அஷ்டபதீ³ - 22 - மூலமும் பொருளும்

 சுலோகம் 1:

தத꞉ ஸஸாத்⁴வஸம்ʼ வல்லீ ஸஹர்ஷம்ʼ ச லதா-க்³ருʼஹம் |

ப்ராவிஶத் ஷண்முக²-ஸ்தா²னம்ʼ ரணன்-மது⁴ர-நூபுரம் ||


(பதப்பிரிவு தேவையில்லை)


விளக்கமும் குறிப்புகளும் :


 அதன்பின், வள்ளி அச்சத்துடனும், ஆனந்தத்துடனும், ஆறுமுகன் இருந்த  கொடிவீட்டுக்குள் இனிய சிலம்பொலிக்கப்  புகுந்தாள்.

  • இது அனுஷ்டுப்⁴ - வரிக்கு 8 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். 


—--------------------------------------------------------------------------------------------------------------------

அஷ்டபதீ³ 22 (மத்⁴யமாவதீ ராக³ம், ஆதி³ தாளம்)


வல்லீ-வத³ன-விலோகன-விகஸித-ஸரஸ-விலோசன-பா⁴ஜம் .

ஹ்ரத³மிவ ஹிமகர-த³ர்ஶன-பு²ல்ல-ஸமது⁴-ரஸ-நீல-ஸரோஜம் .. 1..


(பதப்பிரிவு : ஹ்ரத³ம் + இவ)


விளக்கமும் குறிப்புகளும் : 


வள்ளியின் முகத்தை பார்த்ததால் மலர்ந்த அழகான கண்களை உடையவனை,  சந்திரனை தர்சனம் செய்ததால் விரிந்த, தேன்நிறைந்த நீல அல்லிமலர்கள் கொண்ட தடாகம் போன்றவனை (அவள் சென்றடைந்தாள்).

  • வள்ளிமுகம் நிலவுக்கும், முருகன்முகம்  தடாகத்துக்கும் அவன் கண்கள் நீலமலர்களுக்கும் சமமாக உள்ளன.


பல்லவீ

கி³ரிஜா-தனுஜம்ʼ ஸமுதி³த-மத³ன-விகாஸம் .

ஆஸஸாத³ ஸம-ஹார்த³-மஸௌ கு³ரு-முத³-மதி⁴-குஞ்ஜ-நிவாஸம் ..


(பதப்பிரிவு : ஸம-ஹார்த³ம் + அஸௌ,  கு³ருமுத³ம் + அதி⁴-குஞ்ஜ)


விளக்கம்: 


மேலோங்கிய காதலின் மலர்ச்சியுள்ள, அளவிற்பெரிய களிப்புடனிருந்த, கொடிவீட்டில் இருந்த  மலைமகள் மகனை, அவள் பிரியத்துடன் சென்றடைந்தாள்.


வித்³ரும-ஸம்புட-விநிஹித-மௌக்திக-மணி-நிகரமிவ த³தா⁴னம் .

த³ர-ஹஸித-ஸ்பு²ரிதாத⁴ர-லஸிதம்ʼ ரத³க³ண-மதி⁴க-விபா⁴னம் .. 2..


(பதப்பிரிவு : நிகரம் + இவ, ரத³க³ணம் + அதி⁴க)


விளக்கம்: 


பவழப்பேழையில் வைத்த முத்துமணிக்களின் சரம் போல, சிறுபுன்னகை பொலியும் இதழ்களும், மிகவும் ஒளிவீசும் பல்வரிசையும் தாங்கியவனை (அவள் சென்றடைந்தாள்).


ஶிக²ர-விராஜித-ஜலத³-பரிஷ்க்ருʼத-கனக-த⁴ராத⁴ர-ஶோப⁴ம் .

மஸ்ருʼண-ஶிரோருஹ-பா⁴ர-விபா⁴ஸுர-ஶிரஸமிமம்ʼ மிஹிராப⁴ம் .. 3..


(பதப்பிரிவு : ஶிரஸம் + இமம்)


விளக்கம்: 


சிகரத்தில் கருமேகம் சூழ்ந்த பொன்மலை போல, மென்மையான கேசங்களுடன் ஒளிவீசும் சிரத்துடன் இருப்பவனை, சூரியன்போல திகழ்பவனை (அவள் சென்றடைந்தாள்).


மரகத- திலக-த்³யுதி-வலித-ப்⁴ரூ-மண்டி³த-மஞ்ஜுல-பா²லம் .

நவஜல-ப⁴ரித-தடாக-மிவ க்ரம-தட-ஸங்க³த-ஶுக-பா³லம் .. 4..


(பதப்பிரிவு : தடாகம் + இவ)


விளக்கமும் குறிப்புகளும் : 


மரகதத்தால் செய்த திலகத்தின் ஒளியும், (மற்றும்) வளைந்த புருவங்களும் அலங்கரிக்கும் அழகிய நெற்றியுடையவனை,  (வளைந்த) படித்துறையில்  இளங்கிளி அமர்ந்திருக்க, புதுநீர் நிரம்பிய தடாகம் போலிருப்பவனை (அவள் சென்றடைந்தாள்).

  • முருகனின் முகம் தடாகம்போலவும், நெற்றி வளைந்த படித்துறை போலவும், மரகத திலகம் (சுட்டி) அங்குள்ள இளங்கிளி போலவும்  உள்ளன.


ஹீர-மணீ-மய-குண்ட³ல-காந்த்யனு-ரஞ்ஜித-மஞ்ஜு-கபோலம் .

கோகனதோ³பரி-ஸங்க³த-த⁴வலச்ச²த³-கமலாகர-லீலம் .. 5..


(பதப்பிரிவு :  காந்தி + அனுரஞ்ஜித,   கோகனத³ + உபரி)


விளக்கமும் குறிப்புகளும் : 


வைரமணிகள் இழைத்த குண்டலங்களின் ஒளியால் நிறம்பெற்ற அழகிய கன்னங்கள் உடையவனை, (அதனால்) தாமரைமலர்கள் மீது மருவிய வெண்சிறகுடைய ஹம்ஸங்களை உடைய தாமரைக்குளம் போன்றவனை (அவள் சென்றடைந்தாள்).

  • சிவந்த கன்னங்களில் வைரத்தின் வெண்மை விரவி, தாமரைகளோடு கலந்திருக்கும் அன்னப்பட்சிகள் போலிருந்தது


தரல-தரல-ப³ஹு-விமல-மணி-நிசய-கலித-மனோஹர-ஹாரம் .

அனுக்ருʼத-வாத-சலத்³-ப³ஹு-பு³த்³பு³த³-ஶோண-நதா³ம்பு³-விஹாரம் .. 6..


விளக்கமும் குறிப்புகளும் : 


அசைந்துகொண்டேயிருந்த பல மாசற்ற மணிகளின் தொகையால் உருவாக்கிய மனம்கவரும் ஆரங்கள் அணிந்தவனை, (அதனால்) காற்றினைத் தொடர்ந்து அசையும் பல நீர்க்குமிழிகளைத் தாங்கிய சோணநதியின் நீரின் அழகான ஓட்டம் போலிருப்பவனை (அவள் சென்றடைந்தாள்).

  • சோன் என்ற சோணநதி, ஓடிவரும் மண்ணின் தன்மையால் சிவந்த நீருடன் இருக்கும், அதனால் முருகனது மார்புக்கு நிகராயிற்று. நீரின் மேற்பரப்பில் விளையாடும் நீர்க்குமிழிகள் மணிமாலைகள் போலுள்ளன.


பி³ப்⁴ரத-மதி⁴கடி கானக-தந்து-விநிர்மித-சித்ரித-சேலம் .

ஸந்த்⁴யா-கால-பயோத³-மிவ ஸ்பு²ரதி³ந்த்³ர-த⁴னூ-ருசி-ஜாலம் .. 7..


(பதப்பிரிவு : பி³ப்⁴ரதம் + அதி⁴கடி,  பயோத³ம் + இவ, ஸ்பு²ரத் + இந்த்³ரத⁴னூ)


விளக்கம்: 


இடையில், பொன்னிழைகளால் நெய்த வேலைப்பாடுடன் கூடிய ஆடை தரித்து, மின்னும் வானவில்லின் ஒளி பரவிய மாலைநேர மேகம் போன்றவனை (அவள் சென்றடைந்தாள்).


அங்க³த³-கங்கண-பூ⁴ஷித-பு⁴ஜயுக³-மத்³பு⁴த-கா³த்ர-நிவேஶம் .

ஸமத³ன-சல-கர-ஸூசித-த³யிதா-குச-வஹநாபி⁴நிவேஶம் .. 8..


(பதப்பிரிவு : பு⁴ஜயுக³ம் + அத்³பு⁴த)


விளக்கம்: 


தோள்வளையும், கங்கணமும் அணிசெய்யும் இரு தோள்களுடன், அற்புதமான மேனி கட்டமைப்புடையவனை, ஆசையுடன் இயங்கும் கைகளால் காதலியை அணைக்கக்கொண்ட உறுதியை அறிவிக்கிறவனை (அவள் சென்றடைந்தாள்).


வல்யாலோகஜ-நிஜமுத³மபி தத்³-வசன-ஸமய-மதி⁴தா⁴தும் .

ஶ்ருதி-நிகட-க³தாம்ʼ த்³ருʼஶ-மபி⁴த³த⁴தம்ʼ ருசி-ஜித-ஸும-ஶர-கேதும் .. 9..


(பதப்பிரிவு : வல்லீ + ஆலோகஜ, முத³ம் + அபி, ஸமயம் + அதி⁴தா⁴தும், த்³ருʼஶம் + அபி⁴த³த⁴தம் )


விளக்கமும் குறிப்புகளும் : 


வள்ளியைப் பார்த்தத்தினால் உண்டான ஆனந்தத்தை அவள் பேசும்பொழுதில் அதிகரித்துக்கொள்ள, காதுவரை நீண்ட, அழகில்  (மீன்கொடியோனான) காமதேவனின் கொடியை வென்ற கண்களை வைத்திருப்பவனை (அவள் சென்றடைந்தாள்).

  • பார்த்து ஆனந்தம்பெற்ற கண்கள் , பேச்சில் மகிழப்போகும் காதுகளைத் தொட்டுக்கொண்டு இருப்பது, அந்த ஆனந்தத்திலும் சிறிது பெறவிழைவது போலுள்ளது  என்பது கவியின் தற்குறிப்பு 


விஶ்வநாத²-கவி-விரசித-மித³மபி கீ³த-மஶேஷ-பு³தா⁴னாம் .

ப⁴வது முதா³வஹ-மனவரதம்ʼ ப்ரிய-ஶிவஸுத-சரித-ஸுதா⁴னாம் .. 10..


(பதப்பிரிவு : விரசிதம் + இத³ம் + அபி, கீ³தம் + அஶேஷ , முதா³வஹம் + அனவரதம்)


விளக்கம்: 


விசுவநாத கவி இயற்றிய இந்தப்பாட்டு, சிவகுமாரனின் கதையாகிய அமிர்தத்திடம் பிரியம் கொண்ட அதனை அறிவுள்ளவர்களுக்கும், எக்காலத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டுசேர்க்கட்டும்.

—--------------------------------------------------------------------------------------------------------

சுலோகம் 2:


ஸலீலம்ʼ க³ச்ச²ந்த்யா꞉ சகித-சகிதம்ʼ ப⁴ர்த்ருʼ-ஸவித⁴ம்ʼ

முகே²ந்து³ம்ʼ பஶ்யந்த்யா அமித-முதி³தோ பா³ஷ்ப-விஸர꞉ |

ஸ்மர-ம்லானம்ʼ நாத²ம்ʼ ஸ்னபயிது-மிவ ப்ராப்த-ஸமயம்ʼ

ரவி-க்³லானம்ʼ சந்த்³ரோபல-ஜலப⁴ரோ(அ)த்³ரேஸ்தடமிவ ||


சுலோகம் 2 - பதம்பிரித்து:


ஸலீலம்ʼ க³ச்ச²ந்த்யா꞉ சகித-சகிதம்ʼ ப⁴ர்த்ருʼ-ஸவித⁴ம்

முகே²ந்து³ம்ʼ பஶ்யந்த்யா அமித-முதி³தோ பா³ஷ்ப-விஸர꞉ .

ஸ்மர-ம்லானம்ʼ நாத²ம்ʼ ஸ்னபயிதும்ʼ இவ ப்ராப்த-ஸமயம்

ரவி-க்³லானம்ʼ சந்த்³ர உபல-ஜலப⁴ரோ அத்³ரே꞉ தடமிவ 


விளக்கமும் குறிப்புகளும் :


ஒய்யாரமாக கணவனருகில் சென்று, படபடப்புடன் அவரது முகமெனும் சந்திரனை பார்க்கும் வள்ளிக்கு, அளவற்ற ஆனந்தத்தால் உண்டான கண்ணீர்ப்பெருக்கு, காமதேவனால் வாட்டமுற்ற நாதனை நீராட்டுவதற்காக  உண்டானது போல தோன்றியது. சரியான நேரம் வந்ததும், சூரியனின் வெயிலில் காய்ந்த மலைச்சரிவை, (சந்திரனைப்பார்த்தவுடன்) சந்திரகாந்தக்கல்லின் நீர்ப்பெருக்கு போல குளிர்வித்தது.

  • இது ஶிக²ரிணீ - வரிக்கு 17 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்


சுலோகம் 3:


ப்ரசண்டா³மர்த்யாரி-ப்ரமத²ன-ஸமுச்சண்ட³-விப⁴வ꞉

ஸஸௌஹார்த³ம்ʼ புத்ர்யா த்ரித³ஶ-ந்ருʼபதேஶ்சும்பி³த இஹ |

யதீ³யோ தோ³ர்த³ண்டோ³ ஜய-கமலயா(அ)மண்ட்³யத ஸதா³

ஸ மே ஸுப்³ரஹ்மண்ய꞉ கலயது கலா-கௌஶலமயம் ||


சுலோகம் 3- பதம்பிரித்து:


ப்ரசண்ட³ அமர்த்யாரி-ப்ரமத²ன-ஸமுச்சண்ட³-விப⁴வ꞉

ஸஸௌஹார்த³ம்ʼ புத்ர்யா த்ரித³ஶ-ந்ருʼபதே꞉  சும்பி³த இஹ .

யதீ³யோ தோ³ர்த³ண்டோ³ ஜய-கமலயா அமண்ட்³யத ஸதா³

ஸ மே ஸுப்³ரஹ்மண்ய꞉ கலயது கலா-கௌஶலம் அயம் .


விளக்கமும் குறிப்புகளும் : 


வன்மையுள்ள அசுரர்களை அழிப்பதில் தீவிரமான வலிமைகொண்ட, எவருடைய உலக்கை போன்ற கை, இந்திரன்புதல்வியான  தேவசேனையால் அன்போடு முத்தமிடப்படுமோ,  எப்போதும் வெற்றித்திருமகளால் அழகுபெற்று விளங்குமோ , அந்த சுப்ரமணியன், எனக்கு எப்போதும் கலைகளில் திறமையை அளிக்கட்டும். 

  • இது ஶிக²ரிணீ - வரிக்கு 17 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்


சுலோகம் 4

:

குத்ர த்வம்ʼ வல்லி யாதா ஸஹசரி குமரீ-தீர்த²மேதத் கிமர்த²ம்ʼ

ஸ்னாதும்ʼ பாதும்ʼ ச யுக்தம்ʼ கத²-மய-மத⁴ர꞉ ஸக்ஷத꞉ மத்ஸ்ய -த³ம்ʼஶாத் |

மாயீ யாத꞉ ஸஹாய꞉ க்வ தவ ஸஜரட²꞉ குத்ர வேத்யூர்ணுவாணாம்ʼ

ஸானந்த³꞉ ஸ்கந்த³தே³வோ விதரது குஶலம்ʼ வீக்ஷ்ய ஸாகூத-மேதாம் ||


சுலோகம் 4 - பதம்பிரித்து:


குத்ர த்வம்ʼ வல்லி யாதா? ஸஹசரி குமரீ-தீர்த²ம் ! ஏதத் கிமர்த²ம் ?

ஸ்னாதும்ʼ பாதும்ʼ ச ! யுக்தம், கத²ம்ʼ அயம்ʼ அத⁴ர꞉ ஸக்ஷத꞉ ? மத்ஸ்ய -த³ம்ʼஶாத் !

மாயீ யாத꞉ ஸஹாய꞉ க்வ தவ ஸஜரட²꞉ ? குத்ர வா? இதி ஊர்ணுவாணாம்

ஸானந்த³꞉ ஸ்கந்த³தே³வோ விதரது குஶலம்ʼ வீக்ஷ்ய ஸாகூதம்ʼ ஏதாம்


விளக்கமும் குறிப்புகளும் : 


“வள்ளி , எங்கு போயிருந்தாய் ?”

“தோழி , குமரிதீர்த்தம் (போயிருந்தேன்).”

“அது எதற்காக?”

“குளிக்கவும், குடிக்கவும் “

“அது சரிதான்! ஏன் உன் உதடு புண்ணாகியுள்ளது?”

“மீன் கடித்ததால்”

“எங்கே உனக்கு துணையாக இருந்த அந்த மாயக்கார கிழவன் ?”

“எங்கே தான் (போனாரோ)?” 

இவ்வாறு (தோழியிடம்) மறைத்துப்பேசும் அவளை அர்த்தபுஷ்டியாக நோக்கி, ஆனந்தமடைந்த கந்த தேவன் , நன்மைகளை வாரி வழங்கட்டும்.

  • இது ஸ்ரக்³த⁴ரா - வரிக்கு 21 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்

  • ஒன்றுமே அறியாதவள் போல தோழி வினவ, தலைவி தான் தலைவனோடு இருந்ததை பலவாறு மறைப்பது அகப்பொருள் துறைகளில் ஒன்று.



இதி ஶ்ரீவிஶ்வநாத²-கவி-க்ருʼதௌ ஶ்ரீகீ³தகா³ங்கே³ய-காவ்யே வல்லிகா-மிலனே ஸானந்த³-ஸ்கந்த³தே³வோ நாம ஏகாத³ஶ꞉ ஸர்க³꞉ .


(இதுவே விசுவநாத கவியின் படைப்பாகிய கீத காங்கேய காவியத்தில், “பேருவகை கொண்ட கந்தன்” என்ற பதினொன்றாம்  சர்கம்)


Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்