அஷ்டபதீ³ - 10 மூலமும் பொருளும்

 சுலோகம் 1:

இஹ கி³ரி-நிகடே கரோமி வாஸம்ʼ, த்³ருத-தர-மாநயனே யதஸ்வ தஸ்யா꞉ .

இதி கு³ஹ-கதி²தம்ʼ நிஶம்ய வாக்யம்ʼ, ஸவினய-மேத்ய ஸகீ² ஜகா³த³ வல்லீம் .


சுலோகம் 1 பதம்பிரித்து


இஹ கி³ரி-நிகடே கரோமி வாஸம்ʼ, த்³ருத-தரம்ʼ ஆநயனே யதஸ்வ தஸ்யா꞉ .

இதி கு³ஹ-கதி²தம்ʼ நிஶம்ய வாக்யம்ʼ, ஸவினயம்ʼ ஏத்ய ஸகீ² ஜகா³த³ வல்லீம்


விளக்கமும் குறிப்புகளும் :


“இங்கு மலையருகில் நானிருப்பேன். மிக விரைவில் வள்ளியை இங்கு அழைத்துவர முயல்வாயாக “, என்று குகன் சொன்ன வாக்கியத்தை விநயத்துடன் கேட்டு தோழி வள்ளியிடம் வந்து (பின்வருமாறு) சொன்னாள்.

  • இது புஷ்பிதாக்³ரா - வரிக்கு 12 மற்றும் 13 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 

—---------------------------------------------------------------------------------------------------------------------

அஷ்டபதீ³ - 10 (ஆனந்த³பை⁴ரவீ ராக³ம் , ஆதி³ தாளம்)


க்வணதி மது⁴ரநிதா⁴னே பிக இஹ ருஜமேதி .

சலதி விரஹி-கத³னே மருதி ஸ ஶுச-முபயாதி .. 1..


(பதப்பிரிவு : ருஜம் + ஏதி , ஶுசம் + உபயாதி .


விளக்கம்:


இனிமையின் இருப்பிடமான குயில் கூவும்போது, மனவருத்தம்  கொள்கிறார். பிரிவுற்றவரை வாட்டும் காற்று அசைந்தாலே துயரம் அடைகிறார்.


பல்லவீ

தவ கமனோ விரஹீ தே . ஸகி² ஸீத³தி வல்லி 


விளக்கம்:


வள்ளி! உன் அன்பர் உன் பிரிவினால் மனம்வாடுகிறார்.


ஹஸதி வகுல-கலாபே த்⁴ருʼதிமதி விஜஹாதி .

ரணதி ஸமத³-மது⁴பே ரஜஸி பு⁴ஜ-முபத³தா⁴தி .. 2..


(பதப்பிரிவு : த்⁴ருʼதிம் + அதி விஜஹாதி , பு⁴ஜம் + உபத³தா⁴தி)


விளக்கம்:


மகிழ மலர்க்கொத்து சிரிப்பதைப் பார்த்து தைரியத்தை இழக்கிறார். மதம்கொண்டு வண்டுகள் முரல, (தரையில்) புழுதியில், தன் கையில் தலைசாய்த்து  படுக்கிறார்.


லஸதி குமுத³-ஸஹாயே ஸதி வஸதி நிலீய .

கனதி குரப³க-சயே விரமதி கி³ர-மபி⁴தா⁴ய .. 3..


(பதப்பிரிவு : கி³ரம் + அபி⁴தா⁴ய )


விளக்கம்:


தோழி ! அல்லிமலரின் நண்பனான சந்திரன் ஒளிவீசும்போது, (அதைப்பார்க்க விரும்பாமல்) மறைந்து வசிக்கிறார். மருதோன்றி மலர்க்கொத்து ஒளிவீசுவதைப் பார்த்து, உன்னை அழைத்து பிறகு பேச்சை நிறுத்துகிறார்.


வஸதி க³ஹன-குடீரே பரிஜன-மபஹாய .

ஶ்வஸிதி விமல-முகுரே ப்ரதிக்ருʼதி-மலகு⁴ விதா⁴ய .. 4..


(பதப்பிரிவு : பரிஜனம் + அபஹாய, ப்ரதிக்ருʼதிம் + அலகு⁴)


விளக்கம்:


அடர்ந்த (கொடிவீட்டுக்) குடிலில், தன் சேவகர்களை தவிர்த்து, (தனியே) தங்குகிறார். தூய கண்ணாடியில், தன் பிரதிபிம்பம் தெளிவற்று இருக்கும்படி, பெருமூச்சு எறிகிறார்.


 வத³தி ஸுவிஶ்வநாதே² ம்ருʼட³-ஸுத-ப⁴ஜனாய .

மனஸி க்ருʼத-ஶுப⁴-கதே² கு³ஹ உத³யது குஶலாய .. 5..


விளக்கம்:


சிவக்குமாரனை போற்றுவதற்கு  இவ்வாறு நல்ல விசுவநாத கவி சொல்லும்போது, (அவனது) சுபமான கதைகளை எண்ணும் மனதில் சவுக்கியத்தைத் தர குகன் உதிக்கட்டும்..

----------------------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு: 


கீதகோவிந்தத்தில் 10வது அஷ்டபதியில் 5 அடிகளே கிடைத்து, அவையே பாடப்படுகின்றன. அதே போல இந்நூல் ஆசிரியரும் செய்துள்ளார் என்றெண்ணப்படுகிறது.


Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்