அஷ்டபதீ³ - 21 - மூலமும் பொருளும்

வள்ளிகல்யாண சுந்தரர் - சிறுவாபுரி

 சுலோகம் 1:

வக்த்ரேந்து³-மந்த³ஸ்மித-சந்த்³ரிகாபி⁴꞉

த்⁴வஸ்தாந்த⁴காரே ஸ்தி²தமத்ர குஞ்ஜே .|

த்³வாரி ஸ்தி²தா வீக்ஷ்ய கு³ஹம்ʼ ஸலஜ்ஜாம்ʼ

வல்லீம்ʼ ஸகீ² ப்ராஹ ஸஹர்ஷமேவம் ||


சுலோகம் 1 - பதம்பிரித்து:


வக்த்ரேந்து³-மந்த³ஸ்மித-சந்த்³ரிகாபி⁴꞉

த்⁴வஸ்த அந்த⁴காரே ஸ்தி²தம் அத்ர குஞ்ஜே .

த்³வாரி ஸ்தி²தாʼ வீக்ஷ்ய கு³ஹம்ʼ ஸலஜ்ஜாம்ʼ

வல்லீம்ʼ ஸகீ² ப்ராஹ ஸஹர்ஷம் ஏவம் .


விளக்கமும் குறிப்புகளும் :


முகச்சந்திரனின் புன்முறுவல்கள் என்ற நிலாக்கதிர்களால் இருள் நீங்கிய  கொடிவீட்டில் அமர்ந்திருந்த குகனைப் பார்த்து, வாயிலில் இருந்தபடி,  வெட்கத்துடன் (தயங்கி) நின்ற வள்ளியையிடம் , மகிழ்ச்சியுடன் தோழி இவ்வாறு சொன்னாள்.

  • இது உபஜாதி  - வரிக்கு 11 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்


—----------------------------------------------------------------------------------------------------------------------

அஷ்டபதீ³ 21 (க⁴ண்டா ராக³ம், ஜ²ம்ப தாளம்)


கேலி-கலனோசித-நிகுஞ்ஜ ப⁴வனே .

இஹ விஹர த³ர-ஹஸித-வஶித-கமனே .. 1..


விளக்கம்:


புன்னகையால் கணவனை வசப்படுத்தியவளே !  விளையாடலுக்கு ஏற்றதான கொடிவீட்டில் இங்கு களிப்பாயாக!  


பல்லவீ

ஸுக²ய பா³லே ஸோமத⁴ர-ஸூனும் .


விளக்கம்:


இளம்பெண்ணே ! சந்திரனை தரித்தவரின் மகனான முருகனை சுகம்பெறச்செய் !


மது⁴கர-நிகர-ரசித-மது⁴ர-கா³னே .

இஹ விஹர க³தி-விஜித-ஹம்ʼஸ-யானே .. 2..


விளக்கம்:


நடையில் அன்னப்பறவையின் போக்கை வென்றவளே ! வண்டுக்கூட்டங்கள் இனிய கானம் இசைக்கும் இங்கு களிப்பாயாக!  


ஸரஸ-ம்ருʼது³-குஸும-சய-ருசிர-ஶயனே .

இஹ விஹர ரஸ-ஸத³ன-ஸுரபி⁴-வத³னே .. 3..


விளக்கம்:

அமிர்தத்தின் சுவைக்கு இருப்பிடமான, நறுமணமிக்க முகத்தை உடையவளே ! தேன் நிறைந்த, மென்மையான மலர்க்குவியலால் அழகான சயனம் அமைக்கப்பட்ட இங்கு களிப்பாயாக!  


ஸுந்த³ர-மரந்த³-ரஸ-லஹரி-ஶீதே .

இஹ விஹர விபினசர-ந்ருʼபதி-ஜாதே .. 4..


விளக்கம்:


காட்டில் வசிக்கும் வேடர்களின் அரசன்மகளே ! அழகான, (மலர்களின்) தேன் பெருக்கினால் குளிர்ந்த இங்கு களிப்பாயாக!  


மது⁴-பவன-க⁴டித-ஸும-ஸுரபி⁴-பூரே .

இஹ விஹர மது⁴-விஜயி-வசன-ஸாரே .. 5..


விளக்கம்:


தேனை வெல்லும் சொற்களின் சாரத்தை பேசுபவளே ! வசந்தகாலக் காற்றினால் கொண்டுசேர்க்கப்பட்ட மலர்களின் வாசனை பரவிய இங்கு களிப்பாயாக!  


தருண-ஶுக-பிக-நிகர-கலித-ராவே .

இஹ விஹர கபட-கு³ண-ரஹித-பா⁴வே .. 6..


விளக்கம்:


வஞ்சனைக்குணம் சிறிதுமற்ற அன்பு நிறைந்தவளே ! இளங்கிளிகளும் குயில் கூட்டங்களும் செய்யும்  ஓசை நிரம்பிய இங்கு களிப்பாயாக!  


ஸரல-கிஸலய-நிசித-த்³ருʼட⁴-விதானே .

இஹ விஹர முக²-மிலித-மது⁴ரபானே .. 7..


விளக்கம்:


இனிய (கனிச்)சாறுகளுக்கு நிகரான வாய்ச்சுவை கொண்டவளே ! செழித்த தளிர்கள் குவிந்து திடமான மேற்பந்தலை உருவாக்கிய இங்கு களிப்பாயாக!  


மத³ன-ஶர-ஜனித-த³ர-த³லன-தீ⁴ரே

இஹ விஹர ஜலத³-நிப⁴-சிகுர-பா⁴ரே .. 8..


விளக்கம்:


மேகம் போன்ற கூந்தல்பாரத்தை உடையவளே! காமதேவனின் அம்புகளால் உண்டாகும் பயத்தை உடைத்தெறியும் வல்லமை கொண்ட இங்கு களிப்பாயாக!  


ஶ்ரீவிஶ்வநாத²-கவி-கதி²த-கா³னம் .

குருத வத³னாம்பு³ஜே குஶல-தா³னம் .. 9..


விளக்கம்:


விசுவநாத கவி சொன்ன, நலத்தைத்தரும்  இந்தப்பாட்டை வாயெனும் தாமரையில் வைத்திருங்கள் !

-------------------------------------------------------------------------------------------------------------------
குறமகள் தழுவிய குமரன் - ஞானமலை

சுலோகம் 2:


பா³லே த்வத்ப்ரதிபாலகே த்³ருʼட⁴-பரீரம்போ⁴த்ஸுகே ஷண்முகே²

க்ரூரை꞉ கௌஸும-கார்முகை꞉ ஶர-க³ணை꞉ ஸந்தாபித-ஸ்வாந்தரே |

ப்ரேம-த்³யோதக-மந்த³ஹாஸ-லஹரீ பூ⁴யாத் தவாஹ்லாதி³னீ

கேயம்ʼ பீ⁴திரிஹ த்வதே³க-ஶரணே நிஶ்ஶங்க-மங்கம்ʼ ப⁴ஜ ||


சுலோகம் 2 - பதம்பிரித்து:


பா³லே த்வத்ப்ரதிபாலகே த்³ருʼட⁴-பரீரம்ப⁴ உத்ஸுகே ஷண்முகே²

க்ரூரை꞉ கௌஸும-கார்முகை꞉ ஶர-க³ணை꞉ ஸந்தாபித-ஸ்வாந்தரே .

ப்ரேம-த்³யோதக-மந்த³ஹாஸ-லஹரீ பூ⁴யாத் தவ ஆஹ்லாதி³னீ

கா இயம்ʼ பீ⁴தி: இஹ த்வத்³ ஏக-ஶரணே நிஶ்ஶங்கம்ʼ அங்கம்ʼ ப⁴ஜ 


விளக்கமும் குறிப்புகளும் :


இளம்பெண்ணே! உனக்காக காத்திருக்கும், இறுக்கத்தழுவ ஆவலோடிருக்கும் அறுமுகன், மலர்வில்லையுடைய மன்மதனின் கொடிய அம்புக்கூட்டங்களால் தவிக்கும் உள்ளம்கொண்டவராக இருக்க, அன்பை வெளிப்படுத்தும் உனது புன்னகை அலைகள் அவருக்கு  சுகத்தை அளிக்கட்டும். உன்னொருத்தியையே புகலாக நினைக்கும் அவரிடம் ஏனிந்த பயம்? சந்தேகமற்று அவர் மடியை அலங்கரிப்பாயாக !

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்

Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்