமனால் அயர்வுற்ற என் மனதை, இன்ப வெள்ளத்தில் மூழ்கும்படி செய்வாயாக..


விஶ்வநாத²-கவேரித³ம்ʼ வச ஆத³தா⁴து ப²லேன .

ஶ்ரீஶிவாத்மஜ-தோஷதா³யி ஶுப⁴ம்ʼ ந்ருʼணாம்ʼ பட²னேன .. 9..


(பதப்பிரிவு : கவே꞉ + இத³ம்ʼ)


விளக்கம்:


விசுவநாத கவியின் இந்த சொற்கள், மக்களால் படிப்பப்படுவன் பலனாக, சிவகுமாரனை மகிழவித்து, மங்களங்களை தரட்டும் !


-----------------------------------------------------------------------------------------------------------------------------

சுலோகம் 4


தாபம்ʼ மா குரு மாத⁴வாத்மஜ வ்ருʼதா² சேஷ்டாம்ʼ விமுஞ்சாது⁴னா

த்ரைலோக்யைக-த⁴னுர்த⁴ர த்வத³னுஜைவாஸ்தே(அ)ந்தரங்கே³ மம |

தீ³னே தத்³விரஹானலார்த-வபுஷா ஸங்கே³ன ஶங்காகுலே

கின்னு ஸ்யாத் ஸஹஜா-த⁴வே ப்ரயதனம்ʼ யுஷ்மாத்³ருʼஶாம்ʼ ஸாம்ப்ரதம் ||. (ஶார்தூ³ல-விக்ரீடி³தம்ʼ -19)


சுலோகம் 4 பதம்பிரித்து


தாபம்ʼ மா குரு மாத⁴வாத்மஜ வ்ருʼதா² சேஷ்டாம்ʼ விமுஞ்ச அது⁴னா

த்ரைலோக்ய ஏக-த⁴னுர்த⁴ர த்வத் அனுஜா ஏவ ஆஸ்தே அந்தரங்கே³ மம .

தீ³னே தத்³விரஹ அனலார்த-வபுஷா ஸங்கே³ன ஶங்காகுலே

கின்னு ஸ்யாத் ஸஹஜா-த⁴வே ப்ரயதனம்ʼ யுஷ்மாத்³ருʼஶாம்ʼ ஸாம்ப்ரதம் .


விளக்கமும் குறிப்புகளும் :

 

திருமாலின் மகனான மன்மதனே ! தாபம் தரவேண்டாம் ! வீணான செய்கைகளை இப்போது விடுவாயாக! மூவுலகிலும் இணையற்ற வில்வீரனே ! உன் தங்கையே என் மனதில் வசிக்கிறாள். அவளது பிரிவெனும் தீயால் வாடிய உடல்கொண்டு, கவலையால் கலக்கமுற்ற, மைத்துனனிடம் திறமையை காட்டுவது உங்களைப்போன்றவர்களுக்கு ஏற்றது தானா ?

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 



சுலோகம் 5

ஸ்வைராதீ⁴ர-வியோக³-ஸஞ்ஜ்வர-வசோ-வ்யாஹாரக்ருʼத் கானனே

ஸங்கல்பாதி⁴க³த-ப்ரியா-தனு-பரீரம்ப⁴-ப்ரஸஜ்ஜத்கர꞉ |

வல்லீ-லாலஸ-மானஸ꞉ தது³சிதம்ʼ பூ⁴ஷா-விஶேஷம்ʼ வஹன்

ப⁴வ்யம்ʼ ந꞉ ஸுகுமார ஏஷ குருதா-மாத்³ய꞉ குமார꞉ ஸதா³ .|| 


சுலோகம் 5 பதம்பிரித்து


ஸ்வைர அதீ⁴ர வியோக³-ஸஞ்ஜ்வர-வசோ-வ்யாஹாரக்ருʼத் கானனே

ஸங்கல்ப அதி⁴க³த-ப்ரியா-தனு-பரீரம்ப⁴-ப்ரஸஜ்ஜத்கர꞉ 

வல்லீ-லாலஸ-மானஸ꞉ தத் உசிதம்ʼ பூ⁴ஷா-விஶேஷம்ʼ வஹன்

ப⁴வ்யம்ʼ ந꞉ ஸுகுமார ஏஷ குருதாம் ஆத்³ய꞉ குமார꞉ ஸதா³  


விளக்கமும் குறிப்புகளும் :


காட்டில்  தன்னிச்சையாக,  தைர்யமிழந்து, பிரிவு ஜ்வரத்தால் வார்த்தைகள் பேசிக்கொண்டு, கற்பனையில் அடைந்த காதலியை அணைக்க கைகளை விரித்துக்கொண்டு, வள்ளியிடம் ஆசைகொண்ட மனதுடன், அவளுக்கேற்ற சிறந்த அலங்காரங்களை தரித்துக் கொண்டு  மிருதுவான குணமுள்ள குமரன், பழைய பரம்பொருள் ஆவான்.  இவன் நமக்கு நன்மையை எப்போதும் செய்யட்டும்!

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 



இதி ஶ்ரீவிஶ்வநாத²-கவிக்ருʼதௌ கீ³த-கா³ங்கே³ய-காவ்யே ஸுகுமார-குமாரோ நாம த்ருʼதீய꞉ ஸர்க³꞉ 

(இதுவே விசுவநாத கவியின் படைப்பாகிய கீத காங்கேய காவியத்தில், “மென்மையான குமரன்” என்ற மூன்றாம்  சர்கம்)


Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்