அஷ்டபதீ³ - 19 - மூலமும் பொருளும்

 


சுலோகம் 1:


தாம்ʼ ஸுந்த³ரீம்ʼ தத³னு லக்ஷண-ஸூசிதாகா³꞉

உத்கம்பித-ஸ்தன-முத³ஶ்ரு ச தூ³யமானாம் |

நிஶ்வாஸ-வாத-சபலீ-க்ருʼத-கானனாந்தாம்ʼ

ஸ்வாமீ ஸக³த்³க³த³மித³ம்ʼ வசனம்ʼ ப³பா⁴ஷே ||


சுலோகம் 1 - பதம்பிரித்து:


தாம்ʼ ஸுந்த³ரீம்ʼ தத³னு லக்ஷண-ஸூசித கா³꞉

உத்கம்பித-ஸ்தனம்ʼ உத³ஶ்ரு ச தூ³யமானாம் .

நிஶ்வாஸ-வாத-பலீ-க்ருʼத-கானனாந்தாம்ʼ

ஸ்வாமீ ஸக³த்³க³த³ம்ʼ இத³ம்ʼ வசனம்ʼ ப³பா⁴ஷே 


விளக்கமும் குறிப்புகளும் :


அதன்பிறகு, மேல்மூச்சு வாங்க , கண்ணீர்பொங்க வருந்திக்கொண்டிருந்த, பெருமூச்சுக் காற்றினால் காட்டையே நடுங்க ச்செய்த அவ்வழகியிடம் ,  தவறிழைத்ததைக் குறிக்கும்  அடையாளங்களோடு இருந்த  சுவாமி குரல் தழுதழுக்க இந்த வசனங்களைச் சொன்னார்.

  • இது வஸந்ததிலகம் - வரிக்கு 14 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்


—---------------------------------------------------------------------------------------------------------------------------

அஷ்டபதீ³ - 19 (முகா²ரி ராக³ம், ஜ²ம்ப தாளம்)


தருணி மயி தா³ருண-மஹேதுக-ருஷாருணம்ʼ, நஹி விகிர தவ நயன-கோணம் .

அயமிஹ ஸமீஹதே ஶ்ரித-கருண-மீக்ஷணம்ʼ, தாவக-ஜனோ மத³ன-ஶோணம் .. 1..

(பதப்பிரிவு : தா³ருணம் + அஹேதுக, கருணம் ஈக்ஷணம்)


விளக்கம் :


இளம்பெண்ணே! காரணமற்ற கோபத்தால் சிவந்த உன் கடுமையான கடைக்கண் பார்வையை என்மீது வீசாதே. உன்னுடையவனான இவன், கருணை கூடிய, காதலால் சிவந்த பார்வையை வேண்டுகிறான்.


பல்லவீ


ஹிதே ஸாது⁴ரீதே . வல்லி மயி மா(அ)பி⁴னய கோபம் ..

வஹதி மது⁴-மாருதே மம மனஸி ஜாயதே . கா(அ)பி க³திருபஶமய தாபம் ..


(பதப்பிரிவு : க³தி: + உபஶமய)


விளக்கம் :


நன்மைசெய்யும் நற்குணங்களைப் பயில்பவளே ! வள்ளி ! என்னிடம் கோபத்தைக்காட்டாதே !

வசந்தகாலக் காற்றுவீச, என் மனதில் என்னவோ ஒரு போக்கு ஏற்படுகிறது. என்  தாபத்தைத்  தீர்ப்பாயாக. 


கிமிதி சலிதாத⁴ரம்ʼ லுலித-கப³ரீ-ப⁴ரம்ʼ, பரிக³லித-பா³ஷ்ப-ரஸ-தா⁴ரம் .

திஷ்ட²ஸி ஸமாகுலா கிமுசித-மித³ம்ʼ ப்³ருவே, த்யஜ ஶோக-மிம-மதி-க³பீ⁴ரம் .. 2..


(பதப்பிரிவு : கிம் + உசிதம்ʼ இத³ம், ஶோகம் + இமம் + அதிக³பீ⁴ரம்)


விளக்கம் :


ஏன்  இப்படி உதடு துடிக்க, கூந்தல் கலைந்து, கண்ணீர் அருவிபோல் வழிய கலங்கி நிற்கிறாய்? இது உசிதமா கேட்கிறேன். இந்த மிக ஆழமான சோகத்தை விட்டுவிடு.


மது⁴ர-வசனேன ஸுத⁴யா ஸம-துரேண தவ ஜீவய ஸுமேஷு-க்ருʼஶ-ரூபம் .

வஹஸி கருணாவதி ந கிஞ்சித³பி நாயகே மயி தபதி ஸாத்த்வ-மனுதாபம் .. 3..


(பதப்பிரிவு : கிஞ்சித் + அபி, ஸாத்த்வம் + அனுதாபம்)


விளக்கம் :


அமிர்தம் போன்ற சிறந்த இனிய மொழிகளால், மலர்க்கணைகளால் வாடிய  வடிவம்கொண்ட என்னை உயிர்பிப்பாயாக! கருணை நிறைந்தவளே ! தவிக்கும் உன் கணவனான என்னிடத்தில் கொஞ்சமாவது சத்துவ குணத்தார்க்குரிய அனுதாபத்தை (நீ) கொள்ளவில்லையா ?


மந்து-மபி⁴ஶங்கஸே யதி³ ரமணி மாமகம்ʼ, தத்²யமேவாகலய த³ண்ட³ம் .

பு⁴ஜ-யுக³ல-பரிணஹன-மாசர கலேப³ரே, ஶிக²ரி-ரத³-லேக²-மதி⁴துண்ட³ம் .. 4..


(பதப்பிரிவு : மந்தும் + அபி⁴ஶங்கஸே, தத்²யம்ʼ ஏவ ஆகலய, பரிணஹனம் +ஆசர, லேக²ம் + அதி⁴துண்ட³ம் )


விளக்கம் :


அன்புக்குரியவளே! என்னிடம் உண்மையாக தவறுள்ளது என்று சந்தேகிப்பாயாகில், தண்டனையைத் தா. என் உடலை உன் கைகளால் சிறையிட்டு , கூர்மையான பற்களால் என் இதழ்களில் எழுது.


குரு லலித-ரஶனயா மணி-க⁴டிதயா ஸஹே, ப்ரஹதி-மயி தீ⁴ர-மதி⁴தே³ஹம் .

ப⁴ய-பிஶாசக-பலாயன-க்ருʼதே மந்த்ரிணோ, வேத்ர-லதிகா-ஹதி-மிவாஹம் .. 5..

(பதப்பிரிவு : தீ⁴ரம் + அதி⁴தே³ஹம், ஹதிம் + இவ + அஹம்)


விளக்கம் :


ரத்தினங்கள் இழைத்த உன் அழகிய மேகலையால் என் தேகத்தில் அடிகளைத் தா, தைரியமாக சகித்துக்கொள்கிறேன். பயத்தையும் பிசாசுகளையும் ஓட்டுவதற்காக, மாந்த்ரிகனின் பிரம்படியை ஒருவர் பொறுத்துக்கொள்வது போல (நானும் பொறுத்துக்கொள்வேன்)


மத³ன-விஶிகா²ஹதி-வ்ரண-நிகர-நிபி³டி³தம்ʼ, க்ரோட³தல-மாஶ்ரித-நிதா³க⁴ம் .

ஸுக²ய கலயந்த்யசிர-க்ருʼத-குச-நிவேஶனம்ʼ, கா³ட⁴-பரிரம்ப⁴ண-மமோக⁴ம் .. 6..

(பதப்பிரிவு :  க்ரோட³தலம் + ஆஶ்ரித, பரிரம்ப⁴ணம் + அமோக⁴ம்)


விளக்கம் :


காமதேவனின் அம்புகள் தாக்கி நிறைய புண்ணாகியுள்ள, வெப்பமாக உள்ள என் மார்பினை, விரைவில் உன் தனபாரத்தை வைத்து, தவறாமல் பயன்தரும் உன் இறுகத்தழுவலைத்  தந்து சுகப்படவை.

 

க⁴டய மணி-குண்ட³லே ஶ்ரவண-யுக³லே ஸுமுகி², நூபுரமபி ப்ரணய பாத³ம் .

முக²ரய ச மேக²லாம்ʼ ஸரப⁴ஸ-ஸமாக³மே, மோத³ய நிவாரய விஷாத³ம் .. 7..


(பதப்பிரிவு : நூபுரம் + அபி)


விளக்கம் :


அழகிய முகம் கொண்டவளே! இருகாதுகளிலும் மணிகுண்டலங்களை பூட்டு! சிலம்பினை காலில் அணிந்துக்கொள். மேகலையை கிணுகிணுவென்று ஒலியெழுப்பச் செய். ஆர்வத்துடன் அணைப்பதினால் என் துயரத்தை நீக்கி மகிழ்வி.


கர-ஸரஸிஜேன தே பரிமலய வபுரித³ம்ʼ மலயஜ-ரஸேன க்ருʼத-ஸேகம் .

மம முக²ம்ʼ வீடிகா-கு⁴மகு⁴மித-மாகலய, ஶீதலய மானஸ-மஶோகம் .. 8..


(பதப்பிரிவு : கு⁴மகு⁴மிதம் + ஆகலய, மானஸம் + அஶோகம்)


விளக்கம் :


இந்த என்மேனியை உன் தாமரைக்கையால் சந்தனக்கலவை பூசப்பட்டு நறுமணமுள்ளதாகச் செய். என் வாய் வெற்றிலைச் சுருளால் மணக்கும்படி செய். சோகம் நீங்கி மனம் குளிரும்படி செய்.


ஶ்ரீவிஶ்வநாத²-கவி-ப⁴ணித-மக³ஜா-பு⁴வோ, வல்லிகாம்ʼ ப்ரதி வசன-ப்³ருʼந்த³ம் .

கு³ஹ-ப⁴ஜன-பர-ரஸிக-ஜனமனோ-மோத³கம்ʼ, ஜயது பு⁴வி பேஶல-மமந்த³ம் .. 9..


(பதப்பிரிவு : -ப⁴ணிதம் + அக³ஜா, பேஶலம் + அமந்த³ம்)


விளக்கம் :


மலைமகள் மகனான முருகன், வள்ளியை நோக்கிச் சொன்ன நயமான, மென்மையான  சொற்கள், குகனை வழிபட ஆர்வமுள்ள ரசிகர்களின் மனங்களை நிறைய மகிழ்வித்து, உலகில் வெற்றியோடு விளங்கட்டும்.

—-------------------------------------------------------------------------------------------------------------------

சுலோகம் 2:

ஸுதனு விஸ்ருʼஜா(ஆ)ஶஙகாம்ʼ கிம்ʼ காதராஸி மயி ஸ்தி²தே

ஸததமபி மே வல்லீ பி⁴ல்லீதி பா⁴ந்தி கி³ரோ முகே² |

ஹ்ருʼத³ய-ஸத³னே த்வன்யா கன்யா ந வாஸ-முபேயுஷீ

தத³லமியதா வாமம்ʼ காமம்ʼ ப்ரமோத³ய மாமபி ||


சுலோகம் 2 - பதம்பிரித்து:


ஸுதனு விஸ்ருʼஜ ஆஶஙகாம்ʼ கிம்ʼ காதரா அஸி மயி ஸ்தி²தே

ஸததம் அபி மே வல்லீ பி⁴ல்லீ இதி பா⁴ந்தி கி³ரோ முகே² .

ஹ்ருʼத³ய-ஸத³னே து அன்யா கன்யா ந வாஸம்ʼ உபேயுஷீ

தத்³ அலம்ʼ இயதா வாமம்ʼ காமம்ʼ ப்ரமோத³ய மாமபி 


விளக்கமும் குறிப்புகளும் :


அழகிய மேனிபடைத்தவளே ! சந்தேகத்தை விடு. நான் இருக்கும்போது ஏன் அஞ்சுகிறாய் ? என் வாயில் எப்போதும் “வேடப்பெண்ணே, வள்ளி!” என்ற சொற்கள் விளங்குகின்றன. இதயக்கோவிலில் வேறொரு கன்னிகையும் வாசம் செய்யவில்லை. அதனால், இவ்வாறு எதிரிடையாக இருந்தது போதும். எனக்கு மிகுந்த ஆனந்தத்தைக் கொடுப்பாயாக!

  • இது ஹரிணீ  - வரிக்கு 17 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்


சுலோகம் 3:


குவலய-நயனே தவானதா ப்⁴ரூ꞉

ஸுமஶர-கார்முக-த³ண்ட³ ஏவ தஸ்மாத் |

அபி⁴ஹதமுதி³தை꞉ கடாக்ஷ-பா³ணை꞉

அத⁴ர-ஸுதா⁴ஸ்வரஸேன ஜீவயேர்மாம் ||


சுலோகம் 3 - பதம்பிரித்து:


குவலய-நயனே தவ ஆனதா ப்⁴ரூ꞉

ஸுமஶர-கார்முக-த³ண்ட³ ஏவ தஸ்மாத் .

அபி⁴ஹதம்ʼ உதி³தை꞉ கடாக்ஷ-பா³ணை꞉

அத⁴ர-ஸுதா⁴ஸ்வரஸேன ஜீவயே꞉ மாம் .


விளக்கமும் குறிப்புகளும் :


குவளைக்கண்ணியே ! உன் வளைந்த புருவம், மலர்க்கணையோனின் வில்லின் தண்டு தான். அதிலிருந்து உதித்த கடைக்கண்பார்வைகள் என்ற பாணங்களால் வீழ்த்தப்பட்ட என்னை, இதழமுதச் சுவையால் வாழ்விக்க வேண்டும்.

  • இது புஷ்பிதாக்³ரா  - வரிக்கு 12,13 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்


சுலோகம் 4:


ப்ராணாதீ⁴ஶ்வரி வீக்ஷஸே த்வ-மத⁴ரா(ஆ)லோகாபி⁴லாஷா-த⁴ரே

விஶ்வாஸானுவிதா⁴யகே மயி பரம்ʼ ஶ்வாஸான் ஸ்ருʼஜஸ்யாயதான் |

ப்ராப்தா யத் பருஷத்வமப்யபருஷே(அ)னங்க³-ப்ரஸங்கோ³த்³யதே

யுக்தம்ʼ த்வா-மனுஸ்ருʼத்ய வச்மி தனுயா அங்கா³னுஷங்கோ³த்³யமம் ||


சுலோகம் 4 - பதம்பிரித்து:


ப்ராண அதீ⁴ஶ்வரி வீக்ஷஸே த்வம்ʼ அத⁴ரா ஆலோக அபி⁴லாஷா-த⁴ரே

விஶ்வாஸ அனுவிதா⁴யகே மயி பரம்ʼ ஶ்வாஸான் ஸ்ருʼஜஸி ஆயதான் .

ப்ராப்தா யத் பருஷத்வம்ʼ அபி அபருஷே அனங்க³-ப்ரஸங்கோ³த்³யதே

யுக்தம்ʼ த்வாம்ʼ அனுஸ்ருʼத்ய வச்மி தனுயா அங்கா³னுஷங்க³ உத்³யமம்


விளக்கமும் குறிப்புகளும் :


ன்னுயிர்த்தலைவியே! நான் உன்னைப்பார்க்க விரும்புகையில் நீ கீழே பார்க்கிறாய். நான் விசுவாசத்தை உண்டாக்கமுயல்கிறேன், நீ  நீளமான சுவாசத்தை பெருக்குகிறாய். நான் கனிந்திருக்கும் போது நீ கடினமான மனத்துடன் இருக்கிறாய். அதனால், நான் அநங்கனின் சம்பந்தத்துடன் இருக்கும் பொது, நீ அங்கசங்கத்தைத் தா. அதுவே  பொருத்தமாக இருக்கும்.


  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்

  • வார்த்தை விளையாட்டு செய்து முருகன் வள்ளியின் ஆலிங்கனத்தை வேண்டுகிறார். தான் செய்வதற்கு மாறாக அவள் செய்யவிரும்புவதை (ஆலோக , அதரா , விசுவாசம் , சுவாசம்,  (கனிந்த) அபருஷ , (கடின) பருஷ என்ற எதிர்மறைச்சொற்கள் மூலமாக) கூறி, அநங்க, அங்க என்று எதிர்மறையாக தோன்றும் சொற்கள் மூலமாக, காமதேவனின் வசப்பட்ட தன்னை அணைக்க வேண்டும் என்கிறார்.


சுலோகம் 5:


கேயம்ʼ நாத² மஹேந்த்³ரஜே ஶப³ரஜா கிம்ʼ நாம வல்லீ ப்ரியே

கிம்ʼ கார்யம்ʼ தவ ஸேவனம்ʼ கிமு ப²லம்ʼ ஸாபத்ன்ய-மித்யூஹ்யதே .|

தத்கிம்ʼ தே(அ)பி⁴மதம்ʼ கத²ம்ʼ ப⁴வத³பி⁴ப்ராயோ நிரஸ்யோ ஹடா²த்

ஏவம்ʼ ப்ரஶ்ன-ஸது³த்தரேஷு சதுர꞉ ஷாண்மாதுர꞉ பாது ந꞉ ||


விஷ்ணுகுமாரிகள் அமிர்தவல்லிக்கும் சுந்தரவல்லிக்கும், அவர்கள் தவத்தைக்கண்டு  முருகன் அவர்களை மணப்பேன் என்று வாக்கு தருதல் 



சுலோகம் 5 - பதம்பிரித்து:

கா இயம்ʼ நாத² ? மஹேந்த்³ரஜே, ஶப³ரஜா! கிம்ʼ நாம? வல்லீ ப்ரியே!

கிம்ʼ கார்யம் ?  தவ ஸேவனம். கிமு ப²லம் ? ஸாபத்ன்யம்ʼ இதி ஊஹ்யதே .

தத்கிம்ʼ தே அபி⁴மதம்?  கத²ம்ʼ ப⁴வத்³ அபி⁴ப்ராயோ நிரஸ்யோ ஹடா²த்?

ஏவம்ʼ ப்ரஶ்ன-ஸது³த்தரேஷு சதுர꞉ ஷாண்மாதுர꞉ பாது ந꞉


விளக்கமும் குறிப்புகளும் :


“நாதா , இவள் யார் “

“மஹேந்திரன் மகளே, இவள் வேடர்மகள்”

“இவள் பெயர் என்ன ?”

“அன்பே, வள்ளி (இவள் பெயர் )”

“என்ன வேலையாக வந்திருக்கிறாள் ?”

“உனக்கு பணிவிடை செய்ய”

“என்ன பயனை உத்தேசித்து(வந்துள்ளாள்)?”

“சக்களத்திப் பதவி என்றெண்ணுகிறேன், உன் விருப்பம் என்ன ?”

“உங்கள் அபிப்ராயத்தை நான் எப்படி பிடிவாதமாக தள்ளுவது?”

இவ்வாறு, (தேவசேனையின்) கேள்விகளுக்கு தகுந்த விடைகளைத் தருவதில் வல்லவனான, தாய்மார் அறுவரை உடைய முருகன் நம்மைக் காக்கட்டும் 

  • இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்

  • வள்ளியை மணந்து கந்தகிரிக்கு அழைத்துச்சென்ற முருகன், தெய்வானையிடம் சமத்காரமாக அவளை அறிமுகப்படுத்துவதாக அமைந்த, கவியின் கற்பனை இது. 


இதி ஶ்ரீவிஶ்வநாத²-கவி-க்ருʼதௌ ஶ்ரீகீ³த-கா³ங்கே³ய-காவ்யே மானினீ-வர்ணனே சதுர-ஷாண்மாதுரோ நாம த³ஶமஸ்ஸர்க³꞉ .


(இதுவே விசுவநாத கவியின் படைப்பாகிய கீத காங்கேய காவியத்தில், “சமர்த்தனான ஷண்முகன்” என்ற பத்தாம்  சர்கம்)




Comments

Popular posts from this blog

முன்னுரை

அஷ்டபதீ³ - 1 மூலமும் பொருளும்

அஷ்டபதீ³ - 24 - மூலமும் பொருளும்