அஷ்டபதீ³ - 13 - மூலமும் பொருளும்

சந்திரோதயம்

சுலோகம் 1:

சந்த்³ரஸ்தமோ(அ)ச்ச²தனு-ராஶு கரைர்னிபீதம்ʼ

குக்ஷௌ கலங்க-கபடேன வஹம்ʼஸ்ததா³னீம் |

கே²தா³னலம்ʼ விரஹிணாமபி மார-ஸாஹ்யாத்

ஸம்ʼவர்த⁴யன் ஜலதி⁴னா ஸமமாவிராஸீத் ||


சுலோகம் 1 - பதம்பிரித்து:


சந்த்³ர꞉ தமோ அச்ச²தனு꞉ ஆஶு கரை: நிபீதம்ʼ

குக்ஷௌ கலங்க-கபடேன வஹன் ததா³னீம் .

கே²த³ அனலம்ʼ விரஹிணாம்ʼ அபி மார-ஸாஹ்யாத்

ஸம்ʼவர்த⁴யன் ஜலதி⁴னா ஸமம்ʼ ஆவிராஸீத் .


விளக்கமும் குறிப்புகளும் :


அப்போது, வெண்மை வடிவான சந்திரன், விரைவாக, தன் (கிரணங்கள் என்ற) கைகளால் இருளைப்பருகி, தன் வயிற்றில் களங்கம் என்ற பெயரில் சுமந்துகொண்டு, காமதேவனின் தோழன் என்பதால், கடலோடு சேர்த்து, பிரிவடைந்தவர்களின் துயரத்தீயையும் பொங்கச் செய்துகொண்டு, தோன்றினான்.

  • இது வஸந்ததிலகம்  - வரிக்கு 14 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 


 சுலோகம் 2:


உத³யதி குவலய-ப³ந்தௌ⁴ மானஸ-ப³ந்தௌ⁴ ச நாக³தே வல்லீ |

முஞ்சந்த்யவிரத-மஸ்ரம்ʼ வ்யலபத³ஜஸ்ரம்ʼ விமுக்த-கண்ட²ம்ʼ ஸா ||


சுலோகம் 2 - பதம்பிரித்து:


உத³யதி குவலய-ப³ந்தௌ⁴ மானஸ-ப³ந்தௌ⁴ ச ந ஆக³தே வல்லீ .

முஞ்சந்தீ அவிரதம்ʼ அஸ்ரம்ʼ வ்யலபத்³ அஜஸ்ரம்ʼ விமுக்த-கண்ட²ம்ʼ ஸா


விளக்கமும் குறிப்புகளும் :


குவளைமலர்களின் தோழனான சந்திரன் உதித்தவுடன், தன் மனதிற்கினிய தோழர் வராததால், வள்ளி ஓயாது கண்ணீர் உகுத்து, வாய்விட்டு  இடையறாமல் அரற்றினாள்.

  • இது “ஆர்யா” என்ற சந்தத்தில் உள்ளது. ஒவ்வொரு வரியிலும் (12+18) 30 மாத்திரைகள்  கொண்டது.


—-----------------------------------------------------------------------------------------------------------------------

அஷ்டபதீ³ 13 (ஆஹிரீ ராக³ம் , ஜ²ம்ப தாளம்)


ஜ²டிதி கு³ஹ ஆக³மன-ஶபத²-ஶத-பா⁴ஷணம் .

விதத²யதி விப²லயதி மாமக-விபூ⁴ஷணம் .. 1..


விளக்கம்:


விரைவில் வருவேன் என்று நூறு சபதம் செய்து குகன் பேசியது பொய்யாகிவிட்டது. என் அலங்காரம் வீணாகி விட்டது.


பல்லவீ


கிம்ʼ ப்³ருவே விஷம-விரஹம்ʼ ஸஹே கத²மதி-விலோபி⁴தா ..

விஷமகு³ண-விஷமஶர-யோத⁴பதி-கே²டகே .

ப⁴வதி ஶஶ-ப்⁴ருʼதி க இஹ ஶரண-மவஸாத³கே .. 2..


(பதப்பிரிவு : கத²ம் + அதி ஶரணம் + அவஸாத³கே)


விளக்கம்:


என்ன சொல்வேன் ?  மிகவும் ஏமாற்றமடைந்த நான், எப்படி கொடிய விரகத்தை சகிப்பேன்? துஷ்டகுணமுள்ள மன்மதனின் சேனாதிபதியின் கேடயம் போல விளங்கும் சந்திரன் துயரச்செய்ய, யார் எனக்கு கதி ?


குலஜ-ம்ருʼக³த்³ருʼ-க³னுசித-மபி⁴ஸரண-மாஶ்ரயம் .

அனுப⁴வதி ததி³ஹ மம ஹ்ருʼத³-தனு-ஶராமயம் .. 3..


(பதப்பிரிவு : ம்ருʼக³த்³ருʼக்³ + அனுசிதம் + அபி⁴ஸரணம் + ஆஶ்ரயம், தத் + இஹ, ஹ்ருʼத்³ + அதனு)


விளக்கம்:


நல்ல குலத்தில் தோன்றிய மான்விழியாளான பெண்ணுக்கு உசிதமல்லாத “காதல் கொண்டவனைத் தேடி வருதல்” என்பதையே  வழியாக ஏற்றேன்.  அதன்பயனாக, என் இதயமோ, இங்கு காமதேவனின் அம்புகளால் வருத்தம் அனுபவிக்கிறது.

(அதனு - உடலற்றவனான காமதேவன்)


லலித-ஸும-ஶயனமபி மம கர-தலாஸ்த்ருʼதம் .

விரசயதி மனஸிஜ-விஷாத³-மதி-விஸ்த்ருʼதம் .. 4..


(பதப்பிரிவு : ஶயனம் + அபி,  கரதல + ஆஸ்த்ருʼதம், விஷாத³ம் + அதி)


விளக்கம்:


என் கைத்தலத்தால்  விரிக்கப்பட்ட அழகான மலர் சயனம், மிக விஸ்தாரமான காதல்துயரத்தைச்  செய்கிறது.


ரஹஸி மம குஞ்ஜ-க்³ருʼஹ-வஸதி-ரிஹ மாமிகா .

ப்ரியதம-பராங்முக²தயா த³லித-கௌதுகா .. 5..

(பதப்பிரிவு : வஸதி: + இஹ)


விளக்கம்:


இங்கு கொடிவீட்டில் தனிமையில் எனது வாசமானது, மிகப்பிரியமானவரின் அலட்சியத்தால், ஆர்வம் சிதைந்து திகழ்கிறது.


ஆயத-நிநாத³-கர-கோக-யுவதீ த்வியம் .

அனுனயதி மாமிவ ஸகீ² ஸகருணோத³யம் .. 6..


(பதப்பிரிவு : து + இயம், மாம் + இவ)


விளக்கம்:


நீண்ட குரல் எழுப்பும் இந்த சக்ரவாகப் பேடு, கருணை உதித்தவளான தோழிபோல என்னை சமாதானப்படுத்துகிறது போலும்.

விரஹத்தில்  இருக்கும் நாயகியை சித்தரிக்கும் காங்க்ரா சித்திரம்

அஹஹ ப³ஹு ஸீதா³மி கமலினீவாது⁴னா .

மதி³தரோத்பலினீவ துஷ்யதி ஸ்வாமினா .. 7..


(பதப்பிரிவு : கமலினீ + இவ + அது⁴னா, மத்³ + இதரா + உ த்பலினீ + இவ)


விளக்கம்:


ஐயகோ! தாமரைக்கொடி போல (நான்) இப்போது (இரவில்) மிகவும் வாடுகிறேன். வேறொருத்தி, அல்லிக்கொடி போல, சுவாமியுடன் மகிழ்கிறாள்.


அத³யமிஹ யதி³ ஸ இதி ப⁴ஜதி ரஸ-ப⁴ஞ்ஜனம் .

ப்ரத²மமதி தேன கிமு கலித-மனுரஞ்ஜனம் .. 8..


(பதப்பிரிவு : அத³யம் + இஹ,  ப்ரத²மம் + அதி, கலிதம் + அனுரஞ்ஜனம்)


விளக்கம்:


தயையற்றவராக அவர் இவ்வாறு  ஆர்வம் இழந்த நிலை அடைவாராகில், முதலில் ஏன் அவரால் மிகவும் அன்புபாராட்டப்பட்டது ?


கவி-விஶ்வநாத²-கலிதேய-மதி-கோமலா .

மோத³யது ரஸிகமிஹ க்ருʼதிரமித-மங்க³ளா .. 9.. 


(பதப்பிரிவு : கலிதா + இயம்  + அதி,  ரஸிகம் + இஹ,  க்ருʼதி: + அமித)


விளக்கம்:


விசுவநாத கவி இயற்றிய மிகக்கோமளமான இக்கிருதி, எல்லையற்ற மங்களம் நிறைந்ததாக ரசிகரை மகிழ்விக்கட்டும்!

----------------------------------------------------------------------------------------------------------------

 சுலோகம் 3:


தத் கிம்ʼ ஸ்வீய-ஜனாவ்ருʼத꞉ கிமு ஸகீ² நாவைக்ஷத ஸ்வாமினம்ʼ

கிம்ʼ பாதா³ம்பு³ஜ-ஸக்த-ப⁴க்த-ஜனதாபீ⁴ஷ்ட-ப்ரதா³னே ரத꞉ |

கிம்ʼ வா பா⁴க்³யஜுஷா ரஹ꞉ ஸுவபுஷா ஜுஷ்டோ(அ)ன்யயா யோஷயா

மாமன்விஷ்ய சரத்யயம்ʼ கிமு வனே குஞ்ஜம்ʼ ஸ யந்நாக³த꞉ || 


சுலோகம் 3 - பதம்பிரித்து:


தத் கிம்ʼ ஸ்வீய-ஜன ஆவ்ருʼத꞉ ? கிமு ஸகீ² ந அவைக்ஷத ஸ்வாமினம் ?

கிம்ʼ பாதா³ம்பு³ஜ-ஸக்த-ப⁴க்த-ஜனதா அபீ⁴ஷ்ட-ப்ரதா³னே ரத꞉ ? .

கிம்ʼ வா பா⁴க்³யஜுஷா ரஹ꞉ ஸுவபுஷா ஜுஷ்டோ அன்யயா யோஷயா ?

மாம்ʼ அன்விஷ்ய சரதி அயம்ʼ கிமு வனே ? குஞ்ஜம்ʼ ஸ யத் ந ஆக³த꞉ 


விளக்கமும் குறிப்புகளும் :


அவர் இன்னும் கொடிவீட்டுக்கு வரவில்லையே! ஏனென்றால், தன் உறவினர்களால் சூழப்பட்டு இருக்கிறாரா? தோழி சுவாமியைப் பார்க்கவில்லையா ? திருவடித்தாமரையில் பற்றுவைத்த பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றித் தருவதில் ஈடுபட்டுள்ளாரா? பாக்கியசாலியான அழகிய மேனிபடைத்த வேறொரு பெண்ணுடன் தனிமையில் உள்ளாரா? காட்டில் என்னைத் தேடித் திரிகிறாரா?

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 



Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்