அஷ்டபதீ³ - 8 மூலமும் பொருளும்



சுலோகம் 1:

உபாத்³ரி-குஞ்ஜ-நிலயம்ʼ ப³ஹுலானந்த³-வர்த⁴னம் |

வல்லீ-வயஸ்யா வாஸந்தீ வாசமூசே ஸக³த்³க³த³ம் || 


சுலோகம் 1 பதம்பிரித்து


உபாத்³ரி-குஞ்ஜ-நிலயம்ʼ ப³ஹுலா ஆனந்த³-வர்த⁴னம் .

வல்லீ-வயஸ்யா வாஸந்தீ வாசம் ஊசே ஸக³த்³க³த³ம் 


விளக்கமும் குறிப்புகளும் :


     மலையருகே , கொடிவீட்டில் இருக்கும்,  கார்த்திகை மாதருக்கு ஆனந்தத்தை பெருக்கும்  முருகனிடம், வள்ளியின் தோழியான வாஸந்தி, குரல் தழுதழுக்க இந்த சொற்களை உரைத்தாள்.

  • இது அனுஷ்டுப்⁴ - வரிக்கு 8 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 

  • பஹுலா  என்பது கார்த்திகை நக்ஷத்திரத்தின் மறுபெயர்

—-----------------------------------------------------------------------------------------------------------------

அஷ்டபதீ³ - 8 (ஸௌராஷ்ட்ர ராக³ம், ஆதி³ தாளம்)


கோகில-காகலிகாமபி கலயதி கர்ண-புடே(அ)தி-கடோ²ரம் .

த³ர்பக-ப⁴ட-குல-வீர-வசன-ததி-மிவ விஶதி³த-மத³-ஸாரம் ..1..


(பதப்பிரிவு : காகலிகாம் + அபி, ததிம் + இவ)


விளக்கம்:


குயிலின் மெல்லிசையையும் காதினில் கடியதாக கருதுகிறாள். மன்மதனின் சேனைவீரர்களின் வீர வசனக்கோவை போல, தற்பெருமையை தெரிவிப்பதாக (அதைக் கருதுகிறாள்).


பல்லவீ


தாபமிதா தவ ஜாயா ஶ்ரீகு³ஹ .

ஶப³ர-ந்ருʼபதி-தனயா ஸ்மர-வேத³னயா த³யனீயா ..


விளக்கம்:


ஸ்ரீ குகனே! உங்கள் மனைவி தாபமடைந்துள்ளாள். காதல் துன்பத்தால் (வருந்தும்) வேடர்மன்னன்  மகள், (உங்கள்) கருணைக்குரியவள்!


ஸ்வானுப⁴வேன கலா-ப்⁴ருʼத-மதுஹின-கர-மஹரீஶ-ஸமானம்ʼ

நிஶ்சினுதே காரண-கு³ண-ஸங்க்ரம-நய-மபி குருதே மானம் .. 2..


(பதப்பிரிவு : ப்⁴ருʼதம் + அதுஹின-கரம் +  அஹரீஶ-ஸமானம் )


விளக்கம்:


தன் அனுபவத்தில், சந்திரன், வெப்பமான கிரணங்களால் சூரியனுக்கு சமானமாக இருப்பதைக்கருதி, (குளிர்ந்த கதிர்கள் கொண்டவன் என்ற  பெயருக்கு) காரணமான தன் குணங்களையே கடந்திருக்கும் அவன் நடத்தையைக்கண்டு கோபம் கொள்கிறாள்.


மனஸி கரோதி படீர-மஹீத்⁴ர-ஸமீர-கிஶோர-விஹாரம் .

பித்ருʼபதி-ஹரித³தி⁴-க³மன-வஶாதி³வ து³꞉ஸஹ-வைஶஸ-கோ⁴ரம் .. 3..


(பதப்பிரிவு : ஹரித்³ + அதி⁴க³மன-வஶாத் + இவ )


விளக்கம்:


சந்தனமலையினின்று வரும் இளந்தென்றலின் விளையாட்டை,  தாங்கமுடியாத துயரைத்தரும் கோரமானதாக மனதில் கொள்கிறாள். அது யமனின் திசையிலிருந்து வருவதனால் போலும்.


ஹ்ருʼத³ய-குஹர-நிலயஸ்ய ஸுமாயுத⁴-பா³ண-பதா²த³வனம்ʼ தே .

ஸ்த²க³யதி ஹ்ருʼத³யம்ʼ கலயிது-மஸக்ருʼத் கர-யுக³த꞉ ஸத³னம்ʼ தே .. 4..


(பதப்பிரிவு : பதா²த் + அவனம், கலயிதும் + அஸக்ருʼத்)


விளக்கம்:


இதயக்குகையில் நிலைபெற்ற உம்மை, மன்மதனின் மலரம்புகளின் தாக்கத்திலிருந்து காக்க எண்ணி, அடிக்கடி உம் இருப்பிடமான தன் நெஞ்சை இரு கைகளாலும் மறைத்துக் கொள்கிறாள்.


சித்ர-படே ப்ரவிலிக்²ய ப⁴வந்தம்ʼ காங்க்ஷித-வத்யனுனேதும் .

லேக²ன-வஸ்து பரமபி ஸகம்பா நாஶகதே³வ க்³ரஹீதும் .. 5..


(பதப்பிரிவு : காங்க்ஷி-வதீ + அனுனேதும் , ந + அஶகத் + ஏவ)


விளக்கம்:


படத்தில் தங்களை எழுதி, சமாதானபடுத்த விரும்பி, ஆனால்  நடுக்கம்கொண்டவளாக, எழுதுபொருள் எதையும் பிடிக்க முடியாமலே இருக்கிறாள்.


த⁴ரதி தனௌ ஸ்மர-க³த³-யுஜி நீரஸ-கீர்ண-குஸுமஶர-ஜாலம் .

மேசக-த்³ருʼகி³வ வியோகி³-ம்ருʼகா³ந்தக-மத³ன-வனேசர-ஜாலம் .. 6..


(பதப்பிரிவு : மேசக-த்³ருʼக் + இவ )


விளக்கம்:


காமநோயுற்ற தன்மேனியில் வாடிய மலர்க்கணைகளின் குவியலைத் தாங்குகிறாள். பிரிவுற்றவர்கள் என்ற மான்களை கொல்லும் மன்மதன் என்ற வேடனின் வலையை தாங்கும் (அதனுள் அகப்பட்ட) பெண்மான் போல இருக்கிறாள். 


கலயதி ஶைத்யோபசரண-மபி ப³ஹு-பரிஜன-கலித-மபார்த²ம் .

வேதி³-க³தானல- விஹிதமிவ க்⁴ருʼதம்ʼ தாப-ஸுபோஷ-ஸமர்த²ம் .. 7..


(பதப்பிரிவு : ஶைத்ய + உபசரணம் + அபி, கலிதம் + அபார்த²ம் , க³த + அனல- விஹிதம் + இவ )


விளக்கம்:


பல சேடியர் செய்யும் (சந்தனம் தடவுதல் முதலிய) தாபம் தீர்க்கும் உபசாரங்களை வீணென்று கருதுகிறாள். யாக குண்டத்தில் இருக்கும் நெருப்புக்கு நெய்வார்ப்பது போல, இவை வெப்பத்தை நன்கு வளர்க்க வல்லவை (என்று நினைக்கிறாள்)


த்⁴யாயதி நந்த³தி பஶ்யதி மூர்ச²தி ஸீத³தி கா³யதி ஶேதே .

ஶ்வஸிதி ஸ்வித்³யதி ஜ²டிதி த⁴வேதி ச நிக³த³தி பா³ஷ்பம்ʼ ஸூதே .. 8..


(பதப்பிரிவு : த⁴வ + இதி)


விளக்கம்:


(அவள்) நினைக்கிறாள், மகிழ்கிறாள், பார்க்கிறாள், மயங்குகிறாள், பாடுகிறாள் , படுக்கிறாள். பெருமூச்சு விடுகிறாள், வேர்க்கிறாள். திடீரென்று  “என் கணவா” என்று சொல்கிறாள், கண்ணீர் விடுகிறாள்.


விஶ்வநாத²-கவி-பா⁴ஷித-மித³மபி கு³ஹபர-தர-கமனீயம் .

கு³ஹ-விரஹார்தி³த-வனசர-து³ஹித்ருʼ-ஸகீ²-வச ஆத³ரணீயம் .. 9..


(பதப்பிரிவு : பா⁴ஷிதம் + இத³ம் + அபி, விரஹ + அர்தி³த)


விளக்கம்:


விசுவநாத கவியின் கூற்றான இதுவும் மிகவும் குஹனைப்பற்றியே இருப்பதால் அழகானது. முருகனைபிரிந்து வருந்தும் வேடர்மகளின் தோழியின் பேச்சு  ஆதரவு செய்யத்தக்கது.


Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்