அஷ்டபதீ³ - 20 - மூலமும் பொருளும்

சுவாமிமலையில் வள்ளிகல்யாண விழாவில் வள்ளி

 சுலோகம் 1:

அத² ஶரவண-ஜாதே ஸாந்த்வயித்வா(ஆ)த்மப³ந்து⁴ம்ʼ

க³தவதி ரதி-ஸஜ்ஜே ரம்ய-குஞ்ஜம்ʼ ரஹஸ்யம் |

ரசித-விவித⁴-பூ⁴ஷாம்ʼ வல்லிகாம்ʼ காசிதா³லீ

ஸதி ரஜனி-முகே² தாம்ʼ ஸாத³ரம்ʼ ப்ராஹ வாணீம்  ||


சுலோகம் 1 - பதம்பிரித்து:


அத² ஶரவண-ஜாதே ஸாந்த்வயித்வா ஆத்மப³ந்து⁴ம்ʼ

க³தவதி ரதி-ஸஜ்ஜே ரம்ய-குஞ்ஜம் ரஹஸ்யம் .

ரசித-விவித⁴-பூ⁴ஷாம்ʼ வல்லிகாம்ʼ காசித்³ ஆலீ

ஸதி ரஜனி-முகே² தாம்ʼ ஸாத³ரம்ʼ ப்ராஹ வாணீம்


விளக்கமும் குறிப்புகளும் :


பிறகு, சரவணத்தில் தோன்றியவன், தன் உயிர்தோழியை சமாதானப்படுத்திவிட்டு, போகத்துக்குரிய அலங்காரங்களைச் செய்துகொண்டு, தனிமையான அழகிய கொடிவீட்டுக்குச் சென்றவுடன், பலவித அலங்காரங்கள் செய்யப்பட்ட வள்ளியிடம் ஒரு தோழி, இரவு தொடங்கும் சமயத்தில், ஆதரவுடன் இந்த மொழிகளைக் கூறினாள்.

  • இது மாலினீ  - வரிக்கு 15 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்


—-------------------------------------------------------------------------------------------------------------------

அஷ்டபதீ³ - 20 (கல்யாணீ ராக³ம், சாபு தாளம்)


அதிம்ருʼது³-பல்லவ-ஶயன-யுதம்ʼ ஶ்ரித-வஞ்ஜுல-மூல-விபா⁴க³ம் .

கோமல-குஞ்ஜக்³ருʼஹம்ʼ ப⁴வதீம்ʼ ப்ரதிபால்ய க³த-மதுல-ராக³ம் .. 1..


(பதப்பிரிவு : க³தம் + அதுல)


விளக்கம்

மிக மிருதுவான  தளிர்களின் மஞ்சத்தில், அசோகமரத்தின் அடியில், மென்மையான கொடிவீட்டில் , உன்னை  எதிர்பார்த்துகே காத்திருப்பவர், (உன்மேல்) இணையற்ற காதல் கொண்டவர்.


பல்லவீ


ரம்யே ஶிவதனுஜம்ʼ வல்லி . உபக³த-முபசர வல்லி ..


(பதப்பிரிவு : உபக³தம் + உபசர)


விளக்கம்:


அழகியே ! வள்ளி ! அங்கு சென்றிருக்கும் சிவகுமாரனிடம் சென்று அவருக்கு உபசாரங்கள் செய் !


சலித-த³லை-ரப்யபி⁴ஸ்ருʼதி-குஞ்ஜ உபாஹ்வயதீவ ஸராக³ம் .

அலி-நினதை³-ரபி⁴ஸர கு³ருஜக⁴னே மாமவலம்ப்³ய ஸவேக³ம் .. 2..


(பதப்பிரிவு : த³லை: +அபி + அபி⁴ஸ்ருʼதி, உபாஹ்வயதி + இவ, நினதை³: + அபி⁴ஸர, மாம் + அவலம்ப்³ய)


விளக்கம்:


அசையும் இலைகளிலும், வண்டுகளின் ரீங்காரத்தாலும், (நீ) அடைய வேண்டிய கொடிவீடானது, ஆர்வத்தோடு உன்னை வரவேற்கிறது ! பாரமான இடுப்பினை உடையவளே! என்னை பிடித்துக்கொண்டு வேகமாக செல்.


ப⁴வத³பி⁴ஸரண-விபோ³தி⁴கயா ஸகி² பிக-க³ண-நாத³-விதீ³ர்ணம் .

ஹம்ʼஸக-கலகல-ரவ-ஸுத⁴யா பரிபூரய நாயக-கர்ணம் .. 3..


(பதப்பிரிவு : ப⁴வத்³ + அபி⁴ஸரண)


விளக்கம்:


தோழி ! குயில் கூட்டங்களின் இசையோடு கலந்த, நீ நெருங்குவதை அறிவிக்கும் சிலம்புகளின் கலகல ஓசையமுதத்தால், உன் நாயகனின் காதுகளை நிரப்பு.


ஶரவண-ஜனுஷே ஸகி² விநிவேத³ய மலய-ஸமீர-கிஶோரம் .

ப⁴வதி நிகடகே ஸுக²யதி மாமிதி ஸானுப⁴வம்ʼ ஸுக²-பூரம் .. 4..


(பதப்பிரிவு : மாம் + இதி)


விளக்கம்:


தோழி ! “தாங்கள் அருகிருக்க, பொதிகையின் இளங்காற்று, இன்பவெள்ளமாக எனக்கு சுகமளிக்கிறது” என்று சரவணபவனிடம் அனுபவபூர்வமாக  தெரிவி. 


தவ கலநாத³-ஸஹோத³ர-கலக³ல-மது⁴ர-நிநாத³ உதா³ரே

ஜனயது மோத³முபாக³த-மன்மத²-காஹல-ரவவ-த³தூ³ரே .. 5..


 (பதப்பிரிவு : மோத³ம் + உபாக³த, ரவவத்³ + அதூ³ரே)


விளக்கம்:


பெருந்தன்மை கொண்ட அழகியே! உனது குரலுக்கு சமமான குயில்களின் இசை, வருகைதந்த காமதேவனின் முரசொலி போல, (அவருக்கு) களிப்பை உண்டாக்கட்டும்.


ரதி-கலஹே ஜய பதி-மபராதி⁴ன-மதி⁴க-ஸுகே²ன பு⁴ஜாப்⁴யாம் .

ப³ந்த⁴ன-மலகு⁴ விதா⁴ய நிபீட்³ய ச கல்ப-லதா-ஸத்³ருʼஶாப்⁴யாம் .. 6..


(பதப்பிரிவு : பதிம் + அபராதி⁴னம் + அதி⁴க, ப³ந்த⁴னம் + அலகு⁴)


விளக்கம்:


கற்பகக்கொடி போன்ற இரு கைககளால் அவரை கெட்டியாகக் கட்டி, இறுக்கி, (உன்னைக் காக்கவைத்து) தவறிழைத்தவரான உன் கணவனை, இன்பப்போரில் மிகச்சுலபமாக வெற்றிகொள். 


குச-கும்ப⁴-யுக³ம்ʼ ரய-க³தி-விக்⁴ன-மிஹாசரதி ப்ரஸப⁴ம்ʼ தே .

தத³னுப⁴வது த்³ருʼட⁴-நிஶித-நகா²ங்குஶ-முக²-த³லனம்ʼ தவ காந்தே .. 7..


(பதப்பிரிவு : விக்⁴னம் + இஹ + ஆசரதி, தத்³ + அனுப⁴வது)


விளக்கம்:


வேகமாக செல்வதற்கு மிகவும் தடையாக உன் குடம்போன்ற இருதனங்கள்  உள்ளன. அதற்கு பலனாக, திடமும் கூர்மையும் கொண்ட நகங்கள் என்ற அங்குசத்தின் முனையால் கீறப்படுவதை (தண்டனைப்போல ) அவை அனுபவிக்கட்டும். 


அத⁴ர-ரஸம்ʼ பரிபாயய நாத²ம்ʼ திரய ஸுதா⁴-ரஸ-சிந்தாம் .

அனுனய-சாடு-ஶதேன வயஸ்யே விஸ்ருʼஜ ஸுதூ³ர-மஹந்தாம் .. 8..


(பதப்பிரிவு : ஸுதூ³ரம் + அஹந்தாம்)


விளக்கம்:


தோழி ! அமுதத்தையும்  அவர் நினைக்காத வண்ணம், உன் நாதனை இதழ்ச்சுவை  பருகச்செய். பலநூறு இன்பவார்த்தைகளால் அவர் மனதை வெல். அகந்தையை வெகுதூரம் விட்டுவிடு.


விஶ்வநாத²-கவி-ப⁴ணிதமித³ம்ʼ ஶிவப⁴வ-பத³-ப⁴க்தி-நிதா³னம் .

விலஸது விபு³த⁴-முகா²ம்பு³ருஹே சிர-மதி-மது⁴ர-ரஸ-நிதா⁴னம் .. 9..


(பதப்பிரிவு : ப⁴ணிதம் + இத³ம், சிரம் + அதி)


விளக்கம்:


விசுவநாத கவியின் சொல்லாகிய இந்தப்பாட்டு, சிவனிடம் தோன்றிய முருகனின் திருவடியில் பக்திக்குக் காரணமாகும். மிக இனிமையான சுவைக்கு இருப்பிடமான இது, வெகுகாலம், அறிவுள்ளவர்களின் முகத்தாமரையில் விளங்கட்டும்.

—--------------------------------------------------------------------------------------------------------------------------

சுலோகம் 2:


ஆக³ச்சே²த் ப்ரியநாயிகா(அ)த்³ய குஶலம்ʼ ப்ருʼச்சே²த் ப்ரயச்சே²ச்ச ஸா

கா³டா⁴லிங்க³ன-மங்க³முத்புலகதாம்ʼ க³ச்சே²தி³த³ம்ʼ மாமகம் .|

இத்த²ம்ʼ த்⁴யாயதி பஶ்யதி ப்ரலபதி ப்⁴ராம்யத்யஸௌ கா³யதி

ப்ரத்யேதி ப்ரியமேத்ய மஞ்ஜுல-வசுலோகம் 2 - பதம்பிரித்து:ச꞉-புஞ்ஜை꞉ ஸுக²ம்ʼ ப்ராபயே꞉ || 



ஆக³ச்சே²த் ப்ரியநாயிகா அத்³ய குஶலம்ʼ ப்ருʼச்சே²த் ப்ரயச்சே²த் ச ஸா

கா³ட ஆ⁴லிங்க³னம்ʼ அங்க³ம்ʼ உத்புலகதாம்ʼ க³ச்சே²த்³ இத³ம்ʼ மாமகம் .

இத்த²ம்ʼ த்⁴யாயதி பஶ்யதி ப்ரலபதி ப்⁴ராம்யதி அஸௌ கா³யதி

ப்ரத்யேதி, ப்ரியம்ʼ ஏத்ய மஞ்ஜுல-வச꞉-புஞ்ஜை꞉ ஸுக²ம்ʼ ப்ராபயே꞉


விளக்கமும் குறிப்புகளும் :


“இன்று என் பிரியநாயகி வருவாள், நலம் விசாரிப்பாள், இறுக்கமான ஆலிங்கனத்தைத் தருவாள். இந்த என்மேனி சிலிர்க்கும்”. இவ்வாறு அவர்  தியானிக்கிறார், பார்க்கிறார், பேசுகிறார், திரிகிறார், பாடுகிறார், திரும்பிவருகிறார். அந்த அன்புக்குரியவரை அணுகி, இனிமையான பேச்சுக்களால் சுகமடைய வை. 

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்


சுலோகம் 3:


கஸ்தூரீ-திலகாயதே(அ)தி⁴னிடிலம்ʼ கர்ணே(அ)ஸிதாப்³ஜாயதே

நேத்ராம்போ⁴ஜ-யுகே³(அ)ஞ்ஜனாயத இயம்ʼ கா³டா⁴ தம꞉ஸந்ததி꞉ |

கண்டே² நீல-ஸராயதே கடி-தடே ஶ்யாமாய-சேலாயதே

ஸாஹாய்யாத் ஸ்மர-ஶாஸிதா(அ)ம்பு³ஜ-த்³ருʼஶா-மானந்த³-கந்தா³யதே ||


சுலோகம் 3 - பதம்பிரித்து:


கஸ்தூரீ-திலகாயதே அதி⁴னிடிலம்ʼ கர்ணே அஸித அப்³ஜாயதே

நேத்ர அம்போ⁴ஜ-யுகே³ அஞ்ஜனாயத இயம்ʼ கா³டா⁴ தம꞉ஸந்ததி꞉ .

கண்டே² நீல-ஸராயதே கடி-தடே ஶ்யாமாய-சேலாயதே

ஸாஹாய்யாத் ஸ்மர-ஶாஸிதா அம்பு³ஜ-த்³ருʼஶாம்ʼ ஆனந்த³-கந்தா³யதே 


விளக்கமும் குறிப்புகளும் :


அடர்ந்த இருளின் தொடர்ச்சியானது, தாமரைக்கண்ணியரான இளம்பெண்களுக்கு, நெற்றிமீது கஸ்துரிதிலகமாகவும், காதில் செருகப்பட்ட நீல அல்லியாகவும், தாமரைக்கண்களில் இட்ட மையாகவும், கழுத்தில் நீலமணி சரமாகவும், இடையில் கரும்பச்சை சேலையாகவும் விளங்குகிறது. காமதேவனால் ஆணையிடப்பட்டு, (அவர்களுக்கு) உதவிகரமாக இருப்பதால் அவ்விருள், ஆனந்தத்துக்குக் காரணமாகிறது.

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்


அபிசாரிகை - காங்கிரா சித்திரம்

சுலோகம் 4:

கா³டா⁴ந்த⁴காரமபி சேதன-ஜால-த்³ருʼஷ்டே꞉

ஸஞ்சார-லோப-கரணே த்³ருʼட⁴-ப³த்³த⁴-கச்ச²ம் |

ஸித்³தா⁴ஞ்ஜனம்ʼ விதனுதே ஹ்யபி⁴ஸாரிகாணாம்ʼ

ஆஶ்சர்யமேஷ மத³நாபி⁴த⁴-வைத்³யராஜ꞉ ||


சுலோகம் 4 - பதம்பிரித்து:


கா³ட⁴ அந்த⁴காரம்ʼ அபி சேதன-ஜால-த்³ருʼஷ்டே꞉

ஸஞ்சார-லோப-கரணே த்³ருʼட⁴-ப³த்³த⁴-கச்ச²ம் .

ஸித்³தா⁴ஞ்ஜனம்ʼ விதனுதே ஹி அபி⁴ஸாரிகாணாம்ʼ

ஆஶ்சர்யம்ʼ ஏஷ மத³நாபி⁴த⁴-வைத்³யராஜ꞉ 


விளக்கமும் குறிப்புகளும் :


அடர்ந்த இருளானது, உயிரினங்களின் பார்வை செல்வதை  இல்லாமல் செய்ய (கண்களை மறைக்க)  உறுதி கொண்டு கச்சைக்கட்டியிருக்க, (இருட்டிலும் மறைந்த பொருட்களை காணவை க்கும்) சித்தாஞ்சனம் என்ற மந்திர மையை , அபிசாரிகைகளுக்கு வழங்குகிறான் மன்மதன் என்ற பேர்கொண்ட பெரிய வைத்தியர் தலைவன். என்ன ஒரு ஆச்சரியம் இது.

  • இது வஸந்ததிலகம் - வரிக்கு 14 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்

  • இரவில் அன்புக்குரியவரைத்தேடிச் செல்லும் நாயகியருக்கு அபிசாரிகைகளென்று பெயர். காமதேவன் தரும் ஆற்றலால் அவர்களுக்கு இருளும் ஒரு தடையல்ல. என்பது இங்கு பொருள். 



Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்