அஷ்டபதீ³ - 9 மூலமும் பொருளும்





சுலோகம் 1:

ப்ரஸூன-ஶயனீய-மப்யதனு-பா³ண-தல்பாயதே

படீரஜ-ரஜோ(அ)ங்க³ஜானல-சலத்-ஸ்பு²லிங்கா³யதே |

யுகா³ந்த-மிஹிராயதே தனுபு⁴வ꞉ ஶஶீ ஷட்பத³-

த்⁴வநிஶ்ச குலிஶாயதே விபினசாரி-ப்ருʼத்²வீஶிது꞉ ||


சுலோகம் 1 பதம்பிரித்து


ப்ரஸூன-ஶயனீயம்ʼ அபி அதனு-பா³ண-தல்பாயதே

படீரஜ-ரஜோ அங்க³ஜ அனல-சலத்-ஸ்பு²லிங்கா³யதே .

யுகா³ந்த-மிஹிராயதே தனுபு⁴வ꞉ ஶஶீ ஷட்பத³-

த்⁴வநிஶ்ச குலிஶாயதே விபினசாரி-ப்ருʼத்²வீஶிது꞉ .


விளக்கமும் குறிப்புகளும் :


மலர்ப்படுக்கையும் காமபாணங்களின் அம்புப்படுக்கையாகிறது. சந்தனக்கலவையின் துகள்கள்  காமக்கினியின் தெறிக்கும் பொறிகளாகின்றன. வேடர்மன்னனின் மகளான வள்ளிக்கு, சந்திரன் யுகமுடிவின் சூரியனாகிறான். வண்டுகளின் ஓசை இடியோசையாகிறது.

  • இது ப்ருʼத்²வீ - வரிக்கு 17 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 

—--------------------------------------------------------------------------------------------------------------

அஷ்டபதீ³ - 9 (பி³லஹரி அல்லது தே³ஶாக்ஷி ராக³ம், த்ரிபுட தாளம்)


கரதல-க³தமபி ஹல்லக-ஸூனம் .

ஸா தனுதே குவலயமிவ தூ³னம் .. 1..


(பதப்பிரிவு : க³தம் + அபி, குவலயம் + இவ)


விளக்கம்:


கையில் வைத்துள்ள செந்தாமரை மலரையும், அவள் (பகலில் கூம்பும்) அல்லிமலர் போல (தனது ஜ்வரத்தால்) வாடியதாக செய்கிறாள்.


பல்லவீ

வல்லிகா தவ விரஹே ஹே கு³ஹ .


விளக்கம்:


ஹே குகனே ! உனது பிரிவினால் வள்ளி …



உபஹ்ருʼத-பி³ஸ-லதிகாமனுமத்யா .

விஷத⁴ர-தனுமிவ பஶ்யதி பீ⁴த்யா .. 2..

(பதப்பிரிவு : லதிகாம் அனுமத்யா, தனும் + இவ)


விளக்கம்:


அனுமதி பெற்று அவளுக்கு (எங்களால்) தரப்பட்ட தாமரைக்கொடியையம் பாம்பின் உடலைப் பார்ப்பது போல பயத்துடன் பார்க்கிறாள். 

  • தாமரைக்கொடியை  சூடு தணிக்கும் என்று மாலை மற்றும் வளையாக அணியத் தந்தனர் 


க்ருʼத-மலயஜ-ரஸ-லேபன-தா³ஸ்யாம் .

ரசயதி து³꞉க²-சயாம்ʼ ஸ்வ-வயஸ்யாம் .. 3..


விளக்கம்:


சந்தனம் தடவிவிடும் பணியை செய்யும் தன் தோழியை (அதை விரும்பாததால்) மிக்க வருத்தம் கொள்ளும்படி செய்கிறாள்.


குச-க⁴ட-தட-த்⁴ருʼத-மௌக்திக-மாலாம் .

குருதே(அ)ஸிதமணி-யுஜமிவ நீலாம் .. 4..


விளக்கம்:


கலசம் போன்ற மார்பகத்தில் அணிந்துள்ள முத்துமாலையை (தன் வாட்டத்தால்) இந்திரநீலமணியால் செய்தது போல நீலநிறமாக மாற்றிவிடுகிறாள்.


வ்யத²யதி பரிஜன-முப-தனு-வாஸம் .

ஶ்வஸித-ஸமீரண-ஜனித-நிராஸம் .. 5..


(பதப்பிரிவு : பரிஜனம் + உப)


விளக்கம்:


(தன்) அருகில் இருக்கும் சேடிமார்களை, பெருமூச்சினால் ஒதுக்கி துயரப்படவைக்கிறாள்.


க்வசித³பி⁴-திஷ்ட²தி மலய-ஸமீரம் .

விரஹி-யுகா³னல-மரஸா தீ⁴ரம் .. 6..


(பதப்பிரிவு : க்வசித் + அபி⁴திஷ்ட²தி யுக³ + அனலம் + அரஸா)


விளக்கம்:


பிரிவுற்றவர்களுக்கு யுகமுடிவின் அக்கினிபோன்ற, மெதுவாக வீசும் தென்றல்காற்றை, வலுவற்றவளாக அவ்வப்போது எதிர்கொண்டு நிற்கிறாள்.


குஞ்ஜக³-மஞ்ஜுல-மது⁴கர-நாத³ம் .

நிர்ணயதே கு³ரு-மஶனி-நிநாத³ம் .. 7..


(பதப்பிரிவு : கு³ரும் அஶனி)


விளக்கம்:


கொடிவீட்டில் கேட்கும் வண்டுகளின் இனிய ஓசையை, பேரிடியாக கருதுகிறாள். 


ப்ரதிகல-மஞ்ஜலி-க்ருʼத³தி⁴-நிடாலம் .

வத³தி கு³ஹேதி ஸபா³ஷ்ப-கபோலம் .. 8..


(பதப்பிரிவு : ப்ரதிகலம் + அஞ்ஜலி-க்ருத் + அதி⁴-நிடாலம் , கு³ஹ + இதி)


விளக்கம்:


நெற்றியில் மீது கைகளை குவித்து அஞ்சலி செய்தபடி எப்போதும் “குகனே” என்று கன்னங்களில் கண்ணீர் வழியச்,  சொல்கிறாள்.


விஶ்வநாத²-கவி-விரசித-கீ³தம் .

ப⁴வது ஸுகா²ய ந்ருʼணா-மவிகீ³தம் .. 9..


(பதப்பிரிவு : ந்ருʼணாம் அவிகீ³தம்)


விளக்கம்:


விசுவநாத கவி இயற்றிய பழியற்ற இந்தப்பாடல், மக்களுக்கு சுகம் தரட்டும்.


—----------------------------------------------------------------------------------------------------------------------------

சுலோகம் 2 


ஶேதே திஷ்ட²தி யாதி ச ப்ரலபதி ப்⁴ராம்யத்யபி⁴-த்⁴யாயதி

ப்ரோன்மீலத்யபி⁴தா⁴வதி ப்ரஜபதி ஹ்யுத்திஷ்ட²தி ஸ்ரம்ʼஸதே |

தீ³ர்க⁴ம்ʼ நி꞉ஶ்வஸிதி க்ஷணேன ஹஸதி க்ருʼஶ்யத்யனங்க³-ஜ்வரே

தத்தாத்³ருʼஶ்யபி ஜீவதி த்வயி ரஸாத் தாம்ʼ பாஹி தே³வ த்³ருதம் ||


சுலோகம் 2 பதம்பிரித்து


ஶேதே திஷ்ட²தி யாதி ச ப்ரலபதி ப்⁴ராம்யதி அபி⁴-த்⁴யாயதி

ப்ரோன்மீலதி அபி⁴தா⁴வதி ப்ரஜபதி ஹி உத்திஷ்ட²தி ஸ்ரம்ʼஸதே .

தீ³ர்க⁴ம்ʼ நி꞉ஶ்வஸிதி க்ஷணேன ஹஸதி க்ருʼஶ்யதி அனங்க³-ஜ்வரே

தத்தாத்³ருʼஶீ அபி ஜீவதி த்வயி ரஸாத் தாம்ʼ பாஹி தே³வ த்³ருதம் .


விளக்கமும் குறிப்புகளும் :


(அவள்) படுக்கிறாள், அமர்கிறாள், நடக்கிறாள், பிரலாபம் செய்கிறாள், திரிகிறாள், தியானம் செய்கிறாள், கண்திறக்கிறாள், ஓடிச்செல்கிறாள் , ஜெபிக்கிறாள், நிற்கிறாள், வீழ்கிறாள். நீண்ட பெருமூச்சு விடுகிறாள், கணத்தில் சிரிக்கிறாள், காமஜ்வரத்தால் இளைத்து வாடுகிறாள். இப்படியெல்லாம் இருந்தும் உம்மிடத்தில் உள்ள அன்பினால் உயிர்வாழ்கிறாள். விரைவில் அவளைக் காக்கவேண்டும் தேவா!

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 


சுலோகம் 3:


தூ³ரோத³ஞ்சித-பஞ்சஶாக²-மக²பு⁴க்-ஸந்தோ³ஹ-ஸம்ப்ரார்த²னா-

ஸாப²ல்யாய ஶிதாக்³ர-ஶக்தி-த³லித-க்ரௌஞ்சாசலாதே³꞉ ப்ரபோ⁴꞉ |

ஸம்ʼஸக்தேந்த்³ர-ஸுதா-பயோத⁴ர-தடீ-காஶ்மீரஜாங்க³ஸ்ய தே

ஸானந்த³ஸ்ய ஶுபா⁴ய ஸந்த்விஹ மஹாஸேனஸ்ய த்³ருʼஷ்ட்யஞ்சலா꞉ ||


சுலோகம் 3 பதம்பிரித்து:


தூ³ர உத³ஞ்சித-பஞ்சஶாக²-மக²பு⁴க்-ஸந்தோ³ஹ-ஸம்ப்ரார்த²னா-

ஸாப²ல்யாய ஶித அக்³ர-ஶக்தி-த³லித-க்ரௌஞ்ச அசலாதே³꞉ ப்ரபோ⁴꞉ ,

ஸம்ʼஸக்த இந்த்³ர-ஸுதா-பயோத⁴ர-தடீ-காஶ்மீரஜ அங்க³ஸ்ய தே

ஸானந்த³ஸ்ய ஶுபா⁴ய ஸந்து இஹ மஹாஸேனஸ்ய த்³ருʼஷ்டி அஞ்சலா꞉ .


விளக்கமும் குறிப்புகளும் :


நீண்டு தூக்கப்பட்ட  கைகளை உடைய மகபதியான இந்திரனின் அத்தனை பிரார்த்தனைகளும் ஸபலமாகும்படி , கூரான முனைகொண்ட வேலாயுதத்தால் கிரௌஞ்ச மலையை பிளந்த பிரபு, தெய்வானையின் மார்பில் பூசிய குங்குமப்பூவை (அவளை அணைத்ததால் )தன் அங்கங்களில் தாங்கிய ஆனந்தம் நிறைந்த மஹாஸேனனின் கடைக்கண் பார்வைகள் உமக்கு இங்கு   சுபங்களுக்கு காரணமாகட்டும்.

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 



இதி ஶ்ரீ-விஶ்வநாத²-க்ருʼதௌ கீ³த-கா³ங்கே³ய-காவ்யே ஸானந்த³-மஹாஸேனோ நாம சதுர்த²꞉ ஸர்க³꞉ .

(இதுவே விசுவநாத கவியின் படைப்பாகிய கீத காங்கேய காவியத்தில், ”மகிழ்வுற்ற மகாசேனன்” என்ற நான்காம்  சர்கம்)



Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்