அஷ்டபதீ³ - 15 - மூலமும் பொருளும்


சுலோகம் 1:

அத்ராந்தரே தை³வத-ராஜ-புத்ரீம்ʼ ஶ்யாமாமுதூ³டா⁴ம்ʼ ஶஶி-மௌலி-ஸூனு꞉ |

வல்லீ-மபா⁴ணீத் ப்ரதிபாலயந்தீம்ʼ ஸ்ம்ருʼத்வா ஜகா³மேதி ஸகீ² ஸஶோகம் ||


சுலோகம் 1 - பதம்பிரித்து:


அத்ராந்தரே தை³வத-ராஜ-புத்ரீம்ʼ ஶ்யாமாம்ʼ உதூ³டா⁴ம்ʼ ஶஶி-மௌலி-ஸூனு꞉ .

வல்லீம்ʼ அபா⁴ணீத் ப்ரதிபாலயந்தீம்ʼ ஸ்ம்ருʼத்வா ஜகா³ம இதி ஸகீ² ஸஶோகம்


விளக்கமும் குறிப்புகளும் :


இதற்கிடையில், காத்துக்கொண்டிருந்த வள்ளியிடம், தேவராஜனின் மகளான, தன் இளம்மனைவி தெய்வானையை நினைத்துக்கொண்டு, பிறைசூடியின் மகனான முருகன் சென்றுவிட்டான் என்று சோகத்துடன் தோழி கூறினாள்.

  • இது உபஜாதி - வரிக்கு 11 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 


சுலோகம் 2:


நிஶம்ய வசனம்ʼ வல்லீ வயஸ்யா-வத³ன-ச்யுதம் |

ஸபா³ஷ்பம்ʼ விலலாபோச்சை꞉ த்³ருʼஷ்ட்வைவ கு³ஹ-சேஷ்டிதம் ||


சுலோகம் 1 - பதம்பிரித்து:


நிஶம்ய வசனம்ʼ வல்லீ வயஸ்யா-வத³ன-ச்யுதம் .

ஸபா³ஷ்பம்ʼ விலலாப உச்சை꞉ த்³ருʼஷ்ட்வா இவ கு³ஹ-சேஷ்டிதம் .


விளக்கமும் குறிப்புகளும் :


தோழியின் வாயிலிரிருந்து உதிர்ந்த சொற்களைக்கேட்டு, வள்ளி, குகனின் செய்கையை நேரில் பார்த்தது போல, கண்ணீருடன் குரலெழுப்பி விலாபம் செய்தாள்.

  • இது அனுஷ்டுப்⁴ - வரிக்கு 8 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 


—-----------------------------------------------------------------------------------------------------------------

அஷ்டபதீ³ - 15 (ஸாவேரீ ராக³ம், சாபு தாளம்)


உபமித-முதி³ரே தருணீ-சிகுரே கர்ஷண-ஶிதி²லீ-க்ருʼதே .

ரசயதி மஸ்ருʼணம்ʼ ஸுரபி⁴ ஸகு⁴ஸ்ருʼணம்ʼ தடிது³பமித-மாயதே .. 1..


(பதப்பிரிவு : தடித்³ + உபமிதம் + ஆயதே)


விளக்கம்


மேகத்தை ஒத்ததான, தான் (ஆசையுடன்) ஈர்த்ததால் தளர்ச்சியுற்ற, அந்த யுவதியின் நீண்ட கூந்தலில், (அவர்) நறுமணமிக்க, குங்குமப்பூ கலந்த தைலத்தை, (அம்மேகத்தில் விளங்கும்) மின்னல்போல தடவிவிடுகிறார்.


பல்லவீ

குருதே விஹ்ருʼதிம்ʼ நிஜப⁴வனே . ஶரஜோ விஹார-விபினே ..


விளக்கம்


தன் மாளிகையில் உள்ள உல்லாசத்தோட்டத்தில், சரவணபவன் விஹாரம் செய்கிறார்.


ஸ த³ஶன-வஸனே ப³ஹுரஸ-ஸத³னே ஸுக⁴டித-மத³னாஹவே .

ஸ்பு²ட-ஸும-ம்ருʼது³லம்ʼ ரத³-பத³-படலம்ʼ விகிரதி மது⁴ராஸ்ரவே .. 2..


விளக்கம்


காமதேவனின் போர் நன்குதுவங்கியதும், பலவித ரசங்களுக்கு இருப்பிடமான, இனிமைபெருகும் (அவளது) இதழ்களில், மலர்ந்த மலர்போல மென்மையான பற்சுவடுகளை தூவுகிறார்.


லுலித-கசப⁴ரே ஸுமஶர-முகுரே ஸுலலித-மதி கோமலே .

விதரதி திலகம்ʼ ஸஹஸித-மதி⁴கம்ʼ புலகித-க³ண்ட³ஸ்த²லே .. 3..


(பதப்பிரிவு : ஸுலலிதம் + அதி கோமலே, ஸஹஸிதம் + அதி⁴கம்)


விளக்கம்


குழற்கற்றைகள் அசையும், மலர்க்கணையோனின் கண்ணாடி எனும்படியான, மயிர்க்கூச்செறிந்த (அவள்) மிக மென்மையான கன்னத்தில் மிகவும் புன்னகைத்து (விளையாட்டாக) திலகம் இடுகிறார்.


க⁴ன-ஜக⁴ன-தடே க³லித-சல-படே கலகல-ரவ-மேக²லே .

க⁴டயதி வஸனம்ʼ ஸுருசிர-ரசனம்ʼ லலித-புலின-மஞ்ஜுலே .. 4..


விளக்கம்


(நதியின்) நேர்த்தியான மணற்பரப்பு போன்ற அழகான, ஆடை அசைந்து சரிந்த, கலகல என்று ஓசையுடன் மேகலை விளங்கும் கனமான இடுப்புப்பிரதேசத்தில், அழகிய வேலைப்பாடு செய்த சேலையை அணிவிக்கிறார்.


குச-கலஶ-யுகே³ கி³ரிவர-ஸுப⁴கே³ ஜ²ரமிவ மத³னாவஹே .

விமல-மணிஸரம்ʼ ஸரப⁴ஸ-மது⁴ரம்ʼ கலயதி கமலா-க்³ருʼஹே .. 5..


(பதப்பிரிவு : ஜ²ரம் + இவ)


விளக்கம்


ஆசையைப் பெருக்கும், சிறந்த குன்று போல அழகான, மஹாலக்ஷ்மியின் இருப்பிடமான, கலசம் போன்ற இருதனங்களில், (அம்மலையில் விழும்) அருவி போன்ற மாசற்ற முத்துமாலையை ஆர்வமாக, இனிமையாக சேர்க்கிறார்.


ஜித-பி³ஸ-குஸுமே ஹிம-கிரண-ஸமே ஸகு³ணமிவ முகே² நதே .

ஶ்ரமஜல-நிசயம்ʼ ஸ்வநயன-விஷயம்ʼ ப்ரவித³த⁴த³திமோத³தே .. 6..


(பதப்பிரிவு : ப்ரவித³த⁴த் + அதிமோத³தே)


விளக்கம்


தாமரை மலரை வென்ற, குளிர்நிலவுக்கு சமமான, (அவளது) குனிந்த முகத்தில், தன் கண்ணுக்கு புலனான வியர்வைத்துளிகளைப் பார்த்து, குணமுள்ளதாக  மிக மகிழ்கிறார்.


கமலவத³ருணே லலனா-சரணே க³தி-க்ருʼத-வரடா-ஜயே .

ஸ்தி²ரயதி விதுலம்ʼ நூபுர-யுக³லம்ʼ வித³லித-மத³நாமயே .. 7..


(பதப்பிரிவு : கமலவத்³ + அருணே)


விளக்கம்


தாமரைபோல் சிவந்த, நடையில் அன்னப்பேடை வென்ற, காமநோயை (உடைத்து) அழிக்கும் அவ்விளம்பெண்ணின் காலில், ஒப்பற்ற இருசிலம்புகளை இருத்துகிறார்.



ஸகி² மம விஜனே ஸ்தி²தமிஹ க³ஹனே மத³-க³ஜமுக²-ஸோத³ரே .

ஸுரபதி-கன்யாம்ʼ ரமயதி த⁴ன்யாம்ʼ விப²லமித³-மநாத³ரே .. 8..


(பதப்பிரிவு : ஸ்தி²தம் + இஹ, விப²லம் + இத³ம் + அநாத³ரே)


விளக்கம்


மதயானைமுகரின் தம்பியான முருகன், என்னிடம் ஆதரவு காட்டாமல், பாக்கியசாலியான இந்திரன்மகளை மகிழ்வித்திருக்க, இங்கு யாருமற்ற காட்டில் இந்த எனது வாசம் வீணானது.


ஶரப⁴வ-ஶரணே கதி²த-கு³ணக³ணே ஶ்ரீகவி-விஶ்வநாதே² .

கத²யதி ஸரலம்ʼ ஸஹ்ருʼத³ய-ஹ்ருʼத³யம்ʼ ஸரது ஸுரப³ல-நாதே² .. 9..


விளக்கம்


போற்றப்பட்ட குணங்களின் கூட்டத்தை உடைய சரவணபவனை அடைக்கலமாக கொண்ட விசுவநாத கவி (இந்தப்பாட்டை) சொல்ல, ரசிகரின் இதயம்,  தேவர்களின் படைத்தலைவனாகிய முருகனிடம்  எளிதாக செல்லட்டும்.


—-----------------------------------------------------------------------------------------------------------------




Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்