அஷ்டபதீ³ - 14 - மூலமும் பொருளும்

வள்ளிமலையில் பொங்கியம்மை (வள்ளி)

சுலோகம் 1:


க³தாம்ʼ கு³ஹாப்⁴யர்ண-முபாக³தாம்ʼ தாம்ʼ 

   ஸகீ²-மத² ப்ராண-த⁴வாத்³ருʼதே ஸா |

த்³ருʼஷ்ட்வா விஷண்ணாம்ʼ பரிஶங்க்ய தே³வம்ʼ

   ஸக்தம்ʼ கயாசித்³-விரஹிண்யதா²(ஆ)ஹ || 


சுலோகம் 1 - பதம்பிரித்து:


க³தாம்ʼ கு³ஹ அப்⁴யர்ணம்ʼ உபாக³தாம்ʼ தாம்ʼ

ஸகீ²ம்ʼ அத² ப்ராண-த⁴வாத்³ ருʼதே ஸா .

த்³ருʼஷ்ட்வா விஷண்ணாம்ʼ பரிஶங்க்ய தே³வம்ʼ

ஸக்தம்ʼ கயாசித்³ விரஹிணீ அத² ஆஹ .


விளக்கமும் குறிப்புகளும் :


பிறகு, குகனருகில் சென்று, தன் பிராணநாதனின்றி (தனியே) வருத்தமுற்று திரும்பிவந்த சகியைப் பார்த்து, வேறொருத்தியிடம் பற்றுக்கொண்டவனாக தேவனை சந்தேகித்து, பிரிவுத்துயரில் இருந்த வள்ளி (பின்வருமாறு) கூறினாள். 

  • இது உபஜாதி - வரிக்கு 11 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 

—-------------------------------------------------------------------------------------------------------------------------

அஷ்டபதீ³ 14 (ஸாரங்க³ ராக³ம், சாபு தாளம்)


ம்ருʼக³-மத³-பி³ந்து³-பரிஷ்க்ருʼத-பா²லா .

கச-த்⁴ருʼத-விகஸித-விசகில-மாலா .. 1..


விளக்கம்


கஸ்துரிப்பொட்டு அலங்கரிக்கும் நெற்றியுள்ளவள், மலர்ந்த மல்லிகைசரத்தை கூந்தலில் தரித்தவள்.


பல்லவீ


கா(அ)பி கி³ரிஶ-பு⁴வா. விஹரதி நலின-த்³ருʼக³பி⁴னவா ..


(பதப்பிரிவு : நலின-த்³ருʼக்³ + அபி⁴னவா)


விளக்கம்


தாமரைக்கண்ணியான யாரோ ஒரு புதியவள், சிவகுமாரனுடன் களிக்கிறாள்.


பதி-விலிகி²த-மகரிக-குச-கலஶா .

சபல-கலேப³ர-சல-வஸன-த³ஶா .. 2..


விளக்கம்


குடம் போன்ற தனங்களில், கணவனால் (கஸ்துரி, கோரோசனை முதலியன கொண்டு) எழுதப்பட்ட மகரம் போன்ற சித்திரங்களை தாங்கியவள். அசையும் உடலில் அசையும் ஆடையோரங்கள் கொண்டவள்.


ஶ்ரமஜல-லேஶ-கரம்பி³த-வத³னா .

த⁴வ-ம்ருʼது³-பாணிஜ-ஶிதி²லித-ரஶனா .. 3..


விளக்கம்


வியர்வைத்துளிகள் விரவிய முகத்தை உடையவள். கணவனின் மென்மையான நகங்களால் தளர்த்தப்பட்ட மேகலையுடையவள்.


ஸத்ரப-முகுலித-நயன-குவலயா .

ஸரப⁴ஸ-சஞ்சல-கரமணி-வலயா .. 4..


விளக்கம்


வெட்கத்தால் அரும்புபோல் மூடிய குவளைக்கண்களை உடையவள். வேகமாக அசையும் ரத்தினம்பதித்த வளையலணிந்த கரத்தினள்.


கு³ஹ-பரிரம்ப⁴-ஸபுலக-ஶரீரா .

குஸும-ஶராஸன-விக்³ரஹ-தீ⁴ரா .. 5..


விளக்கம்


குகனின் அரவணைப்பில் சிலிர்த்த மேனியுடையவள். மலர்க்கணையோனின் போரில் (அஞ்சாத) தீரம் மிகுந்தவள். 


விக³லித-குந்தல-ஸுமப்⁴ருʼத-மஞ்சா .

ஸப²லித-ஸ்ருʼஷ்டி-விதா⁴யி-விரிஞ்சா .. 6..


விளக்கம்


கூந்தலிலிருந்து நழுவிய மலர்கள் நிறைந்த மஞ்சத்தை உடையவள். தன்னைப் படைத்த பயனை பிரமனுக்கு தந்தவள்.


ஶீத்க்ருʼதி-கர-ரத³னபட-யுக³-த⁴ரா .

த³ரஹஸ-ஸூசித-நிஜ-ஸுக²-விஸரா .. 7..


விளக்கம்


(மகிழ்ச்சியால்) மூச்சை உள்ளிழுக்கும் இரு இதழ்களைத் தாங்கியவள். சிறிய புன்னகை மூலமாக தன் இன்பப்பெருக்கை சூசனை செய்பவள்.


மணித-ரணித-பரிபோஷித-மாரா .

கலகல-ரவ-ரஶன-ஜக⁴ன-பா⁴ரா .. 8..


விளக்கம்


காதலுக்குரிய இனிய ஓசைகளால் காமதேவனுக்கு புஷ்டியைத் தருபவள். கலகல என்று ஒலிக்கும் மேகலை விளக்கும் பாரமான இடுப்பை உடையவள்.


விஶ்வநாத²-கவி-ப⁴ணித-மவிரதம் .

கு³ஹ-ரஸிகம்ʼ கலயது ஸுக²-ப⁴ரிதம் .. 9..


(பதப்பிரிவு : ப⁴ணிதம் + அவிரதம்)


விளக்கம்


விசுவநாத கவி சொல்லிய இப்பாட்டு, எப்போதும் முருகபக்தர்களை ஆனந்தம் நிறைந்தவர்களாக வைக்கட்டும்.


-------------------------------------------------------------------------------------------------------------------

சுலோகம் 2:


குமுத³-ப³ந்து⁴ர-ப³ந்து⁴ரஹோ மம ஸ்வ-மஹஸா மஹ-ஸாத⁴ன-பண்டி³த꞉ |

குஸும-மார்க³ண-மார்க³ணவத் கரானலக⁴யன் லக⁴யன் மன ஏத⁴தே ||


சுலோகம் 2 - பதம்பிரித்து:


குமுத³-ப³ந்து⁴ர-ப³ந்து⁴: அஹோ மம ஸ்வ-மஹஸா மஹ-ஸாத⁴ன-பண்டி³த꞉ .

குஸும-மார்க³ண-மார்க³ணவத் கரான் அலக⁴யன் லக⁴யன் மன ஏத⁴தே .


விளக்கமும் குறிப்புகளும் :


அல்லியின் அழகிய நண்பனான சந்திரன், தன்னொளியால் பெரிய செயல்களை சாதிப்பதில் பண்டிதன். மலர்க்கணையோனின் கணைபோன்ற கிரணங்களை விடாமல் பெருக்கி, என் மனத்தை வலுவற்றதாக செய்து வளர்கிறான்.

  • இது த்³ருத-விலம்பி³தம்  - வரிக்கு 12 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 

Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்