அஷ்டபதீ³ - 12 - மூலமும் பொருளும்




 சுலோகம் 1:

அத² குச-ஜக⁴ன-மஹிம்னா தே³ஹ-தனிம்னா ஸகீ² ஸஹாயா தாம் .

ஸ்க²லித-பதா³ம்ʼ பதி² வல்லீம்ʼ நிவேஶ்ய மல்லீ-க்³ருʼஹே கு³ஹம்ʼ ப்ராஹ .. 

 

(பதப்பிரிவு தேவையில்லை)


விளக்கமும் குறிப்புகளும் :


பிறகு (வள்ளியை அழைத்துக்கொண்டுச் சென்று), தனபாரத்தின் காரணமாகவும், உடல் மெலிவாலும், (மேலும் நடக்க முடியாமல்) கால்கள் தடுமாறும் வள்ளியை, அவளுக்கு துணையான தோழி , வழியிலேயே ஒரு மல்லிகைக்கொடிவீட்டில் அமர்த்திவிட்டு, தான் சென்று முருகனிடம் (இவ்வாறு) சொன்னாள்.

  • இது “ஆர்யா” என்ற சந்தத்தில் உள்ளது. ஒவ்வொரு வரியிலும் (12+18) 30 மாத்திரைகள்  கொண்டது.

—----------------------------------------------------------------------------------------------------------------------------


அஷ்டபதீ³ - 12 (ஶங்கராப⁴ரண ராக³ம், சாபு தாளம்)


இச்ச²தி தவ பரிரம்ப⁴ண-மேஷா .

விரஹ-மஹாக³த³-க்ருʼத-தனு-ஶோஷா .. 1..


(பதப்பிரிவு : பரிரம்ப⁴ணம் + ஏஷா)


விளக்கம்: 


இவள் உங்கள் ஆலிங்கனத்தை விரும்புகிறாள். விரகம் என்ற பெரிய நோயால் உடல் வற்றியுள்ளாள்.


பல்லவீ

லோகபதே ஸர்வ-லோகபதே .

ஶ்ராம்யதி வல்லீ குஞ்ஜ-க்³ருʼஹே ..


விளக்கம்: 


அனைத்து உலகங்களுக்கும் தலைவனே! அங்கு மல்லிகைக்கொடிவீட்டில் வள்ளி களைத்து வாடுகிறாள்.


ஜபதி ஸததமபி ப⁴வத³பி⁴தா⁴னம் .

விகிரதி நயனஜ-ஜலமதிமானம் .. 2..


(பதப்பிரிவு : ப⁴வத்³ + அபி⁴தா⁴னம்,  ஜலம் + அதிமானம்)


விளக்கம்: 


எப்போதும் தங்கள் பெயரையே ஜபித்துக்கொண்டிருக்கிறாள். அதிகமாக கண்ணீர் சிந்துகிறாள்.



மனஸிஜ-கல்பித-மத்ரப⁴வந்தம் .

பஶ்யதி ஸகல-தி³ஶாஸு வஸந்தம் .. 3..


(பதப்பிரிவு : கல்பிதம் + அத்ரப⁴வந்தம்)


விளக்கம்: 


ஆசையால் கற்பனைசெய்யப்பட்ட தங்களை எல்லா திக்குகளிலும் இருப்பவராக காண்கிறாள்.


கத²-மபி⁴ஸரதி ந தத³னு வயஸ்யே .

ஶரவண-ப⁴வ இதி வத³தி ரஹஸ்யே .. 4..


(பதப்பிரிவு : கத²ம் + அபி⁴ஸரதி)


விளக்கம்: 


“தோழி ! சரவணபவன் பிறகு ஏன் இன்னும் புறப்பட்டு வரவில்லை ? “ என்று தனிமையில் (தோழியிடம்) கேட்கிறாள்.


க²க³-க³தி-ஶங்கித-ப⁴வத³பி⁴-க³மனா .

பரிஹித-ஶிதி²லித-க்ருʼஶ-கடி-வஸனா .. 5..


(பதப்பிரிவு : ப⁴வத்³ அபி⁴-க³மனா)


விளக்கம்: 


 பறவை பறந்தாலும் தங்கள் வரவென்று ஐயுற்று எதிர்பார்க்கிறாள். இடை மெலிந்து, கட்டிய ஆடை தளரும்படி திகழ்கிறாள்.


பேஶல-கிஸலய-க்ருʼத-கர-வலயா .

ஶ்வஸிதி ப⁴வதி விரசித-ஹ்ருʼத³ய-லயா .. 6..


விளக்கம் :


மென்மையான தளிர்களை கையில் வளையாக  அணிகிறாள். தங்களிடம் இதயம் லயித்தவளாக உயிர்க்கிறாள்.


ப⁴வத³பி⁴ஸரணாமித-ரஸ-லக்³னா .

பதி³ பதி³ நிபததி வலத³வலக்³னா .. 7..


(பதப்பிரிவு : ப⁴வத்³ + அபி⁴ஸரண + அமித , வலத்³ அவலக்³னா)


விளக்கம் :


தங்களை நாடி வருவதில் எல்லையற்ற ஆர்வம் கொண்டவள், (ஆனால் )அடிக்கு அடி, இடைவளைந்து விழுகிறாள்.


முஹ்யதி கரதல-ஶயித-கபோலா .

ஸ்னிஹ்யதி ஹ்ருʼஷ்யதி வனசர-பா³லா .. 8..


விளக்கம் :


கைத்தலத்தில் சாய்த்த கன்னம் உடையவளாக மயங்குகிறாள். அன்புநிறைந்து களிக்கிறாள் அவ்வேடர்சிறுமி.


விஶ்வநாத²-கவி-கி³ர-மனுவாரம் .

பட²த நமத ஶஶி-மகுட-குமாரம் .. 9..


(பதப்பிரிவு : கி³ரம் + அனுவாரம்)


விளக்கம் :


விசுவநாத கவியின் சொற்களை மீண்டும் மீண்டும் படியுங்கள். பிறைசூடியின் குமாரனான முருகனை மீண்டும் மீண்டும் வணங்குங்கள்.


—----------------------------------------------------------------------------------------------------------------------------


சுலோகம் 2:


அலமதி⁴க-விலம்பே³நாபி⁴ஸர்தும்ʼ யதேதா²꞉

ஸப²லய தவ சேதோ-வல்லபா⁴யா அபீ⁴ஷ்டம் |

விரஹ-விகல-பாதா³ ஸா(அ)பி⁴ஸாரேப்யஶக்தா

வஸதி விரசயந்தீ பா³ஷ்ப-ஸார்த்³ரம்ʼ நிகுஞ்ஜம் ||


சுலோகம் 2: பதம்பிரித்து 


அலம்ʼ அதி⁴க-விலம்பே³ன அபி⁴ஸர்தும்ʼ யதேதா²꞉

ஸப²லய தவ சேதோ-வல்லபா⁴யா அபீ⁴ஷ்டம் .

விரஹ-விகல-பாதா³ ஸா அபி⁴ஸாரே அபி அஶக்தா

வஸதி விரசயந்தீ பா³ஷ்ப-ஸார்த்³ரம்ʼ நிகுஞ்ஜம் .


விளக்கமும் குறிப்புகளும் :


நேரம்  கடத்தியது போதும். புறப்பட்டு வர யத்தனை செய்யுங்கள். உங்கள் மனத்திற்கினியவளின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். விரகத்தால் செயலற்ற கால்களை உடைய அவள் (தானே) தேடிவர சக்தியற்றவள். தன் கண்ணீரால் கொடிவீட்டையே ஈரமாக்கி அங்கு வசிக்கிறாள்.

  • இது மாலினீ  - வரிக்கு 15 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 


சுலோகம் 3:


ஆக³ச்சே²ன்-மம சித்தப³ந்து⁴ரசிரா-தா³னந்த³யேன்-நிர்ப⁴ரம்ʼ

க்ருʼத்வா(ஆ)ஶ்லேஷ-மதா²த⁴ரம்ʼ நனு பிபே³த்³ரோமாஞ்சயேத்³-விக்³ரஹம் |

இத்யாகல்பித-கல்பனா-ஶத-பதே² நி꞉ஶங்க-க³ச்ச²ன்-மதிம்ʼ

தாம்ʼ பா³லாம்ʼ பரிபாலயே꞉ கருணயா தீ³னானுகம்பின் ப்ரபோ⁴ ||


சுலோகம் 3: பதம்பிரித்து 


ஆக³ச்சே²த் மம சித்தப³ந்து⁴꞉ அசிராத்³ ஆனந்த³யேத் நிர்ப⁴ரம்

க்ருʼத்வா ஆஶ்லேஷம்ʼ அதா²த⁴ரம்ʼ நனு பிபே³த்³ ரோமாஞ்சயேத்³-விக்³ரஹம் .

இதி ஆகல்பித-கல்பனா-ஶத-பதே² நி꞉ஶங்க-க³ச்ச²ன்-மதிம்ʼ

தாம்ʼ பா³லாம்ʼ பரிபாலயே꞉ கருணயா தீ³னானுகம்பின் ப்ரபோ⁴ .


விளக்கமும் குறிப்புகளும் :


எளியவர்க்கு இரங்கும் பிரபுவே ! “என்  மனதிற்கினிய தோழர் விரைவில் வருவார். மிகுதியான ஆனந்தத்தைத் தருவார். அணைத்துக்கொண்டு இதழைப் பருகுவார். மெய்சிலிர்க்க வைப்பார்.” இவ்வாறு செய்த  நூறு கற்பனைகளின் வீதியில் சந்தேகமற்றுச் செல்லும் மனத்தினளான அந்த சிறுபெண்ணை காக்கவேண்டும்!

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 


சுலோகம் 4:


ஈப்ஸந்தீ ப⁴வதா³க³மம்ʼ மம ஸகீ² ஸஜ்ஜீ-கரோத்யஞ்ஜஸா

ஶய்யாம்ʼ ஸூனமயீம்ʼ வ்யபோஹதி ரஜோ வஸ்த்ராஞ்சலேன க்ஷணாத் |

ஆகல்பம்ʼ குருதே நவம்ʼ நவமபீத்யுக்திம்ʼ நிஶம்யாத³ராத்

த⁴ன்யோ மோத³-யுதோ(அ)ஸ்து மே ஸபதி³ ஸுப்³ரஹ்மண்ய ஆனந்த³த³꞉ ||


சுலோகம் 4: பதம்பிரித்து 


ஈப்ஸந்தீ ப⁴வத்³ ஆக³மம்ʼ மம ஸகீ² ஸஜ்ஜீ-கரோதி அஞ்ஜஸா

ஶய்யாம்ʼ ஸூனமயீம்ʼ வ்யபோஹதி ரஜோ வஸ்த்ராஞ்சலேன க்ஷணாத் .

ஆகல்பம்ʼ குருதே நவம்ʼ நவம்ʼ அபி இதி உக்திம்ʼ நிஶம்ய ஆத³ராத்

த⁴ன்யோ மோத³-யுதோ அஸ்து மே ஸபதி³ ஸுப்³ரஹ்மண்ய ஆனந்த³த³꞉ 


விளக்கமும் குறிப்புகளும் :


“என் தோழி உங்கள் வரவை வேண்டுகிறாள். பூக்களாலான விரிப்பை செய்து, ஆடைத்தலைப்பால் ஒவ்வொரு கணமும் தூசினைத்  துடைக்கிறாள். புதிய புதிய அலங்காரங்களைச் செய்துகொள்கிறாள்” என்ற வார்த்தையைக்கேட்டு (வள்ளியிடம் கொண்ட) அன்பினால்  ஆனந்தமடைந்த  பாக்யசாலியான ஸுப்ரமணியன், எனக்கு இப்போது மகிழ்வைத் தரட்டும்.

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 



இதி ஶ்ரீ-விஶ்வநாத²-க்ருʼதௌ கீ³த-கா³ங்கே³ய-காவ்யே வாஸக-ஸஜ்ஜிகா-வர்ணனே த⁴ன்ய-ஸுப்³ரஹ்மண்யோ நாம ஷஷ்ட²꞉ ஸர்க³꞉ .


(இதுவே விசுவநாத கவியின் படைப்பாகிய கீத காங்கேய காவியத்தில், “பாக்யசாலி ஸுப்ரமண்யன்” என்ற ஆறாம்  சர்கம்)




Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்