அஷ்டபதீ³ - 11 - மூலமும் பொருளும்

சுலோகம் 1:

பூர்வம்ʼ யத்ர ஸஹ த்வயா ஸுமஶரோ தே³வேன ஸித்³தா⁴ர்தி²த꞉

தத்ர த்வச்ச²யனாஸனே பரிம்ருʼஶன் ஸாஶ்ரம்ʼ ப³ஹு வ்யாஹரன் |

த்⁴யாயம்ʼ த்⁴யாயமபி த்வதீ³ய-வத³னம்ʼ நாமாபி ஸங்கீர்தயன்

ஸ்தப்³த⁴ஸ்த்வத்³-ரத³னச்ச²தா³ம்ருʼத-ரஸாஸ்வாத³ம்ʼ கு³ஹோ வாஞ்ச²தி || 


சுலோகம் 1 பதம்பிரித்து 


பூர்வம்ʼ யத்ர ஸஹ த்வயா ஸுமஶரோ தே³வேன ஸித்³தா⁴ர்தி²த꞉

தத்ர த்வத் ஶயனாஸனே பரிம்ருʼஶன் ஸாஶ்ரம்ʼ ப³ஹு வ்யாஹரன் .

த்⁴யாயம்ʼ த்⁴யாயம் அபி த்வதீ³ய-வத³னம்ʼ நாம அபி ஸங்கீர்தயன்

ஸ்தப்³த⁴꞉ த்வத்³-ரத³னச்ச²த³ அம்ருʼத-ரஸாஸ்வாத³ம்ʼ கு³ஹோ வாஞ்ச²தி .


விளக்கமும் குறிப்புகளும் :


முன்னர் எந்த இடத்தில் உன்னோடு சேர்ந்து, (நம்) தேவன் முருகன், மலர்ப்பாணனை வெற்றியுள்ளவனாக செய்தானோ, அங்கேயே, நீ இருந்த ஆசனத்தை கண்ணீரூடன் வருடி, பலவாறு பேசிக்கொண்டு, உன் முகத்தையே விடாமல் தியானித்து, உன் பெயரைப் பாடிக்கொண்டு, (வெளியுலக) உணர்வற்று, குகன், உன் இதழ் அமுதத்தை சுவைக்க ஆசைப்படுகிறான்.

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 

  • இதில், தீர்த்தக்ஷேத்திரத்திற்கு சென்ற பக்தன் தன் இஷ்ட தெய்வத்தின் அருளைவேண்டி செய்யும் செயல்கள் போல தொனிக்கும்படியாக முருகனின் செயல்களை தோழி வர்ணிக்கிறான்.

—----------------------------------------------------------------------------------------------------------------------------

அஷ்டபதீ³ - 11 (கேதா³ர கௌ³ல ராக³ம், ஆதி³ தாளம் )


மலயஜ-வாதே ஸ்வயமுபயாதே ஸரப⁴ஸ-மஞ்ஜலி-காரீ .

ப்ருʼச்ச²தி குஶலம்ʼ தாவகமகி²லம்ʼ ஸர்வக³-மமு-மபி⁴ஸாரீ .. 1..


(பதப்பிரிவு : ஸ்வயம் + உபயாதே, ஸரப⁴ஸம் + அஞ்ஜலி, தாவகம் அகி²லம்ʼ ஸர்வக³ம் அமும் அபி⁴ஸாரீ)


விளக்கம் 


பொதிகைத்தென்றல் தானாக வந்தடையும்போது, பரபரப்புடன் எதிர்கொண்டு கைகூப்பி அஞ்சலிசெய்து, அது எங்கும் செல்லக்கூடியது என்பதால், உனது குசலத்தை (காற்றிடம்) கேட்கிறார்.


பல்லவீ

ஶைல-ஸனீடே³ குஸுமாபீடே³ நிவஸதி வீருத⁴கா³ரே .

அர்தே⁴ந்தீ³வர-பா³ந்த⁴வ-ஶேக²ர-நந்த³ன இத ஸஹகாரே ..


(பதப்பிரிவு : வீருத்⁴ + அகா³ரே, அர்த⁴ + இந்தீ³வர )


விளக்கம் 


மலைக்கருகில், மலர்களை கீரிடம்போல அணிந்து மாமரம் விளங்க,  கொடிவீட்டில், பாதிப்பிறையணிந்த பெருமானின் குமாரர் வசிக்கிறார்.

(இந்தீ³வர-பா³ந்த⁴வ  என்றால் அல்லியின் நண்பனான சந்திரன்)


கூ³ஹதி கர்ணம்ʼ ப்ரஸ்ருʼஜதி தூர்ணம்ʼ ஸ்மர-கு³ண-ஶிஞ்ஜித-பே⁴தே³ .

பதத³பி பர்ணம்ʼ ஶிரஸி ந கீர்ணம்ʼ பு³த்⁴யதி விஸரதி கே²தே³ .. 2..


விளக்கம் 


காமதேவனின் நாணாக விளங்கும் வண்டுகள் ஒலிசெய்ய, வேகமாக காதை மூடிக்கொள்கிறார். துயர் பரவியதால், உதிர்ந்து தலையில் விழும் இலையைக்கூட உணர்வதில்லை.


மருது³பனீதம்ʼ சம்பக-சூதம்ʼ விகச-ஸுமௌக⁴-மஜஸ்ரம் .

மத்வா(ஆ)நங்கீ³-மானல-ப⁴ங்கீ³-மம்மய-மஸ்ருʼஜ-தி³வாஸ்ரம் .. 3..


(பதப்பிரிவு : மருத்³ + உபனீதம்ʼ ஸும + ஓக⁴ம் + அஜஸ்ரம் , மத்வா + ஆனங்கீ³ம்ʼ ஆனல ப⁴ங்கீ³ம்ʼ அம்மயம்ʼ அஸ்ருʼஜத்³ இவ அஸ்ரம்)


விளக்கம் 


காற்றினால் அடிக்கடி  எடுத்துவரப்பட்ட செண்பகம், மாம்பூ முதலிய மலர்க்கூட்டங்களை காமதேவனின் நெருப்பலைகளாக எண்ணி, (தீயை தணிவிக்க) தண்ணீர்போல  கண்ணீர் வடிக்கிறார்.


சந்த³ன-ஸாரம்ʼ ஸகு⁴ஸ்ருʼண-நீரம்ʼ கோ³பயிதும்ʼ ஸிதிமானம் .

அபி⁴த்³ருத-மங்கே³ ப்ரஸரத³னங்கே³ த⁴ரதி ஶ்ரமஜல-லீனம் .. 4..


(பதப்பிரிவு : அபி⁴த்³ருதம் + அங்கே³,  ப்ரஸரத்³ + அனங்கே³)


விளக்கம் 


(வாட்டத்தால்)  வெளிரிய அங்கத்தை மறைக்கப்பூசிய குங்குமப்பூ கலந்த சந்தனக் குழம்பு, வியர்வையுடன் கலந்து ஓடும்படி, ஆசைபரவும் தன் அங்கங்களில் தரிக்கிறார்.


நினத³தி ஹம்ʼஸே கமல-வதம்ʼஸே த்வத³பி⁴க³தி-தி⁴யா ஶங்கே ., 

ஸஜ்ஜதி ப⁴வதீம்ʼ வரதனு ஸுத³தீம்ʼ த்³ருʼட⁴-முபகூ³ஹிதுமங்கே .. 5..


(பதப்பிரிவு : த்வத்³ + அபி⁴க³தி, த்³ருʼட⁴ம் + உபகூ³ஹிதும் + அங்கே )


விளக்கம் 


அழகியே! தாமரைமலரின் மேல்விளங்கும் அன்னம் ஒலியெழுப்ப, நீ வந்துவிட்டாய் என்ற எண்ணத்துடன், அழகிய பற்களோடு விளங்கும் உன்னை மடிமேலமர்த்தி இறுகத்தழுவ புறப்படுகிறார்.


பல்லவ-தல்பம்ʼ பாவக-கல்பம்ʼ ப⁴வதி விபோ⁴ரிதி மன்யே .

க்³லபித-ஶரீராத் தத³னுவிகாராத்³-வனசர-நாயக-கன்யே .. 6..


(பதப்பிரிவு : விபோ⁴: + இதி)


விளக்கம் 


வனவேடர்களின் மன்னன் மகளே! இளந்தளிர்களான விரிப்பு, அதன் சம்பந்தத்தினால் வாடிய மேனியுடைய பிரபுவுக்கு, நெருப்புக்கு சமமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். 


மா குரு ஶோகம்ʼ தனு தமஶோகம்ʼ ஸப²லயிதும்ʼ ஜ²ஷ-கேதும் .

ந குரு விலம்ப³ம்ʼ முக²-ஶஶி-பி³ம்ப³ம்ʼ ஸஹஸித-மேஹி விதா⁴தும் .. 7..


(பதப்பிரிவு : தம் + அஶோகம், ஸஹஸிதம் + ஏஹி )


விளக்கம் 


வருத்தம் அடையாதே. அவரையும் சோகமற்றவராக செய். மீன்கொடியோனான காமதேவனுக்கு வெற்றி உண்டாகும்படி, தாமதம் செய்யாமல், அவரது முகமெனும் சந்திரன், புன்னகைப்பூத்து விளங்கச்செய்ய (அவரிடம்) வா.


ஸ்மர-க்ருʼத-தாடே³ ப³ஹு-வித⁴-பீடே³ ப⁴க³வதி ஹே ஸகி² ரோஷம் .

ந கலய பா⁴மினி விஹர விலாஸினி ஶ்ருʼணு வசனம்ʼ ஹதரோஷம் .. 8..


விளக்கம் 


தோழியே! காமதேவனால் தாக்கப்பட்டு, பலவித துன்பங்களை அடைந்த பகவானிடத்தில் கோபம் கொள்ளாதே. அவருடன் இன்பமாக சேர்ந்திரு. என்சொற்களைப்பொறுமையாக கேள்.



விஶ்வநாத²-கவி-ப⁴ணிதமித³ம்ʼ பு⁴வி ஸுக²யது கா³யக-ஜாதம் .

ஜக³த³தி⁴-பாலன-க்ருʼத-கு³ஹ-கே²லன-வர்ணன-தத்பர-கீ³தம் .. 9..


(பதப்பிரிவு : ப⁴ணிதம்  + இத³ம் ஜக³த்³ + அதி⁴பாலன)


விளக்கம் 


விசுவநாத கவி உரைத்த இப்பாட்டு, உலகில் பாடகர் கூட்டத்தை மகிழ்விக்கட்டும். உலகையே பரிபாலனம் செய்யும் குகனின் திருவிளையாடல்களை வர்ணிக்க முற்படும் பாட்டு இது.

—--------------------------------------------------------------------------------------------------------------


சுலோகம் 2 


சகித-ஹரிணீ-த்³ருʼஷ்டே பிஷ்டே ந யுக்த-முதா³ஸனம்ʼ

ஸரப⁴ஸ-முபேத்யைதம்ʼ ஶீதம்ʼ த்³ருʼட⁴ம்ʼ பரிரம்ப⁴ணாத் |

அதனு-விஶிக²-ஜ்வாலா-தோ³லாயிதம்ʼ குரு ஸாம்ப்ரதம்ʼ

ஹ்ருʼத³ய-த³யித-ப்ரேம ஸ்தே²மான-மேத்வவிலம்பி³தம்  || 


சுலோகம் 2 பதம்பிரித்து 


சகித-ஹரிணீ-த்³ருʼஷ்டே பிஷ்டே ந யுக்தம் உதா³ஸனம்

ஸரப⁴ஸம் -உபேத்ய ஏதம்ʼ ஶீதம்ʼ த்³ருʼட⁴ம்ʼ பரிரம்ப⁴ணாத்

அதனு-விஶிக²-ஜ்வாலா-தோ³லாயிதம்ʼ குரு ஸாம்ப்ரதம்ʼ

ஹ்ருʼத³ய-த³யித-ப்ரேம ஸ்தே²மானம்ʼ ஏது அவிலம்பி³தம்


விளக்கமும் குறிப்புகளும் :


மருண்ட மான்விழியாளே ! துவண்டவரிடம் உதாசீனமாக இருப்பது தகாது. வேகமாக அவரிடம் சென்று, காமதேவனின் அம்புகளின் ஜுவாலைகளால் அலைக்கப்படும் அவரை உன் இறுக்கமான அரவணைப்பால் இப்போது குளிர்விப்பாய்!  மனதிற்கு இனியவரின் அன்பானது, நேரம் கடத்தாமல், ஒருநிலைடைந்து அமைதியுறட்டும்.

  • இது ஹரிணீ - வரிக்கு 17 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 


சுலோகம் 3


குஞ்ஜாத்³யாதி ப³ஹி꞉ க்ஷணம்ʼ ம்ருʼக³யதி த்வத்பாத³-முத்³ராம்ʼ வனே

பத்ரே பத்ரிணி வா பதத்யபி சலத்யாஶங்க்ய தே(அ)ப்⁴யாக³திம் |

ப்ரத்யாயாதி நிவிஶ்ய குஞ்ஜ-குஹரம்ʼ ஶய்யாம்ʼ ஸ ஆலோகதே

த்வய்யாஸக்த-மனா꞉ ஸகீ²தி லபதி ப்ராணப்ரியே ஸ்வாக³தம் ||


சுலோகம் 3 பதம்பிரித்து 


குஞ்ஜாத்³ யாதி ப³ஹி꞉ க்ஷணம்ʼ ம்ருʼக³யதி த்வத்பாத³-முத்³ராம்ʼ வனே

பத்ரே பத்ரிணி வா பததி அபி சலதி ஆஶங்க்ய தே அப்⁴யாக³திம் .

ப்ரத்யாயாதி நிவிஶ்ய குஞ்ஜ-குஹரம்ʼ ஶய்யாம்ʼ ஸ ஆலோகதே

த்வயி ஆஸக்த-மனா꞉ ஸகி² இதி லபதி ப்ராணப்ரியே ஸ்வாக³தம் .


விளக்கமும் குறிப்புகளும் :


தோழி !  இலையோ பறவையோ அசைந்தால் உன் வரவென்று சந்தேகித்து, கொடிவீட்டிலிருந்து வெளியே ஒருகணம் வருகிறார். காட்டில் உன் பாதச்சுவட்டை தேடுகிறார். மீண்டும் கொடிவீட்டுக்குள் சென்று விரிப்பைப் பார்க்கிறார், உன்னிடம் பற்றுக்கொண்ட மனத்தராக, “உயிரினும் இனியவளே! வருக” என்று பிதற்றுகிறார்.

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 


சுலோகம் 4


வல்ல்யா பி⁴ல்ல-குலாதி⁴நாயக-தப꞉-ப்ராக்³பா⁴ர-ஸீமா-பு⁴வோ

லீலோல்லோல-தரால-குந்தல-ப⁴ர-க்³ராஹே(அ)திவாஹே தனோ꞉ |

வீக்ஷாயா-முபகூ³ஹனே தத³த⁴ராஸ்வாதே³ தயா பா⁴ஷணே

ஸோத்கண்ட²꞉ ஶிதிகண்ட²ஜோ வித³த⁴தாம்ʼ க்ஷேமாந்நிகாமம்ʼ ஸ மே ||


சுலோகம் 4 பதம்பிரித்து 


வல்ல்யா பி⁴ல்ல-குலாதி⁴நாயக-தப꞉-ப்ராக்³பா⁴ர-ஸீமா-பு⁴வ: 

லீலா உல்லோல-தரால-குந்தல-ப⁴ர-க்³ராஹே அதிவாஹே தனோ꞉ .

வீக்ஷாயாம்ʼ உபகூ³ஹனே தத்³அத⁴ர ஆஸ்வாதே³ தயா பா⁴ஷணே

ஸோத்கண்ட²꞉ ஶிதிகண்ட²ஜோ வித³த⁴தாம்ʼ க்ஷேமான் நிகாமம்ʼ ஸ மே .


விளக்கமும் குறிப்புகளும் :


வேடர்குல மன்னனின் பண்டைத்தவப்பயனின் எல்லைநிலமாக விளங்கும் வள்ளியின் குழற்கற்றைகள் அழகாக அசையும் கூந்தலை பற்றிக்கொள்வதிலும், அவள் மேனியை வாரியெடுப்பதிலும், காண்பதிலும், தழுவுவதிலும், அவள் இதழைச் சுவைப்பதிலும் அவளுடன் பேசுவதிலும் ஆர்வம்நிறைந்த அந்த நீலகண்டனின் புதல்வன், எனக்கு வேண்டிய அளவு க்ஷேமங்களைத் தரட்டும்.

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 



இதி ஶ்ரீ-விஶ்வநாத²-க்ருʼதௌ கீ³த-கா³ங்கே³ய-காவ்யே அபி⁴ஸாரிகா-வர்ணனே ஸோத்கண்ட²-ஶிதிகண்ட²ஜோ நாம பஞ்சம꞉ஸர்க³꞉ .

(இதுவே விசுவநாத கவியின் படைப்பாகிய கீத காங்கேய காவியத்தில், “ஆவல்கொண்ட அரன்மகன்” என்ற ஐந்தாம்  சர்கம்)




Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்