அஷ்டபதீ³ - 15 - மூலமும் பொருளும்
சுலோகம் 1: அத்ராந்தரே தை³வத-ராஜ-புத்ரீம்ʼ ஶ்யாமாமுதூ³டா⁴ம்ʼ ஶஶி-மௌலி-ஸூனு꞉ | வல்லீ-மபா⁴ணீத் ப்ரதிபாலயந்தீம்ʼ ஸ்ம்ருʼத்வா ஜகா³மேதி ஸகீ² ஸஶோகம் || சுலோகம் 1 - பதம்பிரித்து: அத்ராந்தரே தை³வத-ராஜ-புத்ரீம்ʼ ஶ்யாமாம்ʼ உதூ³டா⁴ம்ʼ ஶஶி-மௌலி-ஸூனு꞉ . வல்லீம்ʼ அபா⁴ணீத் ப்ரதிபாலயந்தீம்ʼ ஸ்ம்ருʼத்வா ஜகா³ம இதி ஸகீ² ஸஶோகம் விளக்கமும் குறிப்புகளும் : இதற்கிடையில், காத்துக்கொண்டிருந்த வள்ளியிடம், தேவராஜனின் மகளான, தன் இளம்மனைவி தெய்வானையை நினைத்துக்கொண்டு, பிறைசூடியின் மகனான முருகன் சென்றுவிட்டான் என்று சோகத்துடன் தோழி கூறினாள். இது உபஜாதி - வரிக்கு 11 அக்ஷரங்கள் கொண்ட சந்தம். சுலோகம் 2: நிஶம்ய வசனம்ʼ வல்லீ வயஸ்யா-வத³ன-ச்யுதம் | ஸபா³ஷ்பம்ʼ விலலாபோச்சை꞉ த்³ருʼஷ்ட்வைவ கு³ஹ-சேஷ்டிதம் || சுலோகம் 1 - பதம்பிரித்து: நிஶம்ய வசனம்ʼ வல்லீ வயஸ்யா-வத³ன-ச்யுதம் . ஸபா³ஷ்பம்ʼ விலலாப உச்சை꞉ த்³ருʼஷ்ட்வா இவ கு³ஹ-சேஷ்டிதம் . விளக்கமும் குறிப்புகளும் : தோழியின் வாயிலிரிருந்து உதிர்ந்த சொற்களைக்கேட்டு, வள்ளி, குகனின் செய்கையை நேரில் பார்த்தது போல, கண்ணீருடன் குரலெழுப்பி விலாபம் செய்தாள். இது அனுஷ்டுப்⁴ - வரிக்கு 8 அ...